எழுத்தணிக்கலை
ஜரோப்பாவில் தமிழ் ஓவியர்களின் படைப்புக்களை நான் இதுவரை பார்க்கவில்லை, சிலவேளை எனக்கு அதில் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருந்திருக்கலாம். சில குறுகிய பிற்போக்கான அடையாளங்களுக்குள் எப்போதுமே அவை சிறைப்பட்டிருப்பதால், அதில் ஈடுபாடில்லாமல் போயிருக்கலாம். இருந்தும் சில மாதங்களாக தனிப்பட்ட முறையில் பரீட்சையமான வாசுகனின் ஓவியங்கள் எனக்குள் ஒரு ஈடுபாட்டினை ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்தைய நவீன பாணியிலான ஆனால் மரபுகளை மறந்துவிடாமல் எடுத்துச்செல்லும் போக்கினை காணக்கூடியதாக இருந்தது. அவரிடம் மாபெரும் கலைத்துவ திறன் இருக்கிறது, அதை அவர் சமூக முரண்களை, யதார்தத்தினை பிரதிபலிக்கும் கலையாக உருவாக்கவேண்டும். அவருக்குள் பெரும் தீவிரம் இருக்கிறது. மனித வாழ்வினையும், மனிதர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளையும் பேச முனைகிறாரா? நப்பாசைகளை நான் விதைக்க முனையவில்லை ஆனால் நாம் அவரது படைப்புக்களை இரசித்து எமது சொந்த விளக்கங்களை உருவாக்கிக்கொள்ள முனையவேண்டும். இவரதுஓவிய நிகழ்வின் தலைப்பு என்பது, எழுத்தணிக்கலை என்றழைக்கப்படும், மொழியின் எழுத்து வடிவங்களை அழகாக ஓவியமாக வரையும் கலையின் ஊடாக எரியூட்டப்பட்ட ஒரு பிரச்சனையை பேச முனைவதாக இருக்கிறது.
வாசுகனின் ஓவியக் கண்காட்சி நிகழ்வினை ஒட்டி ஒரு தமிழ் படத்தின் சூட்டிங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பார்வையாளர்களுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் தமது கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் வராமல் பார்வையாளர்கள் நேரடி ஓவிய நிகழ்வினை- ஆற்றுகையை பார்த்துக் கொண்டிருந்தபோது உள்ளே நுளைந்து சூட்டிங் எடுத்தது ஓவியருடனான எமது தொடர்பாடலை தொந்தரவு செய்ததை உணரக்கூடியதாக இருந்தது.
வாசுகனின் எழுத்தணிக்கலை - அதாவது எழுத்து வடிவங்களை ஓவியமாக வரையும் கலைவடிவம் - ஓவியக்காட்சியும் ஆற்றுகையும் இன்று மாலை தொடங்கியது. 28Oct - 04Nov 2021 தொடர்ந்து இந்த ஓவியக் காட்சியை இந்த விலாசத்தில் பார்வையிடலாம், L' Escalier Espace d' Art, 104 Rue Edouard Vaillant, 93100 Montreuil, இதில் வரும் படங்களையும் அவரது ஆற்றுகையையும் நீங்களே பார்க்கலாம். அது இளம் சிறார்கள் மீது விளைவித்த தாக்கத்தினை நான் உணர்ந்தேன். அவர் தமிழின் உயிரெழுத்துக்களை பயன்படுத்தி ஒரு அருவமான ஓவியமாக வரைந்து முடித்தவுடன் குழந்தைகளை வந்து வரையும் படி அழைப்புவிடுத்தார், அங்கிருந்த குழந்தைகளும் முழு மனதுடன் அழகாக தாம் கற்றதை வரைந்தார்கள். அங்கு வந்திருந்த குழந்தைகளுக்குள் ஓவியரின் குழந்தை உள்ளடங்கலாக தமிழ் உயிரெழுத்தினை மிக நன்றாக சுவரில் வரைந்தார்கள். படங்களை நீங்கள் பார்வையிடலாம். இது ஒரு உற்சாகமான நிகழ்வாக இருந்தது. தனித்தே ஒரு மொழியடையாள நிகழ்வாக இது இருக்கவில்லை, இது புலம்பெயர் மக்களின் நினைவுகளை வருங்காலத்திற்கு கடத்தும் நிகழ்வாக இருந்ததாகவே நான் உணர்ந்தேன். ஓவியர் வாசுகன் இலங்கை உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு 90களின் இறுதியில் புலம்பெயர்ந்தவராவார். அவரது ஓவியங்களில் அவரது புலம்பெயர்வின் தாக்கத்தினை நாம் பார்க்கலாம். இந்த ஓவிய நிகழ்வு மொழி தோன்றிய பின்னர் எழுத்து வடிவங்கள் பரிணாம் அடைந்த மற்றும் வளர்ச்சியடைந்த சூழ்நிலையில் மனிதர்கள் தொடர்ச்சியாக இன்றுவரை பயன்படுத்திவரும் கருவிகளையும் காட்சிப்படுத்தியிருந்தார். அங்கு கற்பாறை, மரக்கொம்பு, மரப்பட்டை, நீண்ட காய்ந்த தாலிப்பனை ஓலை, நூல், எழுத்தடிக்கும் இயந்திரம், கணினி விசைப்பலகை, பழைய ஐ-போன் உள்ளடங்கலாக பல கருவிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அதில் அவரது தாய் பயன்படுத்திய முள்ளுப்பன்றியின் முள், தைத்த நூல் மற்றும் எழுத்தணிக்கலை வண்ணங்களை உருவாக்க பயன்படும் மூல்பொருட்கள் என அனைத்தும் காட்சிப்படுத்தியிருந்தார். இது எழுத்தின் வரலாற்றினையும் அதன் தோற்றத்தினையும் பற்றியது மட்டும்மல்ல எழுத்தின் நிகழ்கால இருப்பினையும் அதன் தொடர்ச்சியையும் வரும் சந்ததிக்கு எடுத்துரைப்பதாக இருந்தது. அது மட்டும்மல்ல துன்பியலான புலம்பெயர் மக்களின் அனுபவங்களை வருங்கால சந்ததிக்கு கடத்துவதாகவும் இருந்தது. இது தமிழ் புலம்பெயர் ஓவியரின் ஒரு போர்ப்பிரகடனமாகும். ஒரு மக்கள் கூட்டத்தின் அடிப்படை ஜனநாயக விழுமியங்களை அழித்து அதன் இலக்கிய மற்றும் கலை வரலாற்று பொக்கிசங்களை தடங்களை எரித்தழித்த நிகழ்விற்கு எதிரான ஒரு எதிர்வினையாகவும் இதை பார்க்கலாம். பாதி எரிந்தும், எரியாததாகவும், எரிந்து கரியாகவும் தமிழ் வரைகலை எழுத்துக்கள் (Tamil graphical characters) தொங்கிக்கொண்டிருந்தன. நூலில் தொங்கிய எழுத்துக்கள் நூலையும் நூலகத்தையும் நினைவு படுத்தின.
ஓவியக்கண்காட்சியின் உச்சமாக அது இருந்தது. புத்தகங்களை எரிப்பதற்கு அழைப்புவிடுவதும், மானிட நாகரீகத்தின் தேட்டங்களை, கலை இலக்கிய பொக்கிசங்களையும் அதன் தொடர்ச்சிகளையும் எச்சங்களையும் எரிப்பதும் அழிப்பதும் முதலாளித்துவ தேசியவாதத்தின் அடிப்படையான ஜனநாயவிரோத பாசிசம் பண்பாகும். இந்தக்கண்காட்சி அதை ஆழமாக பேசாவிட்டாலும் இந்த நிகழ்வில் பொதுநூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் நினைவுகூறப்பட்டது தற்செயலான நிகழ்வல்ல...
Facebook
செழியன் 28.10.2021