மெலொன்கொலி
மெலொன்கொலி - சோகம் : எனும் ஓவியம் - சர்ச்சைக்குரிய எதிர்காலத்தை எதிர்நோக்கி நம்பிக்கையற்று கிடைத்த வேலைகளை செய்யும் சைப்ரசில் வாழ்ந்த ஈழத் தமிழ் மாணவனை பிரதிபலிக்கிறது. சைப்ரசில் 40° டிகிரியில் கதிரவன் கக்கும் வெக்கையின் அகோரத்திலும் கல்வியும் வேலையுமாக அலையும் மண்ணிற இளைஞனின் தோலில் கதிரவனின் கதிர்கள் பட்டு பச்சை சிவப்பு செம்மஞ்சள் வர்ணங்களின் பிரதிபலிப்பை ஓவியத்தில் காணலாம். தாவரங்களையும் கடலையும் விரும்பும் மாணவனின் உணர்வு குருத்துப்பச்சை கடல்நீல வர்ணங்கள் - இடமும் வலமுமாக பரப்பப்பட்டுள்ளது கித்தானில். ஓவியம் தற்போது சைப்ரஸ் தலைநகரின் நிக்கோஸியா முன்னாள் நகர பிதாவின் காப்பகத்தில் பேசுபொருளாக (Pierides permanent collection 2000)
ஓவியர் - கிளின் - கார்மேகங்களும் நிலக்கரிகளும் சூழ்ந்த வடக்கு வெய்ல்ஸ் North Wales நாட்டில் பிறந்து, ஓவியம், நாடகம், மேற்படிப்பை லண்டனில் கலைக்கல்லூரியில் முடித்து, ஓவிய ஆசிரியராக பணிபுரிந்தார். இரண்டாம் உலக யுத்தத்தின் பாதிப்புகளோடு ஆங்கில காலனித்துவ நாடான சைப்ரஸ் நாட்டிற்கு பயணப்பட்டார் - புகையிரதம் கப்பல் மோட்டார்வண்டி ஊடாக. ஓவியதிற்கே அச்சாணியான வெளிச்சம், காலநிலை, மத்தித்தரை கடலின் வர்ணத்திலும் ஈர்க்கப்பட்டு 1956ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு இயற்கை எய்தும் வரை அத்தீவிலேயே வாழ்ந்து வரைந்து அறியப்பட்ட ஓவியரானார். இடமாற்றங்கள், பயணங்கள், அரங்கியல் வடிவமைப்புகள், கருத்தரங்குகள், காண்பியங்கள், எழுத்துக்கள், ஓவியங்கள் என அவரது 50 ஆண்டு கலைப்பயணத்தை 2004ல் வெளிவந்த சுயசரிதை ஓவிய நூல் விபரிக்கின்றது ஆவணத்துடன். ஆங்கில காலனித்துவ நாடுகளின் வரலாற்று சச்சரவுகள் பற்றி நன்கு அறிந்தவர், அவற்றின் தாக்கம் அவரின் கித்தானிலும் தென்பட்டன.
சைப்ரஸ் 1960ல் சுதந்திர நாடானது, அதே ஆண்டில் பிரான்சில் ஓவியக்கலை கற்ற சைப்ரஸை பூர்வீகமான கிறிஸ்தோபொரோஸ் சவா Christoforos Savva உடன் இணைந்து தீவில் முதலாவது நவீன ஓவியக்கலைக்கூடத்தை அபோபாஸிஸ் APOPHASIS என்ற பெயரில் நிறுவினர். தீவின் மூன்றில் ஒரு பகுதி வட நிலத்தை 1974ல் துருக்கி ஆக்கிரமிக்க அகதியாக தெற்கு நோக்கினர். லண்டனில் வசித்த காலத்தில் இலங்கை ஓவியருடன் (Imogen KANNANGARA) இணைந்து பட்டிக் Batik ஓவிய செய்முறையை பயின்றார். பட்டிக் பாணியில் ஓவியங்களும் அரங்கியலிலும் 1974ன் அகதிவாழ்வுபற்றிய பேசின. கிரேக்க நிலமான தென்பகுதியில் ஓய்வூதியம் பெறும் வரை ஓவிய ஆசிரியராகவும் பணிபுரிந்தார் சமாந்தரமாக நான்கு தசாப்தங்களுக்கு மேலாக சினிமா நாடகம் ஓவியம் சார் கட்டுரைகளை பத்திரிகைகளில் பிரசுரித்தார். குறிப்பாக தீவின் முன்னணி ஆங்கில செய்தித்தாளான சைப்ரஸ் வீக்லி பத்திரிகையில் Cyprus Weekly News Paper கலைக்கான இரு பக்கங்கள் இன்றும் பேசப்படுவது அவருக்கே உரிய தனித்துவம். பிரிட்டிஷ் கவுன்சில் British Council நூலகத்துடன் கூட்டாக பல குழு ஓவிய காட்சிகளை நிகழ்த்தி தரமான ஓவியர்களை அங்கீகாரப்படுத்தினார். சைப்ரஸ் அதென்ஸ் பேரூட் சீனா ஜெர்மனி சுவிற்சர்லாந்து ஆஸ்திரேலியா அமெரிக்கா வெய்ல்ஸ் போன்ற இடங்களில் இவரது ஓவியங்கள் காட்சிக்கு சென்றன. 2015ம் ஆண்டு தலைநகர் நிகோசியாவில் நீமக் NiMAC (Nicosia Municipal Arts Centre) கலைக்கூடத்தில் பிரமாண்டமாக இவரது முக்கிய படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்வை சைப்ரஸ் ஜனாதிபதி திறந்து வைத்து பேசுகையில் - கிளீன் ஹியூஸ் ஓவிய மாணவர்களுக்கும் ஓவியர்களுக்கும் முன்மாதிரியாகவும் உறுதுணையாகவும் ஊக்கியாகவும் வழிகாட்டியாகவும் இயங்கிய தீவின் பிரதான நவீன ஓவியராவார்.
கிளினின் படைப்புக்களை நோக்க - www.glynhughesart.com

வளர் சஞ்சிகை
காலாண்டிதழ் - இதழ் 07 - மகாஜனர் 79
May 2024 VP. வாசுகன்
காலாண்டிதழ் - இதழ் 07 - மகாஜனர் 79
May 2024 VP. வாசுகன்