ஆபிரிக்க மீள் உருவாக்கம்
AfRiCa ReMix
ஆபிரிக்கக் கண்டத்தின் தற்போதய நிகழ்வுகள்
Africa Ramix ஆபிரிக்கா மீள் உருவாக்கம் எனலாம்
ஆபிரிக்க மண்ணினதும், மக்களினதும் - இறந்தகால, நிகழ்கால, எதிர்கால நிகழ்வுகளை மையமாகக்கொண்டு, மிகப்பிரமாண்டமாக நவீன கலைக்கூடமான "பரிஸ் - ஜோர்ச் பொம்பிடுவில்" (George Pompidou - Paris) ஒழுங்கு படுத்தப்பட்ட உற்பத்தி, மீள் உற்பத்தி செய்யப்பட்ட படைப்புக்களே "ஆபிரிக்கா றீமிக்ஸ்" - Africa Remix காட்ச்சிப்படுத்தல்.
பண்டைய வழிகளை இன்றும் தமது வாழ்க்கை முறையிலும், உணவு உடை கட்டடக்கலை, இயற்கையாக தயாரிக்கும் வர்ண சாயங்களை பண்பாட்டு நிகழ்வுகளுக்காக பயன்படுத்துதல், உடல்களில் வரைதல், முகங்களில் வரைதல் போன்றவற்றிலும் பாரம்பரிய, பண்டைய வழி முறைகளை வெளிக்காடுதலிலும் ஆபிரிக்கர்கள் இன்றும் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கின்றனர்.
ஆபிரிக்கா றீமிக்ஸ் கண்காட்சியில் நூறுக்கு மேற்பட்ட கலைஞர்களின் இருநூறுக்கு மேற்பட்ட படைப்புக்கள் பதிவாகி இருந்தன. கலை என்ற நோக்கிலே ஓவியம், சிற்பம், பாகங்களை இணைக்கும் முறை, புகைப்படம், காணொளிப்படம் (Video) அலங்கார வேலைகள் (Design), துணி அலங்கார வேலைகள், இசை, எழுத்து, போன்றன காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
ஜோர்ச் பொம்புதுவில் (George Pompidou) இதுவரை நடைபெற்ற மிகப் பெரிய கண்காட்சிகளில் இதுவும் ஒன்றாகும்.
கடந்த 25.05 தொடக்கம் 08.08.2005 வரை நடைபெற்ற ஆபிரிக்கா றீமிக்ஸ் கண்காட்சி யப்பானில் தொக்கியோவில் உள்ள மொரி ஆர்ட் மியுசியத்தில் (Mory Art Muserum) வைகாசி-ஆனி 2006 வரை காட்சிப்படுத்தப்படவுள்ளது.
படைப்பாளிகளின் கருத்துக்களை முன்வைப்பதிலும், படைப்புக்களை வெளிக்காட்டுவதிலும் அக்கறை உள்ள மனிதரும் ஜோர்ச் பொம்புதுவின் பொறுப்பாளருமான "Simon Nijam" அவர்கள் இரண்டு முக்கியமான நோக்கங்களை அந்த ஆபிரிக்கா றீமிக்ஸில் கொண்டிருக்கிறார்.
• ஆபிரிக்காவில் உள்ள படைப்பாளிகளை வெளிக்காட்டுவதும், அங்கும் பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள் என்பதும்
• முக்கியமாக ஏனைய கண்டத்து மக்களின் ஆபிரிக்கா மீதான தவறான கலைநோக்கை உடைத்தலும்
ஆபிரிக்கா றீமிக்ஸில் பங்குபற்றிய படைப்பாளிகளின் கருத்துக்களும், படைப்புக்களின் கருத்துக்களும்.
• அப்துலை கொனாடே "Abfoulaye Konate":
- அங்கு காட்டப்பட்டுள்ள - துணிகளால் தைக்கப்பட்டுள்ள ஏழு உருவங்கள், கலாச்சாரங்கள் மூலமாக வாழ்க்கையில் மனிதர்கள் சந்திக்கும் ஏழு காலகட்டங்களைக் குறிக்கிறது.
- ஒவ்வொரு ஓவியங்களிற்கும் கிழே உவ்வொரு மதங்களின் குறியீடுகள் குறிக்கப்பட்டுள்ளது.
- இறுதி ஓவியம் மனிதனின் இறுதிக் கட்டத்தை குறித்து நிற்கிறது.
• அன்ரோனியோ ஒலே "Antonio Ole":
- இவரது புகைப்பட வேலை நீண்ட ஆண்டுப்பயனத்தில் அவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் புகைப்படச் சுவர் 'Photo Wall" என குறித்து நிற்கின்றது.
- இவரது முக்கிய புகைப்படங்களாக அங்கோலா நாட்டின் வீடுகளையும் கட்டிடங்களையும் காணலாம்.
- பாழ் அடைந்த வீடுகளும், போரால் அழிந்த வீடுகளும் இன்னும் அரைகுறை உயிருடன் காட்சி அழிப்பது, அங்கோலாவின் இறந்தகால, நிகழ்கால, எதிர்காலத்தை குறித்து நிற்கின்றது.
- அவர் தயங்கியது பாரம்பரிய மக்களுக்கும் மதகுருமார்களுக்குமே.
இருந்தும் இரு மதகுருமார்களின் சந்திப்பின் பின்னர் மனம் தெளிந்தார்.
- மதகுருமார்கள் கூறியதாவது அம்முகமூடிகளை ஏன் தயாரித்தேன்? என்று விளக்கும் பட்சத்தில் அவை அவ்வெதிர்ப்புக்களை எதிர்கொள்ளப் போவதில்லை.
இவரின் நோக்கம்- ஐரோப்பியர் ஆபிரிக்க மரத்தாலான முகமூடிகளை எடுத்து குப்பைகளை விட்டுச் சென்றனர். இதன் காரணமாக அவர்கள் விட்டுச்சென்ற குப்பை மூலம் நான்
முகமூடி தயாரித்தேன். இவ்வாறே அவர்களின் குப்பைகளை மீண்டும் அவர்களுக்கு கொடுக்கின்றேன்.
• சமுஅல் பொசோ "Samuel Fosso":
- நான் கொஞ்சம் கதை சொல்கிறேன்
- கிராமத்து தலைவர்களும் ஆபிரிக்க அரசர்களும் அவர்களது மனச்சாட்சியும் , கடமைகளை உணரும் சக்தியும்.
- சொந்த மனிதர்களே சொந்த மனிதர்களே ஐரோப்பியர்களுக்கும் அரேபியர்களுக்கும் விற்றனர், ஏன்?
ஓரிரு முத்துக்களுக்கும் கைப்பிடியளவு சோகிகளுக்குமே!

- விலி பெஸ்ரர் (Wille Beste) : அப்பாட்டைற் 'Apartheid" காலகட்டத்திலிருந்த சேர்க்கப்பட்ட குப்பைகளால் தயாரிக்கப்பட்ட சிற்பக்கலைகள்.
- சகல மக்களுக்கும் சம உரிமை கிடைக்கும் பட்சத்திலேயே மேலோங்கிய குடியரசும் அமைதியும் நிலவும்.
• அப்துலை கொனாடே "Abfoulaye Konate":
- அங்கு காட்டப்பட்டுள்ள - துணிகளால் தைக்கப்பட்டுள்ள ஏழு உருவங்கள், கலாச்சாரங்கள் மூலமாக வாழ்க்கையில் மனிதர்கள் சந்திக்கும் ஏழு காலகட்டங்களைக் குறிக்கிறது.
- ஒவ்வொரு ஓவியங்களிற்கும் கிழே உவ்வொரு மதங்களின் குறியீடுகள் குறிக்கப்பட்டுள்ளது.
- இறுதி ஓவியம் மனிதனின் இறுதிக் கட்டத்தை குறித்து நிற்கிறது.
• அன்ரோனியோ ஒலே "Antonio Ole":
- இவரது புகைப்பட வேலை நீண்ட ஆண்டுப்பயனத்தில் அவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் புகைப்படச் சுவர் 'Photo Wall" என குறித்து நிற்கின்றது.
- இவரது முக்கிய புகைப்படங்களாக அங்கோலா நாட்டின் வீடுகளையும் கட்டிடங்களையும் காணலாம்.
- பாழ் அடைந்த வீடுகளும், போரால் அழிந்த வீடுகளும் இன்னும் அரைகுறை உயிருடன் காட்சி அழிப்பது, அங்கோலாவின் இறந்தகால, நிகழ்கால, எதிர்காலத்தை குறித்து நிற்கின்றது.
- றொமுஆல்ட கசுமே "Ronauld Hazoume":