ஆகாசத்தாமரை இதழ்களால் அற்புத முகமூடிகளை வரைந்துள்ளான். அவற்றை நாமும் அணிந்து கொண்டு அவனது கனவு ந0னவுலகத்தில் பயணம் செய்வோம். அங்கே அவனும் அந்த இயற்கையும் வேறல்ல. நிறங்களும் கோலங்களும் நிறைந்த அற்புத உலகில் மெல்ல மெல்ல உலாவி வரும் பொழுது எமக்குள்ளும் வலிமை பெறும். பார்வையாளன் - ரசிகன் என்ற தள உடைப்பை நிகழ்த்தும் வரத்தை அவன் எங்களுக்குத் தருகிறான் .
தா - வரம்
ஆத்மார்த்த தளத்தில் இயங்கும் கோடுகளும் நிறங்களும் குறியீடுகளும் கவிதைகளும் எம்மை கலை பரவசத்துள் ஆழ்த்தும் வீரியத்தை கொண்டவை. அவனுடைய இயங்கும் கலை பண்பாட்டுத் தளமானது ஆழமான கலை வேர் விடுதலை கொண்டது. பஞ்சபூதங்கள் மீது அவன் கொண்ட பிணைப்பும் அவனை பிரபஞ்ச கலைஞனாக அடையாளப்படுத்துகிறது. மண் ,சாக்கு ,மரம், நூல் ,செடி ,கல் ,இலை, குழை, கரி, சிப்பி சோகி பென்சில் என்பன அவன் பயன்படுத்தும் மூலப் பொருட்கள் அனைத்தையும் இணைத்து காலத்தால் அழியாத கலை பெறுமானத்தை எழுப்பி காட்டுகின்றான்.
தமிழ் மொழியின் தொன்மமும் அதன் வளமும் அவனது வேர். அந்த வேர் விடுதலில் நின்று கொண்டு தவமியற்றும் தாவரத்தை போல கிளைக்கிறான். அங்கேதான் அவன் கலை படைப்புகள் உருவகிக்கின்றன. சைப்ரஸில் கிளீன் க்யூஸ் அற்புத ஓவியக் கலைஞ்ஞன் ஓவிய விமர்சகர். அவரிடம் ஓவியத்தை முறையாக பயின்றவன். குரு மீதான மதிப்புணர்வு அவனை மென்மேலும் உயர்த்திற்று. அவனுடைய கலை வளர்ச்சி மாற்றங்களை நவீன மர சிற்பங்கக்ளுடாகவும் செதுக்குகிறான். காதல், நட்பு, பிரிவு போர் அகதி வாழ்வு பிரிவுத்துயர், புலப்பெயர்வு அலைக்கழிவு தொழில் பயணம் இடைவிடாது ஓவிய காண்பிய நிகழ்வுகளை நிகழ்த்துதல் என இரண்டிற்கும் மேற்பட்ட தசாப்தங்களை அவன் கடந்துள்ளான்.
பல அழியாத சுவடுகளையும் நிறச்சுவடுகளையும் அழியாத கோலங்களையும் கழுகு பறவையை போல வரைந்து செல்கிறான். அவனது சுற்றாடல் பயணத்தை தொடர்ச்சியாக கண்டு களித்தவன் என்ற முறையில் சில வார்த்தைகளை உங்களுக்குச் சொல்வதில் யான் மகிழ்வெய்துகிறேன். தா - வரம் என்னும் தலைப்பில் ஜப்பான் நாட்டில் நிகழ்ந்த ஓவிய காண்பிய நிகழ்வின் ஊடாக இன்றைய காலத்தை நோக்கி எமது கவனத்தை ஈர்க்கிறான். தூரிகை உளி கத்தி கரிக்கோல் போன்றன அவனுடைய கலாயுதங்கள். இயற்கையையும் மண்ணின் இன்னோரன்ன கலைகளையும் அவற்றை அழிய விடாது காக்கும் வரத்தையும் தருமாறு வேண்டி நிற்கின்றான்.