ஆரம்பக்கல்வியின் நினைவுகள்திருமதி இந்திராதேவி குணபாலன் 13.09.1949 - 23.09.2025பாலர் பாடசாலை ஆசிரியையுடன் 2022ல் மிக நீண்ட இடைவெளியின் பின் முகம் பார்த்த நேரலை உரையாடல் மீண்டும் உயிரூட்டியது - உறைந்திருந்த பாலர் நினைவுகளை. நேற்று எமது ஆசிரியரின் இழப்பு விழுதுகள் பரப்பிய ஆலமரமொன்று பட்டுப்போவது போல...
சமூக வலைத்தளங்கள் திறன்பேசியின் Smart phone திரையில் நிரம்பி வழியும் காலம் இது. வாசிப்புப் பழக்கம் முன்னிலும் அதிகரித்திருப்பதை கணிப்புகள் காட்டுகின்றன. ஊடகங்களின் வடிவம் மாறிய வண்ணம் - வாசிப்புகள் இலகுவாகி வருகின்றன. ஒரு நாற்காலியில் அமர்ந்த வண்ணம் உலகின் இறந்த, நிகழ், எதிர்கால செய்திகளை சுடச்சுட அறிவதற்கான சக்திவாய்ந்த கருவி நம் கையில். சில புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். நூலகங்களின் கிடைக்கப்பெற முடியாத அரிய நூல்களை - புதிய பிரதி அல்லது இரண்டாம் பிரதி அல்லது பாவித்த நூல்களையோ திறன்பேசி ஊடாக மின்னணு வணிகத்தில் E-commerce நுகர முடியும். சில தினங்களிலேயே நூல் - நம் வீட்டு வாசலில் பல்தேசிய மக்கள் பயணிக்கும் பாரிஸ் உள்ளூர் புகையிரதப் போக்குவரத்துகள் பல அனுபவங்களை தந்து விடுகின்றன. வழமையாக தொழிலுக்கு புகையிரதத்தில் பயணிக்கையில் கைத்தொலைபேசியை நோண்டுவது வழக்கம். சமூக வலைத்தளங்கள் அளித்த பெரும் கொடைகளில் பிரதானமானதொன்று - மிலேனியம் ஆண்டிற்கு முன் படித்த கல்லூரி நண்பர்களை ஒன்றிணைத்த பெரும் செயல். யாழ்ப்பாணத்து கல்லூரி மாணவர் குழாம் ஒன்று - 250 மாணவர்கள் ஒன்றிணைந்தோம். ஒரே தரத்தில் கல்விகற்ற - இலங்கை முழுவதுமா 1500மாணவர்கள் ஒன்றிணைந்தோம். இவை தவிர வெறும் பல மாணவர் குழாம்களும் சமூக வலைப்பின்னலில் அங்குமிங்குமாக. பிறந்தநாள், இறப்பு, கல்லூரிச் செய்தி எனப்பல குவிந்த வண்ணம் அந்த சமூகவலைத்தளங்களில். பல தேவையற்ற காஞ்சல்களும் வந்து குவியும். அவற்றை தவிர்த்துக் கொண்டு அல்லது மீண்டும் திரையில் ஒளிராதவாறு தடை செய்துவிட்டு வாசிப்பைத் தொடரலாம். |
|
யாழ் மாணவர் குழாமின் தளத்தில் கறுப்பு வெள்ளை புகைப்படத்துடன் ஒரு துக்க செய்தி கண்டு மனம் வருந்திய வண்ணம் வேலைக்குச் சென்றேன். ஆரம்பக்கல்வியை பெற்ற இந்திரா ரீச்சரின் இழப்பு கவலையை அளித்தது. இருப்பினும் ஆசிரியரின் அர்ப்பணிப்பும் சேவையும் - மிகச் சிறந்த மாணவர்களை உருவாக்கி நல்லதொரு வாழ்க்கையை வாழ்ந்து முடித்தார் என்ற திருப்தியையும் அதே சமயம். எமக்குள், எனக்குள் அழியாத பல பாலர் கால நினைவுகளை விட்டுச் சென்றார். மனதில் கவலை சூழ்ந்திருப்பினும் சாதகமான பல பாலர் நினைவுகள் மீண்டெழுகின்றன....
ஆசிரியர் பணி என்பது ஒரு தொழில் அல்ல, அது ஓர் அர்ப்பணிப்பு - சேவை. ஒரு சில ஆசிரியர்களால் மட்டுமே அவ்வுணர்வை எமக்கு தந்துவிட முடியும். எமது தொடக்கக் கல்விக்கூடமென்ற கருவறையில் ஆசிரியையான இந்திரா ரீச்சரிடம் அவ்வர்ப்பணிப்பை - சேவையை உணர்ந்தோம். அன்பு, அரவணைப்பு, அக்கறை போன்ற பல பக்குவ பண்புகள் அவரின் விசேட குணங்கள். சிறுபிராயத்தில் முதல் முறை வீட்டை பிரிந்து கல்வி கற்க சென்ற கணங்கள் - அழுகையும், பயமும் தொத்திக்கொண்ட போதிலும் ஆசிரியரின் காருண்யம் - என் போன்ற குட்டிப்பிள்ளைகளை ஆசுவாசப்படுத்தின. அவ்வாறு பெற்ற திடமே குழுமமாக அன்னநடை போட்டு வீடு திரும்ப வழிகோலின. அந்த இளம் வெயிலில் புலுனிகள் போல் விடுதிரும்புகையில் அளவெட்டியின் நிலக்காட்சியை ரசித்ததில் பூவரசு மரத்து புலுனிக்குஞ்சுகளை விட பரவசமானோம். வழியில் மாங்காய், கொய்யா, விளாம்பழம், நெல்லிக்காய் புடுங்குவோம் - வீட்டில பேச்சும் விழும். மரப்பொந்தில் கிளிக்குஞ்சுகள் கீய்ச்சலிடும் போட்டிக்கு நாமும் எதிர்கூச்சல் போடுவோம். மண்ணொழுங்கைகளில் சாரைப்பாம்பு கடந்து சென்ற ரேகை விழும், அதனை நாம் கடக்கையில் - இது புடையன் பாம்பு, நாகபாம்பு, கொம்பறிமுக்கன், பறநாகம் என ஒருவருக்கொருவர் - விலங்கியல் வித்தகர்கள் போல் வாதிடுவோம். கிழுவன் கத்தியால் வேலியின் உச்சியில் நெளியும் பச்சைப்பாம்பு எமது ஒலி அதிர்வுக்கு எள்ளிநகையாடும் - பாவம் பாம்புகளுக்கு காதில்லைதானே. பாதையின் குறுக்கே முருங்கை மரத்திலிருந்து மசுக்குட்டிகள் நூலில் தொங்கும். பார்த்தாலே உடம்பெல்லாம் அரிக்கும். அதனை வேட்டையாட செண்பக பறவை கொப்புக்கு கொப்பு தாவும் - பாவம் பறக்க தெரியாத பட்சி. சங்கடப்படலையில் மட்பானை தண்ணி குடித்தோம். நீல வானம் விரிந்திருக்க பனையோலை வேலிகள் நடுவே விரியும் மண் ஒழுங்கையில் எமது நடை - ஆவுரஞ்சிக்கல் எமக்கு பாதையின் அளவுகோல்... |
அமைப்புமுறைக் கல்வித்திட்டத்தை அல்லது கட்டமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை எம்மிடத்தில் திணிக்கவோ ஆணையிடவோ ஆசிரியை முயன்றதில்லை. மாறாக ஓவியம், பாடல்கள், கிராமிய நடனங்கள் போன்ற கலையம்சங்கள் ஊடாக தொடக்க கல்வியை நமக்குள் விதைத்தார். அன்பே அவரின் மொழி - ஆசிரியரின் ஒரு பார்வையிலேயே நாம் அமைதியானோம். பொதுவெளிகளில் எம்மை சந்திக்கும் பொழுதுகளில் ஒருபொழுதும் கல்விசார் கேள்விகளை வினாவி எம்மை சங்கடப்படுத்த மாட்டார். சிலதுளி அன்புச்சொற்களை பகிர்வார். எமது முதுகில் தொடுதலோடு - அவரது மொழியாடல் அன்புடன் கடந்து செல்லும்.
கல்வித்தகமை உள்ள ஒரு சில ஆசிரியர்களும், பல்கலைக்கழக மாணவர்களும் எமது கல்விக்கூடத்திற்கு சமூகமளித்ததுண்டு. சில வேளைகளில் அவர்களும் நமக்கு இந்திரா ஆசிரியையுடன் இணைந்து கற்பித்ததுண்டு. அக்கையாளுமுறை ஒரு ஆசிரியரின் ஒரு குறுகிய சிந்தனைப் போக்குக்குள் அகப்படாமல் பல சிந்தனைகளை திறந்த பார்வையில் உள்வாங்க எமக்கு வழிகாட்டின. இந்திரா ஆசிரியையின் திறந்த சிந்தனைப் போக்கு, மாணவர்களின் வளர்ச்சிப்பாதையை முன்னோக்கி சிந்தித்ததுமே அதன் காரணங்கள். இவற்றையெல்லாம் சிறுவராகிய நாம் மேலோட்டமாகவே உள்வாங்கினோம், ஆனால் தற்போது சிந்திக்கும் பொழுதே அதன் காத்திரத்தை ஆழமாய் உணர்கிறோம். இக்கட்டுரையை எழுதுவதற்கும், தமிழில் தொடர் பயிற்சியை வைத்திருப்பதற்கும் அங்கே பெற்ற முதற்கல்வியே அத்திவாரம்.
அ, ஆ, இ என ஒவ்வொரு உயிரெழுத்துக்கும் ஒரு சொல் அதற்கான விளக்கப்படங்களுடனான புத்தகங்கள் நிறைந்த சிறு ராக்கி வகுப்பின் ஓரத்தில். எனது வீட்டிலிருந்த ராக்கியில், பெரியவர்களின் நூல்களுக்கு பின்னர் பார்த்த சிறுவர்களுக்கான சிறு நூலகம் போலவே உணர்ந்தோம். தொடக்க பள்ளியின் இறுதி ஆண்டான 1981ல் ஞாயிறு 31 மே மாதம் இரவு தீக்கிரையான யாழ் நூலகம் எல்லோர் மனதிலும் இடியாய் விழுந்தது. இலங்கை வரலாற்றின் இருண்ட இரவு அது - அறிவுப் படுகொலை. தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகம் - 97 000க்கு மேலான நூல்கள், ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் போன்று மிக முக்கிய ஆவணங்கள் பல கருகிச்சாம்பலாகி கருமேகங்களுடன் கலந்தன. சென்ற ஆண்டு 2024, பொது வெளி மேடையொன்றில் தற்போதைய இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நூலக எரிப்பின் பின்புலச்சதி பற்றியும், நூலகம் இலங்கை தமிழரின் அடையாளமெனவும், இலங்கையின் பொக்கிஷமெனவும் குறிப்பிட்டார். மக்களின் வலியும் வேதனையும் புரிந்தும் ஆழம் அறியாத சிறார்களாக பள்ளி சென்றோம். வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்தபின் சென்ற பல நூலகங்கள், வாசிப்பின் தேடலின் மூலமே யாழ் நூலகத்தின் கனதி உணர முடிகிறது. 1933ல் - கே. எம். செல்லப்பா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட நூலகத்திற்கு அன்றிலிருந்து இன்றுவரை அப்துல் கலாம் (2012) போன்ற பல கல்விமான்கள் விஜயம் செய்துள்ளனர்.
அவரது வீட்டில் ஒரு சில சிறார்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பக்கல்வி தொடர்ந்து அயல் வீடொன்றின் விறாந்தையிலும் சிலகாலம். தொடர்ந்து ஆசிரியரின் வீட்டின் பின்னால் அமைந்த வீட்டுத் தோட்டத்தின் நடுவே புதிதாக அமைக்கப்பட்ட சீமெந்து கொட்டகையில் தொடர்ந்தோம். நாட்கள் புரண்டோட காலத்தின் நினைவுகளும் காட்சிகளும் அழியாத நினைவுகளாக இன்றும் எம்மனதில். பின்னிய காலங்களில் மாணவர்களும் அதிகமானார்கள் பாலர் கல்வி தகமைகளும் மெருகூட்டப்பட்டு சீமெந்துக்கொட்டகையும் பாலர் பாடசாலைக்குரிய அந்தஸ்தை தனதாக்கி - அளவெட்டி கிராமத்தின் அடையாளமானது பிற்காலத்தில். வகுப்பறையை சூழ்ந்த வேப்பமரம், இலுப்பை மரம், புதிதாக நடப்பட்ட செவ்வரத்தை, வாழை மரங்கள் இதமான காற்றை எப்போது எமக்கும் இலவசமாக வழங்கின. அக்காற்றோடு கலந்த கல்வியின் வாசனை - இன்றும் நம் நெஞ்சில் இதமாக...

நேசறி Nursery காலத்தில் கலை விழாக்களை மக்கள் பார்வையிடும் நோக்குடன் அளவெட்டி - சீனன்கலட்டி ஞானோதய வித்தியாசாலை, வாசிகசாலை - சனசமூக நிலையம் போன்ற பொது மேடைகளில் நடாத்தினார். அக்கிராமத்து மக்கள் சிறார்கள் மீதான விழிப்புணர்வுகளை செழுமைப்படுத்தின. அதுபோல் சிறுவர்களாகிய நாம் நேசறி வளாகத்தைத் தாண்டி மக்களுடன் ஐக்கியமாக உதவின அவ்வாறான விழாக்கள். காவடி நடனம், ஆடல், பாடல் என சிறார்கள் ஆகிய எமது நிகழ்வுகள் கிராமத்து மக்களை மகிழ்வித்ததோடு நம்மையும் பெருமைப்படுத்தியதில் ஐயமில்லை. அந்நிகழ்வுகளுக்கான பயிற்சியும் முயற்சியும் அரங்கேற்றமும் எம்முள் ஒளிந்திருந்த பயம், கூச்சம், நடுக்கம் எம்மை விட்டு அகல வழிகோலின. எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் "சேப்பியா களரில்" Sepia color எடுக்கப்பட்ட புகைப்படங்களே அந்நிகழ்வுகளின் சாட்சி.
வாழையடி வாழையாக - எனைத் தொடர்ந்து எனது இரு தங்கைமாரான சத்தியபாமா, நித்திலாவும் அங்கேயே கல்வி பெற்றனர். இரு வாரங்களுக்கு முன் அவர்களுடன் தொலைத்தொடர்பு உரையில் - இந்திரா ரீச்சர் பற்றியும், தொடக்கப்பள்ளியின் சிறிய முற்றத்தில் நாம் சதா காலையில் உடற்பயிற்சி செய்யும் ஞாபகங்களையும் பகிர்ந்தோம். ஐம்புலன்களுக்கும் தீனி போட்டதும் அங்கேதான். அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட "திரிபோஷா மா" - உடைத்து துருவிய தேங்காய்ப்பூவுடன் சீனியும் சேர்த்து சுடுதண்ணியுடன் குழைக்கையில் எழும் வாசனையும் சுவையும் இன்றும் மூளையில் படிந்துள்ள அழியா படிமங்கள். அதன் ஞாபகமாக சில வேளை இன்றும் நானும் பாலர் வயது மகன் - நதியானும் இலங்கையிலிருந்து பிரத்தியேகமாக திரிபோஷா மாவை வரவழைத்து சுவைப்பது உண்டு. காலையில் சுவைத்து உண்ணுகையில் மகனுடன் எனது பாலர் நினைவுகளையும் ஆசிரியர் பற்றியும் இங்கு (பிரான்ஸ்) பிறந்த மகனுடன் பகிர்வதுண்டு. 45 ஆண்டுகளுக்கு பிறகும் ஆசிரியருடன் தொடர்பில் உள்ளீர்களா என வியந்தான். மேற்கத்தேயத்தில் நகர வாழ்வியல் உறவு முறைகள் கையறுநிலைதான். இலங்கைத்தமிழர்கள் உறவைப்பேணுவத்தில் பிரதியேகமானவர்களே. பழையமாணவர் சங்கம், ஊர்ச்சங்கங்ககள், ஒரே வகுப்பு மாணவ ஒன்றுகூடல்கள் அதற்கு சாட்சிகள்.
அம்மம்மாவின் (பறுவதம் கந்தையா) கையைப்பிடித்து அரிசியில் 'அ' எழுதி ஆரம்பித்து இந்திரா ஆசிரியரிடம் அடித்தளமான பயிலுகை கட்டமைக்கப்பட்டு நான்கரை தசாப்தங்கள் புரண்டோடிவிட்டன. அம்மாவிற்கும் (தேவகி பூபாலசிங்கம்) ஆசிரியருக்குமான நட்பு நீண்டது - போர்ச்சூழலிலும் அளவெட்டி சிறார்கள் சார்ந்த அக்கறை அவர்களது பேச்சில் எப்பொழுதும். ஆசிரியையின் இறுதி இரவன்று அம்மாவும் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் வீடு திரும்பினார். மறுநாள் நான் தொலைபேசியில் அழைத்து “ஆசிரியை போய்விட்டார்…' கனத்த மனதில் கவலை பரிமாற "ஐயோ ராத்திரியும் அவள நினைச்சனே" - அம்மாவின் அந்த ஒரு வரி - இறுதி ஒப்பாரி. எமது குடும்பம் - ஆசிரியரின் குடும்பத்துடன் தூரத்து உறவும் கூட. அவரின் ஒரே மகள் சர்மிளி (பபி) எனது வயதை ஒத்த மாணவி. இலண்டனில் டாக்டராக கடமையாற்றும் இராதேயன் போன்று, வெறும் சில அளவெட்டி மாணவர் குழாம் - நாம் ஒன்றாக கல்வி கற்றோம். ஆசிரியரிடம் கல்வி கற்ற பல மாணவர்கள் பட்டதாரிகளாக பலதுறைகளில் உலகெங்கும் வியாபித்துள்ளனர். எமது வகுப்பே ஆரம்ப பள்ளியின் முதல் குழு என்பதில் எமக்கு எப்போதும் ஆரோக்கியமான தற்பெருமைதான் - மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பள்ளி இயங்கி, அரச உதவிகளும் பெற்றது வரலாறு. அம்மாவை ஆசிரியை சந்திக்கும் தருணங்களில் என்னையும் தங்கைமாரையும் ஆர்வமாக விசாரிப்பதாக அம்மா கூறுவார்.

ஆசிரியையுடன் நேரலை காணொளி தொடர்பாடலில் அவரின் அழகான செழிப்பான முகம் வயது முதிர்ந்திருப்பதை கண்டு கலங்கின மனம். அவர் முகத்தில் அனுபவக்கோடுகள் பல அவரின் ஆளுமையின் அழகை கொடிட்டன. நமது உரையாடலில் எப்பொழுதும் கல்வி, சமூக சிந்தனைகளே சூழ்ந்திருக்கும். வயது முதிர்ந்த பின்பு வரும் புலம்பல் அவரிடம் இருக்கவில்லை என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. சிற்றுரையிலும் புத்துணர்ச்சியும், சகபாடிகள் பற்றியும் உரை தொடரும். சக மாணவர்களுடன் நாம் இன்றும் ஒற்றுமையாக கண்டம் கடந்த உரையாடலை வைத்திருப்பதை அறிந்து ஆசிரியை, பூரிப்படைந்தை கண்டேன் - முகம் பார்த்த தொலைதூரத்து உரையாடலில். அவர் புன்னகையில் என் சிறுவயது முகங்கள் தெரிந்தன.
இன்னொரு உண்மையையும் கூறினார் - நான் புருவம் உயர்த்தினேன் - சிறு ஆவலுடன். அவர் ஆசிரியத்தகமையுடன் திருமணமாகி அளவெட்டிக்கு இடம்பெயர்ந்தார். ஆசிரியையான எனது அம்மம்மாவின் தகமையுடன், எனது அம்மாவுடனான நட்பு பலமாக, எனது அம்மாவே "அளவெட்டிச் சிறார்களுக்கான தொடக்கப்பள்ளியை ஏன் நீர் ஆரம்பிக்கக்கூடாது?". இருவரும் கலந்தாலோசித்து புதிதாக கட்டப்பட்ட எமது கல்வீட்டு விறாந்தையில் ஆரம்பித்ததாக கூற - வியந்தேன். ஆச்சரியத்தில் மீண்டும் வினாவினேன் - ஆம். எனது அம்மாவின் திருமணம் காரணமாக தன்னிடம் பொறுப்பை கையளித்து தகுந்த சிறார்களையும் அறிமுகப்படுத்தினார் தொடக்கப்பள்ளிக்கு. மேலும் ஊக்கபலமாக தன்னுடன் கைகோர்த்து நின்றதையும் - அவை அனைத்தும் ஆரோக்கியமான தருணங்கள் என்றார். என்னால் நம்ப முடியாத - நம்பக்கூடிய ஒரு புதுக்கதையை கட்டவிழ்த்தார். மகிழ்ச்சி பூரிக்க இருவரும் நேரலையின் திரையில் எங்கள் முகங்களை படம் பிடித்தோம். அப்படம் இரு வேறுபட்ட தலைமுறைகளின் பாசத்தையும், கனவுகளையும் மௌனமாகப் பேசும் ஆவணம். |
வெண்டிக்காயை குறுக்கு பாட்டிற்க்கு வெட்டி தண்ணீருடன் கலந்த குங்குமத்தில் ஒத்தி அச்சுப்பதிப்பு ஓவியம். செவ்வரத்தை இதழ்களை தாளில் தேய்த்து வர்ணம்பூசிய சித்திரம், கிறுக்கல் சித்திரம், ஒட்டுச்சித்திரம் போன்ற சூழலில் கிடைத்தவையுடன் சித்திரம் பழகியதும் மேலும் பல கைவேலைகளை பழகியது சிறுவயது ஞாபகம். குறிப்பாக நான் இன்று ஒரு முழுநேர ஓவியனாக உருவெடுக்கவும் - எனது சமகாலத்து ஓவியங்களில் இயற்கை வர்ணங்களை பூசவும், மெழுகவும், தப்பவும் பாலர்கால பயிற்சிப்பட்டறை மிகக்காத்திரமான அடித்தளத்தை அமைத்ததை நினைத்து பூரிப்படைகிறேன். அளவெட்டியில் - இந்திரா ரீச்சரின் பாலர் பயிற்சிபட்டறை மீண்டும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருவதற்கு இதுவே காரணம். இந்திரா ரீச்சருடனான ஆரம்ப கல்விக்காலம் என்றுமே எமக்கோர் பொற்காலமே...
VP. வாசுகன்
24.09.2025
VP. வாசுகன்
24.09.2025
Memories of Early Education: A Tribute to Mrs. Indradevi Gunabalan
1. The Loss of a Giant The author begins with the sorrowful news of the passing of "Indira Teacher" in September 2025. He compares her loss to the falling of a great banyan tree whose roots and branches provided shade to an entire community. A video call in 2022 had briefly reawakened his frozen childhood memories, which now flow back with her departure.
2. Digital Age vs. Deep RootsLiving in the modern era (Paris), the author reflects on how technology and social media have made reading and global news accessible at our fingertips. While these tools allow us to reconnect with thousands of schoolmates across the globe, they also delivered the somber news of his teacher’s passing through a black-and-white photo on a Jaffna student forum.
3. A Unique PedagogyI ndira Teacher did not believe in imposing a rigid, structured curriculum. Instead, she sowed the seeds of knowledge through:
5. Historical Context: The Jaffna LibraryThe author intertwines his personal journey with the tragic burning of the Jaffna Public Library in 1981, an event he describes as "cultural genocide." As a child, he didn't fully grasp the magnitude of the loss, but as a migrant living abroad, he now understands the weight of that intellectual void and the resilience of the Tamil pursuit of knowledge.
6. Sensory Memories and LegacyThe article is rich with nostalgic imagery:

- Art & Creativity: Using okra cross-sections dipped in kumkum for printing, and rubbing hibiscus petals on paper to create natural colors.
- Freedom of Expression: Folk dances (Kavadi), songs, and village-level stage performances that helped children overcome fear and shyness.
- Compassion: Her language was love. She guided students with a gentle gaze and an affectionate touch rather than strict commands.
5. Historical Context: The Jaffna LibraryThe author intertwines his personal journey with the tragic burning of the Jaffna Public Library in 1981, an event he describes as "cultural genocide." As a child, he didn't fully grasp the magnitude of the loss, but as a migrant living abroad, he now understands the weight of that intellectual void and the resilience of the Tamil pursuit of knowledge.
6. Sensory Memories and LegacyThe article is rich with nostalgic imagery:
- The taste of Thriposha (nutritional supplement) mixed with coconut and sugar, a flavor he still recreates for his son in France to pass on the legacy.
- Walking through the sandy lanes of Alaveddy, identifying snakes like "biological experts," and dodging "masukutti" (caterpillars) hanging from drumstick trees.
- The transition from a "cement shed" classroom under the shade of neem and iluppai trees to a life as a professional artist.