மாலை 5மணி என்றது ஞாபகத்திற்கு வந்ததும் பறந்தடித்து ஒருமாதிரி 6மணிக்கு ரெயின் எடுத்துட்டன். எனது அவசரத்திற்கு ரெயின் ஓடுவதாகத் தெரியவில்லை. எனக்கு பாரிசில் நடந்த 38வது இலக்கியச்சந்திப்பு நினைவுதான் மெத்ரோ ஓடுற வேகத்தைவிட என் மனதில ஒடிக் கொண்டிருக்குது. ஆரும் மெழுகுதிரி கொழுத்திறதுக்கிடையில போய்விட வேணும் எண்ட அவசரம். 38வது இலக்கியச் சந்திப்பில ஓவியர் வாசுகனின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த வாசுகனின் ஓவியங்களை பார்த்துக் கொண்டிருக்கும்போது வரண்ட ஓவிய ஞானிகளான எங்களோட நின்ற கற்சுறா ஒரு ஓவியத்தைக்காட்டி சொன்னார் நாங்கள் இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்டதால சும்மா எல்லாம் தெரிஞ்ச ஞானிகள் மாதிரி நடிக்கிறம்.
ஒரு சாதாரண தமிழர் யாரும் இந்த மண்டபத்திற்குள் வந்து இந்த ஓவியத்தைப் பார்த்திருந்தால் நிச்சயமாக மெழுகுதிரி கொழுத்தி கும்பிட்டுக் கொண்டிருந்திருப்பார் என்று. ஆனால் அந்த ஓவியம் ஒரு யுத்தக் குறியீடாக இருப்பதை பின்பு வாசுகன் எமக்குப் புலப்படுத்தினார்.