யாழ்பாணம்
தென்னை மரங்களில் பாம்புகள் வரைந்த நினைவுகள். வாசுகன் பலார்வயதில் அப்புவுடன் இணைந்து கழிவு எண்ணெயில் தேனம்பொச்சை தோய்த்து வரைந்தவை அவை, தெனம் மரத்தை சிறு விலங்குகளிலிருந்து பாதுகாக்க.
யாழ்பாணத்தில் கலை சூழ்ந்த மருதநிலமான "அளவெட்டி" கிராமத்தை பிறப்பிடமாக 1977, இலயத்துளிர் காலம் 2001லிருந்து பாரிஸ் - பிரான்சில் வசிப்பதோடு காண்பிய நிகழ்வுகளை நடாத்திவருகிறார். "மகாஜனா கல்லூரி - தெல்லிப்பளையில்" பிரத்தியோகமாக அமைக்கப்பட்டிருந்த ஓவிய வகுப்பில் ஓவிய ஆசிரியர் செல்லையா தியாகராஜாவிடம் ஆரம்ப ஓவிய கல்வி சார் தகமையை பெற்றார். மழலையர் பள்ளியில் (நேசறி) ஆசிரியர் திருமதி இந்திரா குணபூபதி அவர்களின் அரவணைப்பில் சேவ்வரத்தை பூ இதழின் சாயம் போன்ற இயற்கை வர்ணங்களோடு ஆரம்பித்த சித்திர கல்வி கிராமியக்கலையிலும் ஈர்க்கப்பட்டான், சமகாலத்து ஓவியங்களில் இயற்கை வர்ண உபயோகிப்பை காணலாம்.
அப்பு - தாயின் தகப்பனார் சேமன் கந்தையா - விவசாயத்தில் தேர்ச்சியும் தாவரங்கள் மீதான உறவும் வித்தாகியது வாசுகனின் இயற்க்கைக்காட்ச்சி சித்திரங்களில். அதன் எதிர்வினையே ஜப்பானிலில் 2016ல் நிகழ்ந்த ஓவிய கண்காட்சியின் தலைப்பு "தா - வரம்". அளவெட்டி எல்லையில் அமைந்த காவல் தெய்வமான வீரபத்திரர் கோவிலின் பூசகர் முருகைய்யர் வடிவமைக்கும் பொய்க்கால் குதிரை, பரிவாரங்களின் காகித முகமூடி நேரேபார்த்ததன் வெளிப்பாடு முகம் - முகமூடி சார் ஓவியங்களின் வெளிப்பாடு. அம்மம்மா - கொல்லங்கலட்டி மகாவித்தியாலயத்தில் தமிழ் சமயம் சமூகக்கல்வி பாடங்களை கற்பித்து ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி கந்தையா பறுவதம் (வாத்தியமாக்க). அவரது கல்வித்தகமையும் ஆறத்தழுவித்தலும் வாசுகன் தமிழ் எழுத்தாக்கத்திலும் வரலாற்றிலும் கல்லூரிகல்விக்கு அப்பாலும் தேடல்கொள்ள ஊற்றாகிற்று இன்றும். கோவிட் உள்ளிருப்பு காலத்தில் பருட்ச்சார்த்த முயற்சியாக வரைந்த "தமிழ் எழுத்தணிக்கலை" இனொரு பரிமாணம். அயல்வீட்டு தவில் வித்வான் தட்சிணாமூர்த்தியின் மூத்த மகள் கலைச்செல்வி தினமும் வரையும் புள்ளிக்கோலங்களின் அழகியல் பூச்சிகளுக்கு விருந்து மட்டுமல்ல சித்திர சிறுவனுக்கும் தான். வீட்டு முற்றத்து வெள்ளத்தில் தங்கைமாருடன் காகிதக்கப்பல் மிதக்கவிட்ட காட்சி, 40 வருடங்களின் பின் பிரான்சின் தென்மேற்கில் ஹிட்லரின் நீர்முழ்கி கப்பல் துறைமுகத்தருகே தன் மகனுக்கு மடித்து கொடுத்த காகிதக்கப்பலின் நீட்சியின் கிளர்ச்சியில் பிறந்தது "கட்டு+மரம்' எனும் கலை தொடர் - ஓவியமாக சிற்பமாக காகிதகப்பல்களாக. 2023 இறுதியில் குவாடலூப் - கரேபிய தீவில் நிகழ்ந்த நிகழ்த்துக்கலையின் சாராம்சம், இப்போ அதுவே நிரந்தர தாபிப்புக்கலையாக கலைக்கூடத்தின் முற்றத்தில் கிரேபிய கடலை பார்த்தவண்ணம்.
இந்திய அமைதிப்படை ஈழத்தை சூழ்ந்திருந்த இறுதிக் கால கட்டத்தில், போர் சூழல் மத்தியில் பாடசாலைகள் ஒழுங்கின்மை காரணமாக தகப்பனார் வேலுப்பிள்ளை பூபாலசிங்கம் உடன் தலைநகரம் கொழும்பு சென்றான் 1990 இறுதியில் . மறுவருடமே தாயும் - தேவகி தங்கைமாரும் சத்தியபாமா அகிலன் - நித்திலா தர்மேந்திரா கொழும்பு சென்று குடும்பமானார்கள். தாயகம் மீதான ஞாபகங்களும் கிராமிய கலைமீதான தேடலுமே இவரது தாகம்.

கொழும்பு
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற காலங்களில் ஓவிய ஆசிரியர்கள் திருமதி லலிதா நடராஜா, திரு தயாபரன் போன்றவர்களிடம் ஓவிய உத்திகளை கற்றதோடு, நீர்வர்ணத்தில் தொடர் பயிற்சிகள். உள்ளூர், சர்வதேச கண்காட்சிகளையும் வீதி ஓவியர்களையும் அவதானித்தவாறு. கொழும்பின் புறநகர் பத்தரமுல்லையில் - பலா மரங்கள் சூழ்ந்திருந்த "கொஸ்வத்தை" எனும்சிங்கள கிராமத்தில் வசித்து வந்தனர். சிங்கள வாழ்வியலுக்குள் தமிழர்கள் வாழ்வதென்பது இலகுவானதல்ல. மொழி, உணவு, பழக்கவழக்கம், நடை உடை போன்றவற்றை வெகுவிரைவில் ஓவியர் உள்வாங்கினார் . "வீதி அபிவிருத்தி அதிகார சபையில்" (RDA) வேலை செய்த ஓவியரின் தகப்பனாரின் வழிகாட்டலில் இலங்கையில் புராதன இடங்களான அனுராதபுர பொலநறுவை நேரில்தரிசித்தது வாசுகனுக்கு பெரும் ஊக்கி. பட்ரிக் (Batik) ஓவிய பாணியிலும், சிகிரியா - அப்சரா நடனமாடும் அரை நிர்வாண ஓவியங்களின் தாக்கம் பிற்காலத்தின் நிர்வாண உடலோவியங்களில் பிரதிபலிப்பு. தாயார் கொழும்பு வந்ததும் மின்சார தையல் இயந்திரம் ஒன்றை நுகர்ந்தார். யாழில் காலால் மிதிக்கும் தையலில் தாயுடன் பழகிய அனுபவம் நகரத்திலும் தொடர்ந்தது 2015களில் சில ஓவியங்களில் பரிசோதனை முயற்சியாக.
நிக்கோசியா, சைப்ரசில் NICOSIA - CYPRUS
ஹோட்டல் முகாமைத்துவ மேற்படிப்பை மார்ச் 1996 - 98 நிக்கோசியா, சைப்ரசில் "Center of Higher Studies " மற்றும் "Americanoss college"ல் முடித்து உல்லாச நகரான Aiya Napa 'ஐய நாபா' ல் நட்சத்திர ஹோட்டல்களில் தொழில் புரியும் வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொண்டார். ஓவியத்தின் மீதான தேடலில் பூப்பூக்கும் காலம் 96ல் " கிளின் ஹியூஸ்" (Glyn HUGHES 1931-2014)'" என்ற பிரித்தானிய நவீன ஓவியர் அறிமுகமானார். ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியரும், ஓவிய விமர்சகருமான நவீன ஓவியர் கிளின் வாசுகனின் ஓவிய ஆர்வத்தைக் கண்டு Kaimakkili கைமாக்கிளி ஓவிய கலூரியில் விண்ணப்பித்தார். கிரேக்க ஓவிய ஆசிரியர் திரு. யண்ணிஸ் - வகுப்பில் முகஉரு, உருவ ஓவியங்களின் பயிட்சியும் கண்காட்சியும். கிரேக்க மொழி, பண்பாடு, நிலைக்காட்சி - குடும்பம் பிரிந்த தனிவாழ்வில் புதிர்தான். பலஸ்தீன், இஸ்ரேல், எகிப்து பயணங்கள் மத்தித்தரை மண்ணின் புரிதலுக்கான திறவுகோல்.
கிளின் ஒழுங்கு செய்த ஓவியக்காண்பியநிகழ்வு nov 1997 "Hommage to French Painters 1900-1960" மெலினா மேற்கூறி மண்டபம், தலைநகர் நிகோசியாவில் வாசுகனும் மிகபெரிய அளவிலான கித்தானில் ஓவியங்களை காட்சிபடுத்தி இருந்தார். கிளினுடன் கற்றவையும் கருத்தரங்குகளும் காண்பியங்களும் சிறுவனை ஓவியனாக்கியது குருகுலவாச கல்வி.

பாரிஸ் - பிரான்ஸ்
'முகமுமில்லை பெயருமில்லை' தலைப்புடன் அன்னிக் சன்சொனியின் வழிகாட்டலில் முதலாவது தனிநபர் ஓவிய நிகழ்வு கோடை 2004ல். பிரான்ஸ் எல்லைக்குள் நுழைந்ததும் முதல் வருடம் அட்லண்டி கடலோரம் 'இல் து ரே' தீவில் தொழில் புரிந்த காலத்தில் உருவ கோட்டொவியங்கள் பிறந்தன. பாரிஸ் திரும்பியதும் தலைநகர வாழ்வு பிரெஞ்சு மொழி கலாச்சாரம் அகதி வாழ்வு எதிர்நிச்சல்தான்.
2009 ஆரம்பத்தில் வில்தனோஸ் பல்கலைக்கழகம் - நுண்கலையில் இருவருட பயிலுகையும் 2010 குறும்படம் (ஆவண படம்) தயாரிங்கும் பயிலுகையும். மே 2009 முகங்கள் தொலைந்த ஆண்டாக, ஜூலை2009 மறுமலர்ச்சி நகரம் புளோரன்ஸ் - இத்தாலிக்கு ஓவியர் டாவின்சியை தேடி, நான்கு தடவை அகதி அந்தஸ்து நிராகரிப்புக்கு பின்னராக 2009 இறுதியில் நேர்முக விவாத்திற்கான அழைப்பும். தை2010ல் கிடைத்த கடிதமே நிரந்தர வதிவிடத்திற்கான செய்தி கூறி. இவைதொட்டு பிறந்ததுவே முகம் - முகமூடி சார் ஓவிய பாணி.
பரிசின் சென் நதி அருகில் கவிஞர் அரவிந் அப்பாதுரை உடன் இணைத்து ஓவியக்கூடம் ஒன்றை (2013 feb - 2016 mar) நிறுவி, வாசுகன் பல ஓவியர்களின் ஓவிய காண்பிய நிகழ்வை நடாத்தினார்
2012 Decல் இருந்து அவரது வீட்டருகே சிறிய ஒரு ஓவிய பட்டறை ஒன்றை உருவாக்கி அதில் அவரது படைப்புகளை உருவாக்குதல், சேகரித்தல் போன்ற பணிகள்.. 2015 சுடுமண் பயிற்சிப்பட்டறை பாரிஸில் இருவருட ஆக்கத்தில் சுடப்பட்ட முக ஓவியம் வரைந்த பிங்கங்கள் ஜப்பான் கண்காட்சிக்காக.
இயற்கை, மனிடவியலின் இடப்பெயர்வு விஞ்ஞான வளர்ச்சி சமய கலை வெளிப்பாடு மொழி நாகரிகம் போன்றன இவரது ஓவியத்தின் பிரதான பாடுபொருள்.