அரங்கியல் சஞ்சிகையும் - நினைவுகளும்
ஓவியர் - VP. வாசுகன் 30.11.2025
|
“உடல்” சஞ்சிகையின் இலட்ச்சனை - சின்னம், உடல் எனும் முகப்பு எழுத்தின் தனிதுவ வடிவம்,(Logo) அதன் வடிவமைப்பின் ஒழுங்கும் அழகும், சஞ்சிகையின் முகப்புகளில் மலர்ந்த ஓவியங்களின் வெளிப்பாடு - இவை அனைத்தும் அரங்கியலை மையமாகக் கொண்ட ஒரு நீண்ட ஆவணப் பயணத்தின் சாட்சிகள். இணையாக எனது தந்தையின் வயதை ஒத்த அரியநாயகம் அண்ணாவுடன் நட்ப்பும்.
எம். அரியநாயகம் - Aryanayagam Manuelpillai அரியநாயகம் அண்ணா தொலைபேசியில் அழைத்து, "அப்பு ஒருக்கா சந்திக்க வேணும்" என்றார். பாரிசின் தமிழ் நெஞ்சம் துடிக்கும் "லாச்சப்பல்" La Chapelle வர்த்தக பகுதியில் "மக்கள் கடை" பலசரக்கு கடைக்கு முன்னால் சந்தித்தோம். அரங்கியல் சார் காலாண்டு இதழை வெளிக்கொண்டு வர வேண்டும் என கூறியவாறே தமிழர் தோல்வாத்தியக்கருவி பற்றிய நூலொன்றை கையளித்தார். 'அண்ணா இதெல்லாம் இருந்து பேசவேண்டிய காரியம்' என்றேன். 'ம் சரி வா' என கூறிக்கொண்டே எதிர்த்தால் போலிருந்த "தேன்சுரபி" தேநீர்க்கடைக்குள் நுழைந்தோம். தமிழர்களின் பண்டைய, சமகாலத்தில் பேசப்படாத ஒரு தோல் வாத்திய கருவியை நூலில் சுட்டிக்காட்டி இதுதான் உடல் வாத்தியம் என்று கூறினார். தவில் வித்துவான்கள் நிறைந்த ஊரில் பிறந்த என்னை, இரு முகம் கொண்ட, இரண்டு பக்கமும் தடியால் அடிக்கும் 'உடல்' வாத்தியமும் ஏனைய தோல்வாத்தியங்களும் புதிய தேடலுக்குள்ளாக்கின. உடல் - பேசாப்பொருளை பறை சாற்றுவோம், பறைவோம். அதுமட்டுமல்ல அரங்காற்றுகைக்கு உடல் அரசியல் மூலதனம்தானே. உடல் என்பது ஒரு பெரும் பாத்திரம் ஆதலின் அரங்கியல் சஞ்சிகைக்கு உடல் என பெயரிட்டுளேன். உரை ஆற்றுகையில் உடல் சஞ்சிகையின் முகப்பு எப்படி இருக்க வேண்டும், அது சொல்லவேண்டிய மொழி, அது தாங்கவேண்டிய நிழல்படங்கள், எழுத்து, இலச்சினை, வடிவமைப்பு, பதிப்பு எனப் பல்வேறு பாதைகளைக் கடந்தோம். அவர் மனக்கனவை எனக்குள் கடத்தினார். |
ஆதலில் - சஞ்சிகையின் உடல் என்ற முகப்பு தலைப்பு எழுத்து, இலட்ச்சினை ஆகியவற்றை விரைவில் வரைந்து தருமாறும் கேட்டுக்கொண்டார். முன்னட்டையில் உனது ஓவியமொன்றும் வரவேண்டும் - "ஒலிப்பா ஒரு ஓவியம் தா" என்றார் . சுடச்சுட - ஆவி பறக்க - ரீ அருந்திய வண்ணம் உரையாடல் வழிந்தது. நாடகம், சிறுகதை, கவிதை, ஓவியம் குறும்படம், சினிமா, அரசியல் கட்டுரைகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் என பல ஈழத்தமிழரின் படைப்புலகம் 'லாச்சப்பல்' எனும் குட்டி யாழ்ப்பாணத்தில் பிறந்தது வரலாறு. போராட்டத்துடன் நான்கு தசாப்தங்கள் கடந்தோடி விட்டன. ஆவணப்படுத்தப்படாத ஆவணங்கள் ஏராளம். அதில் ஒன்று தான் உடல். எண்பதுகளின் ஆரம்பங்களின் ஈழத்தமிழரின் புலப்பெயர்வில் முதல் அலையில் பிரான்சில் குடியேறிய குடிகளில் அரியமண்ணா ஒரு சாட்ச்சி. அவரிடமே புலம் சார் கதைகள் ஏராளம். அந்தி சாய பாரிஸ் புகையிரதம் "ஆறேயார்" RER தரிப்பிடம் நோக்கி பேசிக்கொண்டே நடந்தோம். போகும் வழியில் நமக்கு தெரிந்தவர்களுக்கும் கைகுலுக்கினோம். ஸவா? ஸவா? ஸவா.. 'Ça va?' (பிரெஞ்சு பேச்சு நடையில் அல்லது பாரிஸின் வெளிநாட்டவரின் வட்டாரவழக்கில் நலம் விசாரித்தபடி) அவர் பாரிஸின் வடக்கு நோக்க நான் தெற்குநோக்கிய புகையிரத்ததில் ஏறினேன்.
உற்சாகத்துடன் கடந்த நாட்களில் "உடல்" முகப்பு எழுத்தை (Logo) முப்பது தடவைக்கு மேலாக வரைந்தேன். தோல்வாத்திய நூலைவாசித்தேன், சஞ்சிகையின் இலட்ச்சணையாக (Logo) வாத்தியத்தை பத்து தடவைக்கு மேலாக வரைந்தேன். ஓரளவு திருப்தியுடன் கிடப்பில் போட்டேன். அண்ணாவின் ஆய்க்கினையின் நிமிர்த்தம் மீண்டும் மீண்டும் வரைந்தேன் - சிலவற்றை தெரிவுசெய்து மின்னஞ்சலூடாக அனுப்பினேன். இருவருக்குமான பல தடவை தொலைபேசி அழைப்பில் ஆரோக்கியமான சச்சரவு சண்டைக்கும் குறைவில்லை. "முகப்பு ஓவியம் ஒலிப்பாக இருக்க வேண்டும்," என்ற அவரது கோரிக்கைக்கிணங்க, நாடகம் சார் - இசையை முன்மொழிந்த ஓவியங்கள் மூன்றை மின்னஞ்சலில் இணைத்தேன். அதில் ஒன்றை தெரிவு செய்தார் உடலுக்காக.
காலம் கரைந்தோட கனி கனித்தல் போல் உடல் சஞ்சிகை பிறந்தது மகிழ்ச்சி. கோடை 2011ல் குட்டி யாழ்ப்பாணத்தில் மீண்டும் சந்தித்தோம். இரண்டு பிரதிகளை எனக்கு கையளித்தார். பூரிப்புடன் பக்கங்களை புரட்டினேன். அண்ணா எதோ பறைந்துகொண்டிருந்தார் காதில் வாங்குவதுபோல் நூலின் வடிவமைப்பை ஆராய்ந்தேன். முன்பக்கத்தை மீண்டும் மீண்டும் மீண்டும் திருப்பினேன். அவரும் மகிழ்ச்சியில் - நானும்.
தொடர்ந்து பிரசுரமான சஞ்சிகைகளின் முகப்பின் பெரும்பாலானவற்றில் எனது ஓவியங்களையே உரிமையோடும் பொறுப்போடும் பிரசுரித்தார். ஈழத்துப் படைப்பாளிகளின் படைப்புகள் வெளிவர வேண்டும் என்ற அக்கறையுடனும், தேவை கருதியும் அவர் பயணித்தார். அதற்கு இணையாகத் தமிழகத்துப் படைப்பாளிகளின் படைப்புகளும் உள்வாங்கினார். இதழினுள் பிரசுரமான காத்திரமான கட்டுரைகளை அவ்வாறே தேடித்தேடிப் பெற்றார் - அச்சிட்டார். அவரின் களப்பணியில் அனுபவித்த கஷ்டங்களுக்கும் நஷ்ட்டங்களுக்கும் அவரே சாட்சி. அவரின் இடைவிடாத பணியும், அரங்கியல் இருப்பின் அவசியமும் புகலிட வாழ்வும் ஆவணப்படுத்தப்பட வேண்டியவை. அவரது 80வது அகவையோடு 60 ஆண்டு கால கலைப் பயண அனுபவங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மலரும் இம்மலர் "கலையாழி" - காலத்தின் பொக்கிசம். கலைஞனை வாழும்போதே வாழ்த்துவதே, சக கலைஞர்களோடு கூடிய சமூகம் வளர்ச்சி எய்தும்.
ஓவியம் மற்றும் கலைப் பயணங்கள் சார்ந்த கட்டுரைகளை எழுதுவதும், அவற்றைப் பிரசுரிப்பதும் எனது ஓவியப் பயணத்தோடு ஒன்றிணைந்தவை. அந்த வகையில், 'உடலில்' இதழில் வெளியான கட்டுரைகளில் ஈழத்து ஓவியர்களான - ஓவியர் ஆசை இராசையா, ஓவியை ஜெயலட்சுமி சத்யேந்திரா ஆகியோரைப் பற்றிய ஆக்கங்கள் மிகக் குறிப்பிடத்தக்கவை. வர்ண புகைப்படங்களுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு அவை பிரசுரமாகின. நூலின் வடிவமைப்பு மற்றும் வர்ணத் தேர்வுகள் குறித்து அரியமண்ணாவும் நானும் பலமுறை விவாதித்துச் செம்மைப்படுத்துவது உண்டு. அரங்கியலுக்காகவே பிரத்தியேகமாகத் தொடங்கிய அச்சஞ்சிகை, ஓவியம், இசை போன்ற ஏனைய கலைகளையும் தன்னுள் அரவணைத்துக் கொள்ளத் தவறவில்லை. கோவிட் உள்ளிருப்புக் காலம் அரியமண்ணாவின் வேகத்தை முடக்கவில்லை. இக்கட்டான உள்ளிருப்புக் காலத்திலும் டிஜிட்டல் (மின்னணு) வடிவில் மூன்று இதழ்கள் வெளியாகின. அதன் பின் தற்காலிக இடைவெளி ஏற்பட்டிருந்தாலும், தனது கலைப் பயணத்தின் "வைரவிழாவிற்கு" 2026 பின்னர் உடல் சஞ்சிகை மீண்டும் தொடரும் என்ற நற்செய்தியை கடந்த வாரம் அண்ணா என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
சிறுவர்களுக்கான அரங்கியல் சிறப்புப் பயிற்சிப் பட்டறை மற்றும் அரங்கியலுக்கென ஒரு பிரத்தியேகக் கிளைச்சங்கம் உருவாக்க வேண்டும் எனும் கனவோடு அவர் என்னை அணுகினார். அந்த அமைப்பிற்கான சின்னமும் சான்றிதழும் எனது கைவண்ணத்தில் உருவாக வேண்டும் என்பது அவரது விருப்பம். 'எழுத்து ஒரு பாதமாக உருப்பெறுமா?' எனச் சிந்தித்த தருணத்தில், 'த' என்ற எழுத்தைப் பாதம் போல வடிவமைத்து அதனையே சின்னமாக்கினேன். அந்தப் பாதங்கள் சான்றிதழின் விளிம்புகளில் அணிவகுக்க, அதன் நடுவே அரங்கின் ஆன்மாவைச் சுமந்த தகவல்கள் பதியப்பட்டன. கலை குறித்த எங்கள் உரையாடல்கள் முயற்சிகளாகவும், முயற்சிகள் மீண்டும் உரையாடல்களாகவும் பரிணமித்த காலங்கள் அவை. எங்களது பல்வேறு கலைப் பயணங்களின் ஊடே, இந்தச் சான்றிதழ் உருவாக்கம் ஒரு முக்கியமான மைல்கல்.
அரங்கியல் பயணத்தில், மரபுசார் அரங்கில் மற்றும் துணிவுடன் பல பரீட்சார்த்த முயற்சிகள் ஊடாகவும், போர்ச் சூழலுக்கு அரங்கியல் ரீதியாக எதிர்வினையாற்றும் முன்னெடுப்புகளாகவும் மேற்கொண்டவர் அரியமண்ணா. பரீட்சார்த்த முயற்சிகளாகத் தொடங்கிய அவரது பல செயற்பாடுகள், காலப்போக்கில் அரங்கின் புகலிட மொழியின் ஆதாரங்களாயின. அடுத்த தலைமுறையுடன் கொண்ட நட்பையும், அவர்களுடனான இயக்கத்தையுமே தனது செயற்பாட்டின் மையக்கோடாக அவர் கருதினார். இளம் குரல்களுக்குச் செவிசாய்த்தார்; அவர்களோடு இணைந்து பயணித்தார். ஈழத்தமிழர் புலம்பெயர் வாழ்வின் மூன்றாவது தலைமுறையுடன் அவர் கையாண்ட அணுகுமுறை தனித்துவம். கலந்துரையாடல்கள், பயிற்சிப் பட்டறைகள், பகிர்வுகள் என இவை அனைத்தும் அவருக்குக் கைவந்த கலை. அரங்கியல் என்பது மேடையில் நிகழ்வது மட்டுமல்ல, அது தலைமுறைகளுக்கிடையே பாலமாகும் ஒரு உயிர்த்தோழமையைப் பேணுவது என்பதையும் அவர் நிரூபித்தார்.
நாடகத்தில் கல்வித் தகைமை கொண்ட அரவிந்த் அப்பாத்துரை, நான் மற்றும் அரியமண்ணா ஆகிய மூவருக்கும் இடையே உருவான நட்பு- அந்த நட்பின் உரையாடல்களிலிருந்து அரங்க நிகழ்விற்க்கான எண்ணம் உதித்தது மெதுவாக. வார்த்தைகள் எண்ணங்களாகி, எண்ணங்கள் இயக்கமாகி, அந்த இயக்கம் பயிற்சி அரங்கியலாக உருவெடுத்து மேடையில். ஈழத்து, தமிழக கலைஞ்ஞர்களுக்கும் இடையேயான ஒருகிழமையாக நீடித்த ஒரு கூட்டு அரங்கியல் பட்டறையை அரியமண்ணா ஒழுங்கமைத்தார். அதன் நீட்சியில் பரிஸில் நடந்தேறிய மிகக் காத்திரமான நிகழ்வே “சக்தி கூத்து”. 24-25-26 ஜூன் 2015. நாடக இயக்குனர் பிரசன்னா ராமசாமியுடன் இணைந்த கூட்டு முயற்சியில், நடிகை ரோகினி ரகுவரன், பரதநாட்டியக் கலைஞர் ரேவதி குமார், தோலிசைக் கலைஞர் நெல்லை மணிகண்டன் ஆகியோரின் சக்தி - மேடையை அதிரச் செய்தன. அவரவர் உடல் மொழியும் குரலும், தோலிசையும் அரங்கத்தை உயிர்ப்புடன் நிரப்பின. "We will walk for Peace - நாம் அமைதிக்காக நடப்போம்.” பாதங்களால் அச்சுப்பதித்து 2009ல் நான் வரைந்த நீண்ட ஓவியத்தை காவிக்கொண்டு மூன்றாம் தலைமுறைச் சிறார்கள் அரங்கை ஆட்கொண்டனர். அவர்கள் தமது உடல்களை ஓவியத்தால் மறைத்து பாதங்கள் மட்டுமே தெரியும்படி எமது இறந்தகாலத்தை தாங்கி அவர்களது எதிர்காலத்தை நினைத்து அரங்கில் அணிவகுத்தனர். பறை இசை - பழமை வாய்ந்த கதை பேசும் பிரஞ்சு சுவரையும் கூரையையும் அதிரவைக்க மேடைக்கு நான் மெதுவாக ஒளியூட்டினேன். ரோகினியின் குரலும் ரேவதியின் பரதமும் வலுச்சேர்க்க - அரங்கம் அமைதியான தியானத்தில். பஞ்சபூதங்களை பிரதிபலிக்கும் கித்தானில் வரைந்த ஓவியங்களால் அரங்கை நான் வடிவமைத்திருந்தேன். ஈழத்து இரண்டாம் மூன்றாம் தலைமுறையினரின் நடிப்பு பிரமாதம். சக்தி கூத்து - அன்றைய மேடையில் ஒரு நிகழ்வாக மட்டுமல்ல - தலைமுறைகள், கலைகள், கனவுகள் சந்தித்த ஒரு உயிருள்ள சங்கமம்.
|
"உலக நாடக விழா" 24 - 25 நவம்பர் 2016 - பன்னாட்டு நாடகக் கலைஞர்களை வரவழைத்து, பாரிஸில் ஒரே அரங்கில் ஒருங்கிணைத்து ஒரு நாடக விழாவை நடத்துவது சாதாரண முயற்சியல்ல - அது அரங்கியல் துணிச்சலின் உச்சம். அரங்கியலில் உச்சத்தில் இயங்கும் கலைஞர்களோடும் தொடர்பைப் பேணுபவராகவும் இயங்கினார் - அதற்கு நாடக விழாவே சாட்சி. அந்தச் சாதனையின் தொடர்ச்சியாக, லண்டனில் 07 நவம்பர் 2018, இரண்டாவது முறையாக உலக நாடக விழாவை நிகழ்த்தியதும் அரியமண்ணாவின் அசாத்தியத் திறமைதான். அவ்வரங்கின் உள்மண்டபத்தின் இரு பக்கச் சுவர்களும், இரண்டு மீட்டர் உயரம் கொண்ட கோட்டோவியங்களால் உயிர்பெற்றன. அரங்கியல் ஆளுமைமிக்க வீரமணி, சொர்ணலிங்கம், ஷேக்ஸ்பியர் போன்ற உலகறிந்த கீழைத்தேய - மேலைத்தேய நாடக ஆளுமைகளின் உருவங்களை -Portraits வரைந்து தருமாறு அவர் என்னிடம் கேட்டார். அவ்வேண்டுகோளின் விளைவாக, கோடுகளின் வழியே ஆளுமைகளின் ஆன்மா உருவெடுத்தது - அரங்கை உயிர்பித்தன. அவ்விரண்டு நிகழ்வுகளின் வெற்றியைத் தொடர்ந்து, மதுரை - தென்னிந்தியாவில் பல சவால்களுக்கு மத்தியிலும் மிகப்பிரம்மாண்டமாகத் திட்டமிடப்பட்டுக்கொண்டிருந்த மூன்றாவது நிகழ்வைக் கோவிட் பெருந்தொற்று முடக்கியது. நான்காவதாக ஜெர்மனியில் நடாத்துவதாக உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டன. மார்ச் 2020 தொடங்கிய கோவிட் உள்ளிருப்பு இரண்டு வருடங்கள் நீடித்தத்தில் "உலக நாடக விழா" முடக்கமானது. அரியமண்ணாவும் 80து அகவையை எட்டும் காலமாகையில் அவரின் சிந்தனையின் வேகத்திற்கு உடலாரோக்கியம் ஒத்துழைக்காமையும் - உலக பொருளாதார வீழ்ச்சியின் பாதிப்புகளும் அவரது பல அரங்கியல் கனவுகள் நனவாகவில்லை.
கிரேக்க ஆவணப்படத் தயாரிப்பாளர் ஃபிலிப் தியோ Filippos Theos, நவம்பர் 2009 ம் ஆண்டு, என் ஓவியப் பயணத்தோடு அகதிவாழ்வின் எதிரொலியாக - எனது கைகளின் இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு குறும்படமாக உருவாக்கினார். Ateliers Varan Parisஅணுசரணையில். அந்த ஆவணப்படத்திற்கு ஒரு நடனக் கலைஞர் தேவைப்பட, பலரை அணுகினேன் - கைகூடவில்லை. 'லாச்சப்பல்' பகுதியில் தற்செயலாக நடந்து வரும் ஒரு தருணத்தில், அரியமண்ணாவைச் சந்தித்தேன். அன்புடன் “தம்பி, எப்படி இருக்கிறாய்? ஓவியப் பயணம் எப்படிப் போகிறது?” என்றார். ஆவணப்படத்தின் நிலைப்பாட்டை கூறினேன். மறு கணமே, எந்தத் தயக்கமுமின்றி, “அதை நான் ஒழுங்கு செய்து தருகிறேன்,” எனக்கூறினார். கூறியது போலவே, திரு. நல்லையா வாசுகி குடும்பத்தினரை அணுகினார். அவர்களது மகள், நடனக் கலைஞ்ஞை அபிநயா நடனமாட, அதனை நான் பார்த்து வரையும் காட்சியைப் படமாக்கினோம். அம்மாலைப் பொழுதில், அவர்கள் அனைவரும் ஓவியப் பயிற்சிப் பட்டறையில் அளவளாவினோம். கலை, உரையாடல், சிரிப்புடன் உணவருந்தினோம். அகதிவாழ்வு வேறொரு மொழியில் கலையாய். கால ஓட்டத்தில், சமாந்தரமாக, இவரது மூத்த மகன் இக்னாஸ் (தளபதி) உடனான நட்பும் வளர கலையும் ஒரு காரணம். தளபதி புதிதாகத் திறந்த உணவகத்தின் Sep 2005 - Ignas Cofee - Paris 9eme சுவரில் என் ஓவியங்கள் காட்சிப்பொருளாக. மேலும், தளபதி அவருக்கு நெருங்கிய நண்பரின் இத்தாலிய உணவகத்தில், புகழ்பெற்ற வெனிஸ் நகரத்தின் ரியால்டோ பாலத்தை Pont du Rialto மூன்றுக்கு ஒன்றரை மீட்டர் அளவில் வரையும்படி தொடர்பை ஏற்படுத்தினார். கணிசமான வருமானத்துடன், மிக நீண்ட காலப் பொறுமையுடன் அந்த ஓவியத்தை வரைந்தேன். பாரிஸ் நகரிலேயே நீளமான வீதியாகக் கருதப்படும் ரூ சென் ஒனோரே Rue Saint-Honoré வீதியில், பாரிஸின் மையப்பகுதியில் Châtelet அமைந்துள்ள அந்த உணவகத்தின் நடுச் சுவரில் பார்வையாளர்களை மௌனமாக வரவேற்க அந்த ஓவியம் காட்சிக்கு. ஒரு கட்டத்தில், அரியமண்ணாவின் மகனே தளபதி என்பதை அறிந்தபோது வியப்புடன், எங்களுக்கிடையேயான நட்பு பாடசாலைக் கால நட்பைப் போல இன்றும் தொடர்கிறது - முக்கோணமாய். அரியநாயகம் அண்ணா - அரங்கியல் அரசியலில் அனுபவமும் உண்டு. சச்சரவில் - நான் சோர்வுற்ற காலமது. அக்காலம், 'உடல்' சஞ்சிகை மும்முரமாக வளர்ந்துகொண்டிருந்த காலமுமாகும். அரியநாயகம் அண்ணா என்னிடம், “தம்பி, உனது ஓவியப் பயணம் பற்றி 'உடலில்' ஆவணப்படுத்தப்பட வேண்டும்,” என்றார். அண்ணா, இப்ப வேண்டாம் என நான் சங்கடமாக விலகினேன். அவர் ஒருவித கோபச்சிரிப்போடு, காலத்தின் எடையுடன் பதிலளித்தார் : “உதுக்கெல்லாம் கலங்காத - நீ யோசிக்காமல் எழுது, அத நானெல்லோ பதிப்பிக்கிறது" என துணிச்சலுடன். அதன் தொடர்ச்சியாக, கலைப் பயணம் குறித்த சில கேள்விகளை அவர் அனுப்பினார். அவற்றிற்கான என் பதில்கள், சில ஓவியங்களுடன் 'உடலில்' வண்ணமயமாய்ப் பிரசுரமாயின. பயமின்றி உண்மையைப் பேசும் அந்தத் துணிச்சலும் செயலும் அரியநாயகம் அண்ணாவின் தனித்தன்மை. அவரது எண்பது ஆண்டுகால அனுபவப் பயணம் சொல்லும் செய்திகள், இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாய் நிற்கின்றன. |
அரியநாயகம் அண்ணா, தனது படைப்புலகில் எவ்வளவு ஆழ்ந்த அக்கறையுடன் ஈடுபடுகிறாரோ, அதே அளவு பிற படைப்பாளிகளின் இயக்கங்களிலும் பங்குகொள்ளத் தவறாதவர். அச்செயல் அவரது கலைவாழ்வில் இயல்பான ஒன்று. 2004 ம் ஆண்டிலிருந்து சமகாலம் வரையிலான என் ஓவியக் காண்பியங்களுக்கு கணிசமான வரை சமூகமளித்து, பாராட்டிச் செல்வார். சில வேளைகளில், அன்பின் சின்னமாகச் சிறு தொகையையும் அளிப்பார் - அது அதன் பெறுமதியை விட பெரும் உற்சாகத்தைத் தரும். அரங்கியல் என்ற ஒரே வட்டத்திற்குள் சிக்கியவர் அல்ல. ஓவியம், இசை, நடனம், எழுத்து எனப் பல கலைவடிவங்களையும் உள்வாங்கினார். பல கோணங்களில் விரிந்த அந்தக் கலைப் பயணம், அவரை ஒரு கலைஞராக மட்டுமல்ல - கலைக்கு உறவான மனிதராகவும் - எம்முடன் நட்புடன்.
இணைப்பு -
English - summary
"The Theatre Journal and Memories,"The story of the journal Udal (Body) is, for me, a long documentary journey centered on theatre. It began in "La Chapelle"—the heart of the Tamil diaspora in Paris—where I met Ariyanayagam Manuelpillai. He shared his vision for a quarterly theatrical journal, handed me a book on ancient Tamil leather instruments, and explained why he chose the name Udal. To him, the body is the primary political capital of performance; it is a vessel for untold stories.
The Creative CollaborationI took on the task of bringing his vision to life through design. I remember sketching the "Udal" logo and the percussion instrument emblem dozens of times, fueled by steamed tea and intense discussions. Our relationship was a mix of healthy creative friction and deep mutual respect. I designed the covers using my paintings, often focusing on masks and theatrical faces to mirror the "soul" of the stage. Over the years, our collaboration expanded beyond the journal:
Major Stage ProductionsMy art eventually moved from the pages of the journal to the physical stage. I am particularly proud of our work on "Shakti Koothu" (2015) in Paris. I designed the stage using canvases representing the five elements and handled the lighting. It was a powerful moment where my long-form painting, "We Will Walk for Peace," was carried across the stage by third-generation diaspora children, bridging the gap between our past and their future. I also contributed to his World Theatre Festivals in Paris (2016) and London (2018). For these, I drew large-scale portraits of theatrical giants like Shakespeare and Veeramani to watch over the halls—bringing an ancestral presence to these international gatherings. A Lasting LegacyBeyond the professional, our lives intertwined in unexpected ways. I spent years painting murals for a restaurant in Paris, only to later realize the owner was Ariyanayagam’s son, Ignas. This "triangular friendship" remains a cornerstone of my life in France. Ariyanayagam Anna has been a witness to four decades of our struggle and migration. Even through the isolation of COVID-19, he didn't slow down, producing digital editions of the journal. Now, at 80 years old, he continues to be a guiding light. He recently shared with me that after his "Diamond Jubilee" in 2026, Udal will return. To me, he is more than a collaborator; he is the bridge between generations, a man who proved that theatre isn't just what happens on a stage—it is the living friendship that sustains a community in exile.
Visual Artist - VP. Vasuhan 30.11.2025 www.vasuhan.com/aryanayagam-2026 |
Française - résumé
« La revue de théâtre et mes souvenirs »
L'histoire de la revue Udal (le Corps) est, pour moi, un long voyage documentaire centré sur le théâtre. Tout a commencé à « La Chapelle » — le cœur de la diaspora tamoule à Paris — où j'ai rencontré Ariyanayagam Manuelpillai. Il m'a fait part de sa vision d'une revue théâtrale trimestrielle, m'a remis un livre sur les anciens instruments de percussion tamouls en cuir, et m'a expliqué pourquoi il avait choisi le nom Udal. Pour lui, le corps est le principal capital politique de la performance ; c'est un réceptacle pour les histoires non dites.
Une collaboration créativeJ'ai pris sur moi de donner vie à sa vision à travers le design. Je me souviens avoir esquissé le logo « Udal » et l'emblème de l'instrument de percussion des dizaines de fois, nourri par des thés fumants et des discussions intenses. Notre relation était un mélange de friction créative saine et de profond respect mutuel. J'ai conçu les couvertures en utilisant mes peintures, me concentrant souvent sur les masques et les visages théâtraux pour refléter l'âme de la scène.
Au fil des ans, notre collaboration s'est étendue au-delà de la revue :
Productions scéniques majeuresMon art est finalement passé des pages de la revue à la scène physique. Je suis particulièrement fier de notre travail sur « Shakti Koothu » (2015) à Paris. J'ai conçu la scénographie en utilisant des toiles représentant les cinq éléments et j'ai assuré les lumières. Ce fut un moment puissant où ma fresque, « Nous marcherons pour la paix », a été portée à travers la scène par des enfants de la troisième génération de la diaspora, comblant le fossé entre notre passé et leur avenir.
J'ai également contribué à ses Festivals mondiaux du théâtre à Paris (2016) et à Londres (2018). Pour ces occasions, j'ai réalisé des portraits à grande échelle de géants du théâtre comme Shakespeare et Veeramani pour veiller sur les salles — apportant une présence ancestrale à ces rassemblements internationaux. Un héritage durableAu-delà du cadre professionnel, nos vies se sont entrelacées de manière inattendue. J'ai passé des années à peindre des peintures murales pour un restaurant à Paris, pour réaliser plus tard que le propriétaire était le fils d'Ariyanayagam, Ignas. Cette « amitié triangulaire » reste un pilier de ma vie en France. Ariyanayagam Anna a été le témoin de quatre décennies de notre lutte et de notre migration. Même à travers l'isolement du COVID-19, il ne s'est pas arrêté, produisant des éditions numériques de la revue. Aujourd'hui, à 80 ans, il continue d'être un guide. Il m'a récemment confié qu'après son « Jubilé de diamant » en 2026, la revue Udal reprendra.
Pour moi, il est plus qu'un collaborateur ; il est le pont entre les générations, un homme qui a prouvé que le théâtre n'est pas seulement ce qui se passe sur une scène — c'est l'amitié vivante qui soutient une communauté en exil.
VP. Vasuhan - Artiste visuel
30.11.2025
www.vasuhan.com/aryanayagam-2026
Une collaboration créativeJ'ai pris sur moi de donner vie à sa vision à travers le design. Je me souviens avoir esquissé le logo « Udal » et l'emblème de l'instrument de percussion des dizaines de fois, nourri par des thés fumants et des discussions intenses. Notre relation était un mélange de friction créative saine et de profond respect mutuel. J'ai conçu les couvertures en utilisant mes peintures, me concentrant souvent sur les masques et les visages théâtraux pour refléter l'âme de la scène.
Au fil des ans, notre collaboration s'est étendue au-delà de la revue :
- Documentation visuelle : J'ai écrit et mis en page des dossiers dans Udal sur d'éminents artistes de l'Eezham, tels qu'Asai Rasiah et Jayalakshmi Satyendra, veillant à ce que notre histoire visuelle soit préservée par la couleur et l'impression.
- L'identité du futur : Lorsqu'il a rêvé d'un atelier de théâtre pour enfants, j'ai conçu un logo unique où la lettre tamoule « த » (Tha) prenait la forme d'un pied — symbolisant les premiers pas d'une nouvelle génération.
Productions scéniques majeuresMon art est finalement passé des pages de la revue à la scène physique. Je suis particulièrement fier de notre travail sur « Shakti Koothu » (2015) à Paris. J'ai conçu la scénographie en utilisant des toiles représentant les cinq éléments et j'ai assuré les lumières. Ce fut un moment puissant où ma fresque, « Nous marcherons pour la paix », a été portée à travers la scène par des enfants de la troisième génération de la diaspora, comblant le fossé entre notre passé et leur avenir.
J'ai également contribué à ses Festivals mondiaux du théâtre à Paris (2016) et à Londres (2018). Pour ces occasions, j'ai réalisé des portraits à grande échelle de géants du théâtre comme Shakespeare et Veeramani pour veiller sur les salles — apportant une présence ancestrale à ces rassemblements internationaux. Un héritage durableAu-delà du cadre professionnel, nos vies se sont entrelacées de manière inattendue. J'ai passé des années à peindre des peintures murales pour un restaurant à Paris, pour réaliser plus tard que le propriétaire était le fils d'Ariyanayagam, Ignas. Cette « amitié triangulaire » reste un pilier de ma vie en France. Ariyanayagam Anna a été le témoin de quatre décennies de notre lutte et de notre migration. Même à travers l'isolement du COVID-19, il ne s'est pas arrêté, produisant des éditions numériques de la revue. Aujourd'hui, à 80 ans, il continue d'être un guide. Il m'a récemment confié qu'après son « Jubilé de diamant » en 2026, la revue Udal reprendra.
Pour moi, il est plus qu'un collaborateur ; il est le pont entre les générations, un homme qui a prouvé que le théâtre n'est pas seulement ce qui se passe sur une scène — c'est l'amitié vivante qui soutient une communauté en exil.
VP. Vasuhan - Artiste visuel
30.11.2025
www.vasuhan.com/aryanayagam-2026