"Bon Voyage" (நல்ல பயணம்)
மாலை 5மணி என்றது ஞாபகத்திற்கு வந்ததும் பறந்தடித்து ஒருமாதிரி 6மணிக்கு ரெயின் எடுத்துட்டன். எனது அவசரத்திற்கு ரெயின் ஓடுவதாகத் தெரியவில்லை. எனக்கு பாரிசில் நடந்த 38வது இலக்கியச்சந்திப்பு நினைவுதான் மெத்ரோ ஓடுற வேகத்தைவிட என் மனதில ஒடிக் கொண்டிருக்குது. ஆரும் மெழுகுதிரி கொழுத்திறதுக்கிடையில போய்விட வேணும் எண்ட அவசரம். 38வது இலக்கியச் சந்திப்பில ஓவியர் வாசுகனின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த வாசுகனின் ஓவியங்களை பார்த்துக் கொண்டிருக்கும்போது வரண்ட ஓவிய ஞானிகளான எங்களோட நின்ற கற்சுறா ஒரு ஓவியத்தைக்காட்டி சொன்னார் நாங்கள் இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்டதால சும்மா எல்லாம் தெரிஞ்ச ஞானிகள் மாதிரி நடிக்கிறம்.
ஒரு சாதாரண தமிழர் யாரும் இந்த மண்டபத்திற்குள் வந்து இந்த ஓவியத்தைப் பார்த்திருந்தால் நிச்சயமாக மெழுகுதிரி கொழுத்தி கும்பிட்டுக் கொண்டிருந்திருப்பார் என்று. ஆனால் அந்த ஓவியம் ஒரு யுத்தக் குறியீடாக இருப்பதை பின்பு வாசுகன் எமக்குப் புலப்படுத்தினார்.
அந்த ஒரு பதட்டமான மனநிலையில் தான் அன்று பாரிசின் மையப்பகுதியில் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகும் வாசுகனின் ஓவியக் கண்காட்சிக்கு சென்று கொண்டிருந்தேன். ஒரு மாதிரி 7மணிக்கு மண்டபத்தை நெருங்கிவிட்டேன். நல்லவேளை ‘எந்த அசம்பாவிதமும்’ நடைபெறவில்லை. வாசுகனோடு சேர்ந்து அவரது நண்பனும்,சோபாசக்தியும்,தேவதாசும் தான் நம்மவர்கள். மற்றைய அனைவருமே பிரான்சு நாட்டுக்காரர்களும், பிரான்சில் வாழும் வேறுநாட்டவர்களாகவும் இருந்தனர்.சிறுது நேரத்தின்பின்பு அரவிந் அப்பாத்துரை அவர்களையும், வேறு இரண்டொரு தமிழர்களையும் மண்டபத்தில் காணக்கூடியதாக இருந்தது.
ஓவியக் கண்காட்சியின் தலைப்பு ‘bon voyage’ (நல்ல பயணம்) வாசுகன் பயணம் சென்ற இடங்களில் வரையப்பட்ட ஓவியங்களே அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மாட்டினிக், இற்றாலி, மற்றும் பிரான்சிலுள்ள பிற பிரதேசங்களுக்கும் அவர் சென்றபோது வரையப்பட்ட ஓவியங்கள். வாசுகன் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.அப்படி அன்புடன் வரவேற்றவர் அப்படியே எங்களை அன்புடன் வெளியேற்றியிருக்கலாம். அனால் ஓவியத்தைப் பற்றி தனக்கு ஏதாவது சொல்லவேண்டும் என்றதுதான் எனக்கு மிகவும் கடுப்பேறின விசயமாகும்.
ஓவியங்களையெல்லாம் முழுசி முழுசிப் பார்த்தேன் அதில மாடு தெரிந்தது,பொங்கல் பானை தெரிந்தது, மரங்கள் தெரிந்தது,கோடுகள் தெரிந்தது, எல்லாத்தையும் விட தெளிவாக நிறங்கள் தெரிந்தது. எல்லோரும் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கொப்பியில் குறிப்புகள் எழுதினார்கள். ‘பிரத்தியேக மனநிலை வேண்டும் புரிந்து கொள்ள’என நானும் எழுதினேன். வாசுகன் அதை வாசித்துவிட்டு என்னை கட்டி அணைத்து இறுக்கினார். நான் நாணிக் கூனி கரைந்து போனேன். நான் எழுதினது வாசுகனுக்கு புரிந்திருக்கின்றதே! ஏன் வாசுகன் ‘எழுதினது‘எனக்குப் புரியவில்லை என்று! எனக்கு ஓவியம் தெரியாது. வாசுகனுக்கு எழுத்தும் புரியுது… ஓவியமும் தெரியுது….
பிரான்சிலும் பல்வேறு நாடுகளிலும் தொடர்ச்சியாக பல ஓவியக்கண்காட்சிகளை நடத்திவரும் ஓரே ஒரு தமிழர் வாசுகன் தான். அவர் எங்களுக்குத் தெரிந்த நண்பராகவும் இருப்பது குறித்து பெருமையாக பேசிக்கொண்டு சோபாசக்தியும், தேவதாசும், நானும் அன்றைய மாலைப் பொழுதின் ‘முடிவுரையை பாரிசின் வீதிகளில் அமர்ந்திருந்து வாசிக்க தொடங்கினோம்.
by அசுரா - 17 June 2012
www.thuuu.net