திரவியம் தேடி திசையெங்கும் பறந்தாலும் வாழ்நாள் முழுவதிலும் தாம் கல்வி கற்ற கல்விச்சாலையுடன் உறவைப் பேணுவதில் ஈழத்து மாணவர்கள் தனித்துவமானவர்கள். யாழ் குடாநாடு அதிலும் ஒருபடி மேல். உத்தியோகபூர்வமாகவும் அகதிகளாகவும் உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்து பழைய மாணவர்கள் கல்வி கற்ற பாடசாலைக்கு உதவுமுகம் ஒன்றுகூடல் நூல் வெளியீடு என புகலிடத்திலும் ஓர் பண்பாட்டை பேணுகின்றனர். வாழையடி வாழையாக தொடரும் இச்செயற்பாடு இன்று நேற்று தொடங்கியதல்ல, ஈழத்து பண்பாட்டு விழுமியங்களில் பிரதான செயற்பாடுகளில் ஒன்று. அவ்வழியே யாழ் மகாஜனாக் கல்லூரியில் ஒன்று கூடல் ஆசிரியர்கள் கௌரவிப்பு கலை நிகழ்வு நூல்வெளியீடு என ஆரோக்கியமான நிகழ்வொன்று வழமைபோல் நிகழ்ந்தது சென்ற கோடையில்.
கோடை விடுமுறை இவ்வருடம் பயணிகள் மத்தியில் உற்சாகமான பரபரப்பான சூழலை உருவாக்கிற்று. ஐரோப்பாவில் எரிபொருள் விலை உயர்விற்கு சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த இரு நாடுகளுக்கிடையே தொடரும் யுத்தமே பிரதான காரணி. காரணியாக விலைவாசி உயர்ந்துள்ளபோதும் அமெரிக்கா ஐரோப்பா கண்ட வாசிகளின் கோடை சுற்றுலா பயணம் இவ்வருடம் சாதகமே. இரு வருட பெரும் தொற்று கொரோனா முடக்கத்திற்கு பின்னரான இக்கோடையில் பயணிகள் திசை எங்கும் உல்லாசமாகப் பறந்தனர். "ஈசல்கள் புற்றில் இருந்து வெளிவருவது போல".
மறுமுனையில் இலங்கையில் உல்லாசப் பயணிகளின் வருகை இவ்வருடம் பெரும் விட்ச்சியே. திட்டமிடப்பட்ட இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி என்பது நமக்கு புலப்படா நாடகமே. மூன்று தசாப்தங்களுக்கு மேலாக உள்நாட்டு யுத்தம், தலை நிமிர கோவிட் -19ன் தாக்கம் பின் தொடர்ந்த பொருளாதார வீழ்ச்சியென நிர்கதியாகியுள்ளது இந்து சமுத்திரத்தின் முத்து என அழைக்கப்படும் இலங்கைத் தீவு. நவரத்தினங்களும் கனிய வளங்களும் இயற்கைவளங்களும் இரண்டு இயற்கை வனங்களும் தேயிலை, வாசனைத் திரவியங்கள், தைத்த பருத்தி ஆடைகள் ஏற்றுமதி, விவசாயம், இரு பருவ மழை, இடைவிடாது ஓடும் ஆறுகள், மின் உற்பத்திக்கு உகந்த பாரிய அருவிகள், கடல் வளங்களையும் தனதாக்கும் சொர்க்க பூமி அந்த நாகதீபம். பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட இன மத மொழி வேறுபாடற்ற மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டத்தினால் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் அகதி ஆனது பதிவு. சிலோன் - கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் கப்பல் பாதையின் நடுவே அமைந்த ஓர் அழகிய அரசியல் நாடக மேடை தான். காலம் காலமாக பல நாடகக் கலைஞர்களையும் பல வேடங்களையும் பல நாடகங்களையும் கண்ட பூமி அது, "செரெண்டிப்" தீவு (இலங்கை). பார்வையாளர்கள் பாவம் நாங்கள். பி. ஏ. காதர் 'காக்கையில்' எழுதும் "இலங்கையின் இன்றைய அரசியல் பொருளாதார நெருக்கடி" என்ற தொடர் கட்டுரை தற்கால இலங்கை பற்றிய புரிதலை பரப்பி விடுகிறது வாசகர்கள் மத்தியில். துபாயில் நடந்த T-20 ஆசியா கிரிக்கெட் கோப்பை 2022ஐ ஞாயிறு 11.09.2022 (அமெரிக்காவில் இரட்டை கோபுரம் சரிந்த 21து ஆண்டு தினம்) அன்று இலங்கை அணி சிறப்பாக விளையாடி வெற்றிக் கிண்ணத்தை பெற்றனர். இறுக்கமான வாழ்வியலில் சிக்குண்ட உள்நாட்டு மக்களுக்கு வெற்றிக்களிப்பு, ஒரு நாள் ஆறுதல் பரிசு.
ஈழத்தில் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தனக்கென ஒரு அடையாளத்தை தக்க வைக்கும் மகாஜனக் கல்லூரி தெல்லிப்பழையில் ஞாயிறு 07.08.2022 தினத்தன்று நமது 95ம் ஆண்டு உயர்தரம் கல்வி கற்ற மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வினை மனநிறைவுடன் நடத்தினோம். உலகெங்கும் பரந்து வாழும் சகபாடிகளும் தாயகத்தில் வசிக்கும் சகபாடிகளும் ஒன்றுகூடி திட்டம் வகுத்தோம் நிகழ்வை செப்பனிட. பலர்வகுப்பு 1982 தொடக்கம் 95ம் ஆண்டு A/L வரைக்கும் எமக்கு கல்வி கற்பித்து தற்போதும் வாழுகின்ற எமது ஆசிரியர்களை கௌரவித்து விருந்துபசாரம் அளிப்பது முதன்மையான நோக்கம். யாழ்குடாவில் 90ன் ஆரம்பத்தில் போரினால் பலாலி விமான நிலையத்தை அண்டிய பிரதேசங்களில் ஏற்பட்ட இடப்பெயர்வுகளினால் கல்லூரிகள் பல ஸ்தம்பிதம் ஆயின. வேறு கல்லூரிகளில் மாலை நேர பாடசாலையாக மகாஜனா இயங்குவதில் ஏற்படும் அசௌகரியங்களை மனதில் கொண்டு. மகாஜன அதிபரும் ஆசிரியர்களும் 94ம் 95ம் ஆண்டு மாணவர்களும் மற்றும் பழைய மாணவர்கள் அபிவிருத்தி சங்கங்களின் நிதி உதவியோடு ஒன்றிணைந்து மருதனார்மடத்தில் பற்றைக் காடு ஒன்றினை துப்பரவு செய்து கல்லூரியை தற்காலிகமாக நிறுவினர். சமருக்கு மத்தியிலும் பல ஆபத்துக்களை கடந்து சென்று பனை மரம்வெட்டி இதர பொருட்களையும் சேகரித்து இரவு பகல் பாராது கொட்டில்கள் அமைத்து மகாஜனாக் கல்லூரியின் வடிவமைப்பிலேயே மீண்டும் ஸ்தாபித்தனர். உயர்தரப்பரீட்சைகளும் இல்ல விளையாட்டுப் போட்டிகளும் பாடசாலை நிகழ்வுகளும் அந்தக் கொட்டகைக்குள் நிகழ்ந்தது, அதிசயம்தான். இவ்வாறாக கல்லுரியில் கடந்து வந்த காலத்தை ஆவணப்படுத்தப்பட வேண்டிய ஆவணப்படுத்தப்படாத பக்கங்களை அச்சில் ஏற்றுவது இன்னொரு முக்கிய நோக்கம். 224 பக்கங்கள் கொண்ட 230 மலர்களுக்கு அச்சகத்துடன் நிர்ணயிக்கப்பட்ட விலையும்,இலங்கையில் நிலவிய கடதாசிப் பஞ்சத்தால் மூன்று மடங்கு அதிகரித்தது. ஆவணப்படுத்தலின் அவசியத்தை கருத்தில் கொண்டு மலர்குழுவில் தீர்மானிக்கப்பட்டு பொதுக் குழுவினால் ஆமோதிக்கப்பட்டு ஆரம்பமானது பணி. "மகாஜனங்கள் 95" தலைப்பிலான மலரை யாழில் அச்சிடுவது என முடிவு செய்தோம்.
கால்நூற்றாண்டு இடைவேளைக்குப்பின் சமூக வலைத்தளத்தில் ஒன்றுகூடிய நாம் பல நினைவுகளை மீட்டொம். யுத்தத்தின் மத்தியிலும் கற்றுத்தேர்ந்து பட்டதாரிகளாகவும் பல்துறைகளிலும் உலகெங்கும் பரந்து வாழும் எமக்கு, தாய்நிலத்தின் ஞாபகங்களே மிச்சம். அதன் வெளிப்பாடே கல்லூரியின் நிகழ்ந்த ஒன்றுகூடல், ஆசிரியர்கள் கௌரவிப்பு, மலர் வெளியீடு, மதிய போசனம், நமது பிள்ளைகளின் ஆடல் பாடல், உரைகள், கூடி வளவளாவுதல் என்பன. 'குண்டுகள் விள விள குண்டும் குழியுமான ஓடுபாதையில் இறக்கைகளை விரித்து வானில் ஏறிய விமானம்' போல " மகாஜனர்கள் 95" மலரை மலராக்குவதிலும் நிகழ்வை ஒழுங்கமைப்பதிலும் நேர்கொண்ட சிரமங்கள் பற்பல. 1982 -95ம் ஆண்டு வரை நாம் கல்வி கற்ற காலத்தில் நினைவுகளே மலரின் பிரதான ஆணிவேராக இருப்பினும் அதனை மையம் கொண்டு பக்க வேர்கள் ஆக மேலும் சில காத்திரமான தகவல்களையும் உள்வாங்கினோம். ஆறு மாத காலத்தில் நமது 13 வருட மகாஜன கல்வி பயணத்தை கால் நூற்றாண்டிற்கு பின்னரும் ஞாபகமீட்டி தரவுகளை பதிவுவாக்கம் செய்வதென்பது விஷப்பரிட்சை தான், வேறு வழி!! களம் இறங்கினோம். பூரண ஒத்துழைப்பும் மனம் உணர்ந்த இயக்கமுமே மலருக்கான பெறு பேறு. அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் புகைப்படங்கள் தகவல்கள் ஆசிரியர்களது ஆக்கங்கள் நமது கட்டுரைகள் காலவரிசையில் மேலும் தகவல்கள் மலரில் உள்ளடக்கம். ஆக்கங்கள் சேகரிபதற்கும் மலரை ஆக்குவதற்கும் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் எமக்கு மின்னஞ்சல் சமூக வலைத்தளங்களில் இலவச சேவையும் நம் சுட்டு விரலோடு ஒட்டி நிற்கும் குறுந்திரை பேசிகளும் ஊன்றுகோல்கள்கள் ஆயின.
அனா தொடக்கம் அஃனா வரைக்குமான மலர் சார் செயற்பாடுகளில் நடந்தேறிய தடங்கல்கள், வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் நமக்கு தொடர்பாடலின் போது ஏற்படும் நேரசிக்கல், ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வியலின் வேலைப்பளுக்களும் குடும்ப சுமைகளும், இலங்கையில் மின்சார துண்டிப்பு(Power cut) குறிப்பிட்ட தேதியில் கட்டுரைகளை சேகரிக்க முடியாமை, கட்டுரைகளை கணினியில் எழுத்துருவாகுகையில் வெவேறு நாடுகளில் எழுத்துருவின் வடிவ மாற்றங்கள் ஒத்துழைக்காமை, 80ம் ஆண்டு புகைப்படங்கள் சேகரித்தல், புகைப்படங்களின் வண்ண அழகியல் தரம் மாறாது தரவிறக்கத்தில் சிக்கல், நிதிசேகரிப்பு என பல சிரமத்திலும் தொடர் ஓட்டமே ஓட்டம்தான். ஒரு கட்டத்தில் மனச்சோர்வும் மன அழுத்தமும் மலர் குழுவை சூழ்ந்துகொண்டது. மலர் வடிவமைப்பில் சாவகச்சேரி மிக்கி அச்சகமும் மலர் குழுவும் இடைவிடாது இயங்கிய அந்த இறுதி மூன்று நாட்கள் களைப்பான ஆரோக்கியமான அனுபவம்தான். கல்சியம் நிறைந்த முட்டை கோதுகளை உடைத்துக் கொண்டு "மகாஜனர்கள் 95"மலரென்ற பட்சி வெளிவந்தது யாழில். மகாஜனா துரையப்பா மண்டபத்தில், நிகழ்வில் அனைவரது கைகளிலும் மலர் தவழ்ந்தது மகிழ்ச்சியே. ஆசிரியர்கள் ஆசியோடும் நமது கூடுகையோடும் எமது சிறார்களின் அடல் பாடலோடும் இனிதே பூரணமானது நிகழ்வு. அன்று பின்னேரமே நிகழ்வின் பின்னூட்டத்தையும் பேசிக்கொண்டோம். பின்தொடர்ந்த நாட்களில் 'அந்தி சாய குருவிகள் கூடு செல்வது' போல், நாமும் வழமையான வாழ்வுச் சக்கரத்தில் மறுபடியும் புகுந்துகொண்டோம். தொடர்பாடல்களும் குறைந்தே காணப்பட்டது எமது 95 வைபர் என்ற சமூக வலைத்தளத்தில் .
புதிய சூரிய உதயம் போல் - இலக்கிய ஆளுமை நாடக ஆளுமை நமது விஞ்ஞான ஆசிரியர் கலாபூசணம் திருமதி கோகிலா மகேந்திரன் அவர்கள் யாழிலிருந்து மலர் குழுவுடனும் மலரின் வடிவமைப்பை முன்னெடுத்த என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டுமென நிகழ்வை ஒழுங்கு படுத்திய கிரிதரனிடம் தெரிவித்திருந்தார். அதேநாளில் ஆர்வத்தோடு குறுந்திரை பேசியில் அழைத்து உரையாடுகையில் குறுந்திரையில் விழுந்த இருவரது முகங்களையும் ஒளியோவியமாக்கினேன். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு எனது ஆசிரியருடன் காணொளியில் உரையாடியதும் ஒர் ஆவணம் தான். புத்துயிர் பெற்றேன் சோர்வான அன்றய தினத்தில். ஆசிரியருடன் உரையாடும் ஆர்வத்தில் பாடசாலை சீருடை நிறமான வெள்ளைநிற ரி -சேர்ட்டை அணிந்தேன் என்னை அறியாமல். சிறுவர் உளவியல் அறிந்த ஆசிரியர் ஆகையால் பக்குவமான மென்மையான பேச்சிலும் காத்திரமான சொல்லாடலிலும் மௌனமானேன். சிந்தனையில் சிறகடிக்கும் எனது முளை இரண்டு பிரிவுகளாக இயங்கிய அத்தருணத்தில். ஒருபக்கம் ஆசிரியரின் உரையைப் பதிவு செய்தது மற்றயது பாடசாலைக்காலங்களை மீட்டியது உரையாடலில்.
திருமதி கோகிலா மகேந்திரன் ஈழத்து இலக்கியப் பரப்பில் மிக முக்கியமான ஒரு பெண் ஆளுமை. அவர்களது காலத்தில் நாம் வாழ்வது மட்டுமல்ல எம்மோடு சமமாக பயணிப்பதும் இன்றும் மாணவர்கள் ஆகவே உணரும் நமக்கு மாபெரும் உந்து சக்தி. இலக்கிய வித்தகர் 1986 கலைச்சுடர் 2004 சமூக ஒளி 2010 கலாபூஷணம் 2014 சமூக திலகம் 2016 கலைப்பிரவாகம் 2017 - வழங்கப்பட்ட கௌரவப் பட்டங்கள் இவருக்கே உரித்தானவை. பன் சாதகமான பல பின்னூட்டங்களை னாலை சேர் கனகசபை வித்தியாலயம், மகாஜனா கல்லூரி தெல்லிப்பழை(1959 - 68) பேராதனை பல்கலைக்கழகம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி போன்றவற்றில் கல்விகற்ற இவர் ஆசிரியராக பல பாடசாலைகளில் உத்தியோகபூர்வமாக பணியாற்றியிருந்தாலும் மகாஜனா கல்லூரியில் 1982 -93 வரை விஞ்ஞான பாடத்தை கற்பித்த காலம் பிரத்தியேகமான காலம் தான். பிரம்புகள் கையில் ஏந்தாமல் கோபம் கொண்ட முகபாவனை இல்லாமல் அன்பான மென்சொற்களால் எம்மை கட்டிப்போட்டார். இயற்கை பற்றி பேசும்போதெல்லாம் உயிர்ச் சங்கிலியின் முக்கியத்துவம் எவ்வாறு ஞாபகம் வருகிறதோ,அவ்வாறு உயிர்ச் சங்கிலி பற்றி பேசும்போதெல்லாம் நமது விஞ்ஞான ஆசிரியர் கரும்பலகையில் வெண்வெட்டியால் வரைந்த படங்களே ஞாபகம். வெண்கட்டியின் தூசுகள் நுரையீரலை பாதிப்பதையும் பொருட்படுத்தாது பாடம் கற்பித்து எம்மை ஆளாக்கி , தமது வாழ்நாளை அர்ப்பணித்த ஆசிரியர்கள்...
கோகிலா ஆசிரியர் என்ற பெரும் ஆளுமை நமது மலர் "மகாஜனர்கள் 95" ஐ இம்மி இம்மியாக ரசித்து தானாக முன்வந்து மலர் பற்றிய சாதகமான பல பின்னூட்டங்களை உரையாடலை சமூக வெழி தளத்தில் எம்மோடு பகிர்ந்தது, பெருந்தகைகளுக்கே உரிய பெருந்தன்மை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் அரபித்தார் மலரின் வாசகனாக. முன் அட்டை ஓவியம் பின் அட்டை ஒளிஓவியம் வள்ளுவர் ஆண்டு பாடசாலையின் மண் நிறம் வெண் நிறம் பற்றிய அழகியல் கூறி முன் பக்கங்கத்தில் பாடசாலையின் வாசகம் ஆன "உன்னை நீ அறி" எழுதப்பட்டிருப்பதன் முக்கியத்துவத்தையும் நூலின் நாற்பத்தைந்தாவது பக்கம் வெறுமையாக விடப்பட்டு எமது வயது நாற்பத்தைந்தை மறைமுகமாக பிரகடனப்படுத்தும் அழகியலையும் முன்வைத்தார். ஒளிஓவியங்கள் கட்டுரையோடு அழகாகவும் திருத்தமாகவும் ஒழுங்குமுறை அளவுகள் பின்புறத்தின் வர்ணங்கள் குறித்தும், எண்பதாம் ஆண்டு காலத்தை நினைவு கூறும் பொருட்களையும் எனது ஓவியம் குறிப்பாக விசிறி வாழை ஓவியங்கள் குறித்தும் கோடிட்டார். கட்டுரையின் தலைப்பின் தனித்துவமாகவும் கவித்துவமாகவும் சிறுகதைகளுக்கான தலைப்பாகவும் உணரக்கூடியதை உணர்த்தினார். சில கட்டுரைகளின் சிறப்பு குறித்து சிலாகித்தார். மகாஜனா என்ற மாபெரும் நிறுவனத்தை நோக்கிய ஒட்டுமொத்த கட்டுரைகளும் நேரிய பார்வை கொண்டதாகவும் பின்வரும் காலங்களில் கவனிக்கப்படவேண்டிய ஆரோக்கியமான கருத்துக்கள் பற்றியும் கூறினார். மலரின் கடைசி பாடலான கடைசி கட்டுரையில் ஒரு வரி "அறத்தையும் அள்ளிக்கொண்டோம்" முன்வைத்து ஒட்டுமொத்தமாக மலர் குறித்தும் எமது செயற்பாடு குறித்தும் புளகாங்கிதம் அடைந்தார். அவரது 20 நிமிட உரையில் நெகிழ்ந்தே போனோம்.
ஊக்கியாக அமைந்த மலர் பற்றிய ஆசிரியையின் பின்னூட்டம். தயாரிக்கப்பட இருக்கும் மலருக்கு வித்தானது.