Generation
Acrylic on Canvas 160 x 340 cm @ Le Salon Indien Paris Video & Photos by RJ Mano Urban Studio Paris |
Maker on paper 14.8 x 21 cm
அடையாளம்,
அடையாள அட்டை அத்தியாவசியமானது. பிரான்சு நாட்டில் அகதி அந்தஸ்து கோரிய பொழுது, கறுப்பு மைகளில் எனது விரல்கள் ஒத்தப்பட்டு பிரதி எடுக்கப்பட்டன பிரதி எடுக்கப்பட்டவை பிற்காலத்தில் கணணி மயமானது. ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் கணணிகளுக்கு உத்தியோகபூர்வமாக பரப்பப்பட்டன. இளவயதில் வாழ்வை கணிக்க சாஸ்திரங்களுக்கு நம்பிக்கையுடன் நீட்டிய கைரேகைகள் பிற்காலங்களில் அதன் மேல் நம்பிக்கையில்லாமல், அதே ரேகைகள் இங்கு அகதி அந்தஸ்தின் அடையாளமாக. அர்த்தங்களை புரட்டி போட்ட கைரேகைகள் அச்சுப்பதிப்பு முறையில் ஓவியமானது.
எனது மகன் பிறந்த கட்டிலில் படிந்த அவனது கையடையாளங்களும் காலடையாளங்களும் என்னை பூரணமான சிந்தனைக்குள்ளாக்கியதோடு அப்பா என்றொரு உத்தியோகோபூர்வ அந்தஸ்தை தந்தது. அவனது ஒவ்வொரு பிறந்த தினத்திலும் கை, காலடையாளங்கள் கித்தானில் அச்சுப்பதிப்பு ஓவியங்களாக்குவது வழக்கம். அதுவும் எனது மரபணுவின் அடையாளங்களே!!