VP. Vasuhan

"No Face No Name"
Migration & Identity
@ Kälam 

Critics from social media 

Thiagarajah Wijayendran  (Facebook)
"என்னைச் சுதந்திரமாக விடு"

எம்மவர்களின் ஓவிய ஈடுபாடு மிகப் பெருமை கொள்ளத்தக்க ஒன்றல்ல. அண்மைக்காலங்களாக இந்நிலை மாறிக்கொண்டிருக்கிறது. முதன்முதல் கழிவொயிலில், கறையானில் இருந்து தென்னையைக் காப்பாற்றப் பொச்சைப் பிடித்துத் தீட்டிய ஒரு சிறுவன் பின்னாளில் ஒரு பெருங்கலைஞனாய் வருவான் என யாரும் எதிர்வுகூற முடியாது. ஆனால் வாசுகனுக்கு அது நேர்ந்திருக்கிறது. வாழ்வின் ஒவ்வோர் அம்சத்திலும் ஓவியம் இழையோடிக் கொண்டிருக்கிறது என்கிறார் அவர். தனது வாழ்வில் அவர் பெற்ற ஒவ்வோர் அனுபவமும் பின்னாளில் அவரது ஓவியங்களை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன என்பதை அழகாய்ச் சொல்கிறார் வாசுகன். வட அளவெட்டியில் மஹாகவியினதும், தவில் மேதை தட்சணாமூர்த்தியினதும் வீடுகளின் அருகிற் பிறந்து வளர்ந்தவர் என்பதால், கலைகளின் இயல்பான நிழல் அவர்மீது படிந்தது. மற்ற வகுப்பறைகளில் இருந்து தனியாக இருந்த மகாஜனக் கல்லூரியின் ஓவிய வகுப்பறை அவரை மிக ஈர்த்திருக்கிறது.
ஓவியம், புலம்பெயர் வாழ்வு சார்ந்த அவரது அனுபவங்களை இங்கு பகிர்கிறார். இவ்வாறான வேறும் பல பகிர்வுகள் ஒரு தொடராக "கலம்" என்ற தலைப்பில் இணையத்தில் உள்ளன. கொரோனாக் காலத்தில் ஒவ்வொரு கலைஞர்களையும் இவ்வாறு சுதந்திரமாக உரையாட வைத்திருப்பது மிகப் பயன்தருகிறது. முடிந்தாற் கேளுங்கள், பகிருங்கள். இணைப்பு கீழே பின்னூட்டத்தில் உள்ளது.
வாசுகனின் பதிவைப் பகிர்வதில் எனக்கு மகிழ்ச்சி. ஓவியம் பற்றி அதிக அறிவில்லாத என்போன்றோரையும் நண்பர்களாக வைத்திருக்கிறார் அவர்.
வாழ்த்துக்கள் வாசுகன்.
Maani Nagesh (facebook)
வாசுகன் என்ற ஓவியன் முகம் தேடி..பெயர் தேடி..இதுவரை நடந்துவந்த வாழ்வுப்பயணத்தை ' கலம்' கானொளி வழியாக ஒரு இலக்கியம் போல வாசித்தேன். ஒரு ஓவியனை நிறைவுடன் வாசகனுக்கு தந்துவிட்ட பதிவு. தேங்காய்  பொச்சுடன் கழிவு ஓயிலுடன் தென்னைமர அடியில் பாம்பு கீறிய சிறுவனின் தீற்றுதல் பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் தழுவி இன்று 'தூரிகை வீச்சம்' வியாபித்துச்செல்கிறது. வாசுகன் என்ற ஓவியனின் விடாமுயற்சியும் கடும் உழைப்புமே அவன் வெற்றிக்கு பின்னான காரணமாக அவன் அருகிருந்து நான் உணர்ந்துகொண்டேன். ஆரம்பகால அலைதல்.. சைபிரஸில் ஓவியத்துள் நுழைதல்..பிரான்ஸ் வருகையும் எதிர்நீச்சலும் ஓவியனாய் பாரிஸ் அனுபவங்கள்.. மாட்ரினிக் ஓவியப்பயண அனுபவங்கள்.. ஜப்பான் பயண அனுபவங்கள்.. அவ்விட அவதானிப்புகளும் தகவல்களும் என நீண்ட பகிர்வு. மகிழ்ச்சி.
களம் தந்த கலத்துக்கும்
நன்றி.

Kandaih Mukunthan (Youtube)

ஈழத் தமிழர்கள் எதிர்காலம் தொடர்பான சமூகக் கரிசனை உலகத்தின் மனிதாபிமானிகளை உலுக்கியவாறே காலம் கரைகிறது. வரலாற்றில் மூத்த வாழ்வுத் தடம்பதித்த தமிழர்களது வாழ்வு பூர்வீகம் - புலப்பெயர்வு எனத் தொன்மமும் தொடர்ச்சியும் நீட்சியுமான நிலையில் 'முகமிலிகள்'- முகச் சிதிலங்கள் தொடர்பான ஓவியக் கலைக் கரிசனை, கவனக் குவிப்பு கவனத்திற்குரியது. காணொலிப் பகிர்வில் குரல் மொழி உணர்வுபூர்வாக இருக்கிறது. - உங்களது ஓவியப் பயணம் சிறப்பு வாழ்த்துகள்!

Subakar ( yourtube)


Congratulations for publishing this wonderful life travel experience with us. Every moment of your life is explained in a very subtle manner, what’s primordial is every episode is related to one of your paintings or sculpture. The comparaison of the Berlin Wall to our motherland will leave your fans with great deep thinking.

Pleased to see that you enjoy discovering many other cultures and melt with them, let your art and imagination talk as always.

All the best

Suba

Shanthynee Varatharajan. (Facebook)
வணக்கம், "கலம்" நிகழ்வில் உங்கள் பகிர்வு ஓரு சிறுகதை கேட்டது போலிருந்தது. மிகச்சிறப்பான பகிர்வு. உங்கள் இலகு, மொழிநடை முகத்தப்பற்றி நீங்கள் யோசித்தவிதம், எதிரி என்று பார்த்துப்பயந்தவர்களோடு பின்பு கொழும்பில் உறவாக பழகியதை, அப்பம்மாவோடு பானைகளை பார்த்த கதை இப்படி உங்கள் பகிர்வும், திறமையும் உங்களை யார் என்று பார்க்கவைத்தது.  
இன்னும் நிறையச்சொல்வேன் வாசுகன், உங்கள் கதை அப்படி பிடித்திருந்தது. அடையாள அட்டைக்கு படமெடுத்ததை விபரித்தபொழுது -  நான் குடும்பமாகவும், டக்கெண்டு எடுத்த புகைப்படம்,  என்னுடைய அனுபவம்1984 இல் நினைவுக்குவந்தது. மறக்கமுடியாத பல நிடைவுகளை நீங்கள் சொல்லக்கேட்டேன். அடையாள அட்டையைப்பற்றியும் வடிவாக விபரித்திருந்தீர்கள். 
மகிழ்ச்சி.
Kala Sriranjan (Facebook)
சிறப்பான அனுபவப்பதிவும் கண்காட்சியும். எமது சமூகத்தில் எமது ஓவியக்கலைஞர்கள் அருமையாகவே இப்படியான கண்காட்சிகளை அறிமுகப்படுத்துகிறார்கள். இரு மொழித் திறமை மட்டுமல்லாது , உங்கள் பன்முகத்திறமைகளும் உங்களுக்கு புலம் பெயர் தேசங்களில் உங்கள் வாழ்வை திறம்பட கொண்டு வருவதற்கு உதவியிருக்கிறது.
எல்லோருக்குமே இது ஒரு சவால் தான், இருந்த போதிலும் அதனை முறியடித்திருக்கிறீர்கள்!
Keep going strong Vasuhan, I am so proud of you! All the very best to your future endeavours!

Sathya Ahilan (Facebook)

Very well said.you explained your art journey from your childhood. It brought me back to my childhood memories in srilanka
Anbuthiva Anbu (Facebook)
உண்மையில் சொல்லவேணும் என்றால், ஓவியங்களை ரசிக்க தெரியும், ஆனால் ஓவிய வகைகள் பற்றி அல்லது ஓவிய நுட்பங்கள் பற்றி தெரியாது. நானும் என்னடா ஒரே முகமூடிகளா இருக்கு தாமரை இதழ்கள் இருக்கு ஓவியங்கள் என்று வெறுமனே யோசித்ததுண்டு,  உங்கள் ஓவியங்களிலும் நீங்கள் பகிர்ந்த அனுபவங்களின் மூலமும் தெரிந்து கொள்ள கூடியதாக இருக்கிறது. புலம்பெயர் மண்ணில் உங்கள் அடையாளத்தை பதிக்க நீங்கள் எடுத்த முயற்சி, வாழ்க்கையில் இருக்கும் விருப்பத்தை தொழிலாகவும் மாற்றி வாழ்வது என்பது, அதுவும் இப்படியான கலைகள் சுவரில் கணணி உதவியோடு ஓவியத்தை பதிக்கும் தொழிநுட்ப காலத்தில் பெரும் சவால். அருமையான நினைவு பதிவுகள் "No name No பாஸ்" என்ற வரிகளின் ஆழத்தை தெளிவு படுத்தயிருக்கிறீர்கள். 

ஓவியத்தை வரையும் போது கூச்சமிருந்தது என்றீர்கள், இங்கே உரையாற்றும் போது கூட இருக்கு போல.. நீங்கள் உங்கள் நினைவுகளை மீட்டும் போது பலருக்கு உங்களை ஒத்த ஊர் நினைவுகள் ரசனைகள் வந்து போகலாம். அந்த வாழ்வியலை ஓவியமாக்கினீர்கள், என்ற ரசனையை மற்றவர்களும் உணர்கிறார்கள் (நான் உணர்ந்தேன்)

சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா தமிழ் மக்கள் கலாசாரம் மேலைத்தேசத்தில் இன்னும் தெரியட்டும்.

Keerthika Steepan (facebook)
Got to know more about your life & art journey. Really impressed. 
happy for you. Keep up your hard work. Our love and support for you always❤ Congratulations Vasu Anna.

Sri Kajan (youtube)

வாழ்த்துக்கள் அண்ணா. உங்கள் அனுபவத்தை மிகவும் தெளிவாக அமைதியாக பகிர்ந்து இருந்திங்கள் அருமை அண்ணா.கலம் YouTube ஊடகத்துக்கும் வாழ்த்துகள்.