BIG bang
கலையின் ஒரு வடிவம் - அழித்தலும் ஆக்குதலும்
"கலை என்பது வெறும் முடிவுப்பொருள் அல்ல End Product , அது ஒரு செயல்முறை Process "
|
ஐரோப்பிய நாடுகளில் தற்பொழுது விளம்பரப் பதாகைகளை, சிவப்பு நிறத்தில் 'பிக் பங் Big Bang' காண்பியம் அலங்கரிக்கின்றன. பல்வேறு கலை முயற்சிகளும், பரீட்சார்த்த படைப்புகளும், ஆவணப்படுத்தல்களும், எதிர்வினையாற்றல்களும் அரங்கேறும் இவ்வுலகில் கலை தன் பங்கை ஏற்பதற்கு தவறவில்லை. இவ்வகையில் 'லு சொந்ர் பொம்பிடு பாரிஸில் Le Centre Pompidou Paris' - நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாபெரும் கண்காட்சியை 'பிக் பங்' என பெயரிட்டுள்ளனர்.
பிக் பங் - மாபெரும் அழுத்தம் அல்லது மாபெரும் மோதல் எனலாம். "அழித்தலும் ஆக்குதலும்" - ராட்சத கற்கள் மோதி அதன் ஈர்ப்பு விசையாலும் இரசாயன மாற்றங்களினாலும் பெரும் கல் நடுவேயும் அதனை சுற்றிய மற்றயவை ஒழுங்குமுறையில் சூரிய குடும்பம் பிறந்து சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு. புதியதொரு படைப்பை உருவாக்கியதுபோல் பிக் பங் காண்பியம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது சிறப்பு. 'கத்ரின் க்ரேனியே Catherine Grenier' என்பவரால் தொகுக்கப்பட்ட "பிக் பங்" காண்பியம் - கலை இயக்கங்களை (சர்ரியலிசம் Surrealism, கியூபிசம் Cubism) தனித்தனியாகப் பார்க்கும் முறையிலிருந்து மாற்றின. பதிலாக, ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்து -20ம் நூற்றாண்டு என்பது உடைத்தல் அல்லது அழித்தல் என்ற செயற்பாட்டால் வரையறுக்கிறது - என்பது ஒரு வாதம். நவீன கலை பிறக்க வேண்டுமானால், கலைஞர்கள் முதலில் கடந்த கால மரபுகளை கருத்தில்கொண்டு படைப்பின் அழகு, அதன் வடிவம், கட்டமைப்பு போன்றவற்றை அழிக்க வேண்டும் என்று இக்காண்ப்பியம் வாதிடுதல் - மையக்கரு. "ஒவ்வொரு ஆக்கச் செயல்பாடும் முதலில் ஒரு அழித்தல் செயலாகும்." பாப்லோ பிக்காசோ - Every act of creation is first an act of destruction. - Pablo Picasso
|
காண்பியத்தில் 200 கலைஞர்களின் 500க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல படைப்புகள் தனியார் சொத்தாகவும் Private collection, அருங்காட்சியகம் மற்றும் காண்பியக் கூடங்கலிருந்தது சேகரிக்கப்பட்டவையே. அவை ஒவ்வொன்றையும் வெவ்வேறு நாடுகளில் இருந்து ஒன்றுதிரட்டி அதற்கான பாதுகாப்பு, காப்புறுதி, களஞ்சியம், போக்குவரத்து போன்ற நடைமுறை சிக்கல்களைத் தாண்டி பிரபலமான படைப்புகளை ஒரே நேரத்தில் காட்சிப்படுத்துவது மாபெரும் காரியமே. சென்ற நூற்றாண்டுகளின் படைப்பாளிகளின் படைப்புகள் மட்டுமல்லாமல் சமகாலத்து படைப்பாளிகளின் படைப்புகள் சிலவும் காண்பியத்தில். வியப்புக்குள்ளாக்கும் வகையில் - நுழைவுச்சீட்டை பெறுவதற்காக வரிசையில் நின்ற பொழுது வரிசையின் நீளம் அதில் நின்ற மக்கள் பேசிய வெவ்வேறு மொழி, வெவ்வேறு தேசங்களில் இருந்து வருகை தந்த மக்களின் ஆர்வம் நவீன கலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதையே வெளிக்காட்டுகிறது - பிக் பங்.
மண்டபத்தினுள் நுழையும் பொழுதே 'பிக் பங்'கிற்கு அர்த்தம் தெரிவிப்பது போன்று ஒரு சிறு நிகழ்வு - பிக் பங் காண்பிய பட்டியல் Catalogue வாசலின் இடதுபுறத்திலிருந்து, அதை எடுப்பதா அல்லது நிலத்தில் தென்பட்ட, தெளிக்கப்பட்டிருந்த சிவப்பு வர்ணத்தைப் புகைப்படம் பிடிப்பதா என ஒரு கணம் ஊகிக்கும் பொழுதே - கூடத்தின் பணியாளர் ஒருவர் விரைவாக துப்புரவு செய்ய ஆரம்பிக்க முன்னரே விரைந்து நானும் புகைப்படம் பிடித்தேன். அது சிவப்பு வர்ணமல்ல மனித இரத்தம் என்பதை அப்போழுதே புரிந்து கொண்டேன். வெளிநாட்டு நகர வாழ்வியலில் கட்டடக்காட்டுக்குள் வசிக்கும் நமக்கு வறட்சியான வெப்ப காலநிலை, வறட்சியான குளிர் காரணமாகவும் மூக்கிலிருந்து இரத்தம் வடிவது வழமையான ஒன்றாக ஒன்றித்து விட்டது. காலநிலை மாற்றத்தால் மூக்குச்சளி வருவதுபோல். இங்கு நடந்த சம்பவம் இதன் வெளிப்பாடே. அவ்விடயம் கண்காட்சியில் உட்படுத்தப்படாத ஒரு சிறு சம்பவம்.
"பிக் பேங்" காட்சி சர்ச்சைக்குரியதாகிறது, ஏனெனில் அது ஒரு ஒழுங்கற்ற முறையை கையாளுகிறது. 1910ன் ஒரு சிற்பத்தையும், 1990ன் ஒரு காணொளி (வீடியோ) படைப்பையும் ஒரே தளத்தில் காட்சிப்படுத்துகிறது அழகியலோடு. ஒரு சிறுமியும் அவளது முப்பாட்டனும் வீதியில் தற்செயலாக சந்திக்கும்பொழுது இரு வேறுபட்ட கருத்துகளை பாசத்தோடு பேசிக்கொள்வது போலாகிறது அச்செயல்முறை. இங்கு உணர்வுகளும் உறவுகளுமே பிரதானம் . ஒரு கலைப் படைப்பை வெறும் வரலாற்றுப் பாடமாகப் பார்க்காமல், கலையின் ஒரு தொடர்ச்சியான மாற்றமாகப் பார்க்க, பார்வையாளர்களை அழைக்கிறது - புதுமையுடன். இது உலகத்தின் முடிவைப் பற்றியது அல்ல, மாறாக, விவாதம் கலந்த பிறப்பைப் பற்றியது இப்புதிய பூவுலகில்.

மனிதனிலும் மூன்று மடங்கு உயரமுள்ள கண்ணைப் பறிக்கும் வர்ணத்திலான ஓவியத்துடனான பார்வையுடன் ஆரம்பித்தோம் - டானியல் ரிஸ்ட Daniel Richter - Duueh 2003. வலது புற சுவரில் பிக்காசோவின் Pablo Picasso - கடற்கரையில் பெண்கள் Femmes devant la mer 1956 இடது புறம் பேகனின் Francis Bacon அறையில் மூன்று உருவங்கள் Three figures in a room என வருணிப்பதற்கு வார்த்தைகளை வெல்லுகின்றன படைப்புகள்.
ஒரு சிற்பத்தின் அழகும் வலிமையும் படைக்கும் பொருளைக் கொண்டு அமைவது ஒருபுறம் - அதனை காட்சிப்படுத்த - ஒழுங்கமைப்பு முறை இன்னொருபுறம். இவ்வகையில் அடுத்தடுத்து இரண்டு மீற்றர் உயரமுள்ள சில மனித முழு உருவச்சிலைகள் வரிசையில் போட்டிக்கு என்னை பார் என்றன - திமிருடன். அவ்வரிசையில் இறுதியில் இரண்டு அடி உயரமுள்ள உலோகத்திலான சிலைக்கு கறுப்பு துணியிலான ஆடை. இடுப்புக்கு மேற்பகுதி அசையும் பொறிமுறையோடு ஒரு சிறு மேடையில் காலை நீட்டி அமர்ந்த வண்ணம். ஒரு அடி உயரமுள்ள உலோகத்திலான மணியின் விளிம்பு அதன் நெற்றிக்கு முன்னால் கட்டித் தொங்கியபடி. தொங்க விட்டிருப்பதை ஒரு பெண் ரசித்துக் கொண்டிருப்பதை நான் ரசித்துக் கொண்டிருந்தேன். திடீரென அப்பெண் திடுக்கிட்டு போவதையும் பின் அப்பெண் சிரிப்பதையும் கண்டு சிரித்தேன் - எனது புகைப்பட கருவியும் இயங்கியது மின்னல் வேகத்தில். ஒவ்வொரு 10 நிமிடத்திற்கு ஒரு முறை அந்த இரும்புச்சிலை - மனித இயந்திரம் தன் மண்டையால் மணியை அடிக்கும் வண்ணம் ஆக்கப்பட்டிருந்தது ஒரு சிறு மேடையில் . இச்செயற்ப்பாட்டு முறை காரணமாக சிலையின் நெற்றியில் ஒரு சிறு பள்ளத்தையும் காணலாம். அங்கு உள்ள படைப்புகளில் அது ஒன்று மட்டுமே மாறுபடும் படைப்பாக கருதலாம். ஒரு கணம் 'டாடாயிச' இயக்கத்தின் இயக்கத்தை ஞாபகப்படுத்திற்று . பிக் பேங் காண்பிய தொகுப்பு நூலை 1916 - சூரிச்சில் Zurich ல் உருவாகிய 'டாடாலிச Dadaism பாணியில் அமைத்துள்ளனர். டாடாயிச கலைஞர்களின் முக்கிய நோக்கமாக முன்னோக்கி நகர்வதற்கு முன் அதாவது ஒன்றை உருவாக்குவதற்கு முன் அங்கு இருப்பவற்றை அழித்த பின்னரே அங்கிருந்து புதிய பாணியில் ஆக்குகின்றனர். அதாவது பழைய உலகை அழித்து புதிய உலகை உருவாக்குதல். அதன் மூலம் மனித சக்தியை திசை திருப்புதல். |
'சொந்ர் பொம்பிடுவின்' அதிபரான 'புருனோ ரசின் Bruno Racine' கூறுகையில் இந்த நூற்றாண்டில் நவீன கலையை வெளிக்காட்டுதலின் நோக்கமே பிக் பங். இது முதன்முறையாக மிகப்பிரமாண்டமாக சகல விதமான படைப்புகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஒழுங்கு செய்யப்பட்ட காண்பியமாகும். இங்கு காண்பியமாகுபவை 20ம் நூற்றாண்டில் சேகரிக்கப்பட்ட ஓவியம், சிற்பம், புகைப்படம், சினிமா, காணொளி, கட்டிடக்கலை, அலங்கார வேலை, எழுத்துக்கள் போன்று இன்னும் பல. அதிபரின் முக்கிய நோக்கமாக அங்குள்ள கலைப்படைப்புகளை நிச்சயம் உள்வாங்கி அல்லது விளங்கிக்கொள்ளல் வேண்டும். ஏனெனில் 20ம் நூற்றாண்டுக்கு முன் நடைபெற்ற கலைப்படைப்புகளை அப்போதே புரிந்துகொள்ள முடியும்.
'கியூபிச Cubism (திண்மவியல்)' பாணியின் தந்தை என கருதப்படும் ஜோஜ் பிராக் Georges Braque 1882 - 1963 அறியப்பட்டாலும் பிக்காஸோவே கியூபிசத்தை மக்கள் மயப்படுத்தினார். தொடர்ந்து கியூபிச பாணியை பல படைப்பாளிகள் பின்பற்றியுள்ளனர். அதனை பின்னர் டாடாயிஸ்டுகள் Dadaists சற்று மறுசீரமைத்தும், மாற்றியும், சிதைத்தும் (Geometric fragmentation) அமைத்தனர். அந்த உருக்குலைந்த வடிவங்களுக்குள் (Distorted forms) ஒரு அர்த்தத்தைத் தேடுவதே சுவாரஸ்யமான சவால்..

பிக் பங் காண்பியத்தின் முக்கிய எட்டு தலைப்புகளுடன் பிரிக்கப்பட்டு அதன்கீழ் பல உப தலைப்புகளாக பல படைப்புகள் பிரிக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. அவைக்கான விளக்கவுரைகள் ஆங்காங்கே சுவரில் எழுதப்பட்டிருந்தன. ஒரு கனதியான காண்பியமென்பதால் இரண்டு மூன்று தடவைகள் தரிசிப்பதன் மூலமே புரிதலுக்குள்ளாவோம்.
எட்டு தலைப்புக்களாவன
- Destruction: அழித்தல் / சிதைத்தல்
- Construction: கட்டுமானம், நிர்மாணித்தல்
- Archaism: தொன்மைவாதம்
- Sex: பாலினம்
- War: போர்
- Subversion: கவிழ்ப்பு / நிலைகுலைத்தல்
- Melancholy: சோகம்
- Re enchantment: மந்திரத்தால் கட்டுதல், வசீகரிக்கும் சக்தி
படைப்புகள் அழிக்கப்பட்ட போதிலும்.அழிவுகளில் எஞ்சியவை மீள் உருவாக்கப்படுகின்றன. ஆகவே பழையவை மூலமே புதியவை ஆக்கப்படுகின்றனவோ. காண்பியம் - பூமியை ஒரே நாளில் வலம் வருவதோடு, ஒன்பது கிரகங்களையும் சுற்றி வருவது போன்ற உணர்வை தந்தது.
பாரிஸில் இயங்கும் முன்னணி இதழ்களான Le Monde, Libération மற்றும் பிற சர்வதேச கலை இதழ்கள் இக்காண்பியம் பற்றிப் பல்வேறு கோணங்களில் விவாதித்தன, அவை, வேறு கலை சஞ்சிகைகளையும் கலை விமர்சகர்களின் கருத்துகளையும் முன்வைத்தன - பல கலை விமர்சகர்கள் சென்டர் பொம்பிடூவின் இந்தத் துணிச்சலான புரட்சிகரமான முயற்சியைப் பாராட்டினர். அருங்காட்சியகம் என்பது ஒரு தேக்கமடைந்த குளம் அல்ல, அது காடுகள் மலைகளூடு ஓடிக்கொண்டிருக்கும் ஆறு போன்று இயங்கவேண்டும் - இந்த 'பிக் பேங்' அப்படியே. சில பழமைவாத விமர்சகர்கள் இதைக் கடுமையாக எதிர்த்தனர் - கலைப் படைப்புகளை அவற்றின் கால வரிசைப்படி (Chronology) பார்க்காமல், வெவ்வேறு காலக்கட்டத்தைச் சேர்ந்த படைப்புகளை ஒன்றாகக் கலப்பது பார்வையாளர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் வாதிட்டனர். அழிவு Destruction என்பதை ஒரு ஆக்கபூர்வமான வாதிடும் கருத்தியலை முன்வைத்தது பிக் பங் ஆனால் எதிர்கருத்து - கலையை உருவாக்குவதற்கு அதை முதலில் சிதைக்க வேண்டுமா?" என்ற தத்துவ ரீதியான கேள்வி அப்போது பிரான்ஸ் கலை உலகில் பரவலாகப் பேசப்பட்டதும் உண்மை. விமர்சகர்கள் கருத்து வேறுபட்டாலும், பொதுமக்கள் மத்தியில் இது பெரும் வெற்றி பெற்ற காண்பியம். குறிப்பாக புதிய தலைமுறையினரிடத்தும், நவீன கலை ஆர்வலர்களிடத்தும் பெரும்பேசுபொருளாக மாறின. காண்பியம் முன்வைத்த பிரதான கருப்பொருள் - சமகாலத்தோடு பிணைந்ததாகவும் ஏதிர்காலம் பற்றி பறைவதாகவும் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் குரல்கள் எழுந்தன.

மிலேனியம் ஆண்டு என பேசப்பட்ட 2000ம் ஆண்டின் முற்பகுதி கலை உலகில் மிகவும் பரபரப்பான ஒரு காலகட்டம். பத்தாயிரம் ஆண்டுகளாக தொழில்நுட்பத்தின் அச்சாணியாக இயங்கிய சக்கரத்திற்கு சற்று ஓய்வு கிடைத்தாற்போல மிலேனியத்தின் ஆரம்பத்தில் மக்கள் பாவனைக்கு வந்த 'தரவு சேமிப்பு அட்டை'(மெமரி காட்) Memory Card சக்கரத்தின் தேவையை பின்தள்ளிற்று. பிக் பங்கில் அதன் தாக்கத்தை உணர்ந்தோம். அதே காலகட்டத்தில் நம் கைகளுக்கு கிடைத்த 'திறன்பேசியின்' Smartphone வருகை பெரும் மாற்றத்தை ஏற்படுத்திற்று. நவீன கலைக்கும், சமகால கலைக்கும் இடையே ஒரு பெரும் உரையாடல் நடந்த காலம். 1980, 90-களில் இராணுவத்தின் பிடியில் இருந்த பல தொழில்நுட்பங்கள், உலகமயமாக்கல் மற்றும் கிழக்கு மேற்கு வர்த்தகப் போட்டியால் 2000-களின் தொடக்கத்தில் மக்கள் பயன்பாட்டிற்குப் பீறிட்டு கிளம்பின. அந்த வரிசையில் இன்னும் பல விந்தைகள் விரைவில் மக்கள்மயமாகும். ஒருபுறம் பாரிஸில் ஏனைய அருங்காட்சியகங்கள் புதுப்பிக்கப்பட்டன, மறுபுறம் பாரிஸில் உள்ள பழமைவாத கலைக்கூடங்களிலும் தாக்கத்தை கிளப்பின "பிக் பங்" போன்ற புதிய சிந்தனை முறைகள்.
காண்பியம் - தலைப்பு Big Bang பெருவெடிப்பு
"20ஆம் நூற்றாண்டு கலையில் அழிவும் ஆக்கமும்"
காலம் - 15 ஜூன் 2005 – 3 ஏப்ரல் 2006
"20ஆம் நூற்றாண்டு கலையில் அழிவும் ஆக்கமும்"
காலம் - 15 ஜூன் 2005 – 3 ஏப்ரல் 2006
"ஒரு முழுமையான கல்லின் பகுதிகளைச் செதுக்கி அழிக்கும்போதே ஒர் அழகிய சிற்பம் பிறக்கிறது"
BIG BANG
கலையின் ஒரு வடிவம் - அழித்தலும் ஆக்குதலும்
எரிமலை சஞ்சிகை - இலக்கிய மாத இதழ்
Feb 2006 VP. வாசுகன்
www.vasuhan.com
கலையின் ஒரு வடிவம் - அழித்தலும் ஆக்குதலும்
எரிமலை சஞ்சிகை - இலக்கிய மாத இதழ்
Feb 2006 VP. வாசுகன்
www.vasuhan.com