Notre Dame - எங்கள் மாதா
900 ஆண்டுகள் பழமைவாய்ந்த "நோத்ர் டாம் பாரிஸ்" தலமைத் தேவாலயத்தை தின்றுசெரித்த தீ 15.04.2019 - "ஐபில் கோபுரம்" விளக்கணைத்து அஞ்சலி செலுத்திய கொழும்பு, கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம் 21.04.2019
பாரிஸ்
சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் பாரிஸ் நகரத்தின் வரலாற்றுச் சின்னங்களையும், நவீன கண்ணாடி கட்டடங்களின் நெரிசலையும் கடந்து, விசாலமான சென் (Seine) நதிக்கு மேலாகப் பட்டுதெறிப்பதை காணக்கிடைப்பது பெரும் கொடை. தலைநகரை 'U' வடிவில் ஊடறுத்துச் செல்லும் சென் நதியும், அதன் நடுவே அமைந்த இரு குட்டித் தீவுகளும், பாரிஸ் ஒரு வர்த்தக மையமாக உருவெடுத்ததற்கான வரலாற்றுப் பின்னணியை கம்பீரமாகப் பறைசாற்றுகின்றன.
கட்டுப்பாட்டுடன் கட்டமைக்கப்பட்ட கட்டிடக்கலையும் சென் நதியின் அழகியல் பாரிஸ் நகரத்திற்கு ஒரு தனித்துவமான அழகை அள்ளித்தெளிக்கின்றன. முகிலை முத்தமிடும் "ஈபிள் கோபுரம் Eiffel Tower" (வருடாந்தம் சுமார் 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள்), உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமான "லூவ்ர் அருங்காட்சியகம் Musée du Louvre" (500,000-ம் அதிகமான கலைப் படைப்புகள் சேகரிப்பில் உள்ளன அதில் இத்தாலிய ஓவியர் "டாவின்சியால்" வரையப்பட்ட "மோனாலிசா ஓவியம்" முதலிடம்), மற்றும் "கொத்திக்" கட்டிடக்கலையின் உன்னதமான "நோத்ர் டாம் Notre-Dame" ஆகியவை முதல் மூன்று முக்கிய, கலை வரலாற்று பின்னணியோடு கூடிய வர்தகமீட்டும் தளங்கள். இவை தவிர போதும் போதும் பட்டியல் நின்றுகொண்டு போகுது என்ற அளவுக்கு களிப்பூட்டுவன பல...
சென் நதியில் படகுப் பயணத்தில் Bateau-Mouche பாரிஸின் புகழ்பெற்ற பாலங்களையும், மன்னர் கதைகளையும் போர்களையும் மக்கள் புரட்சியையும் பேசும் வரலாற்று கட்டிடங்களையும் கண்டு ரசிப்பது பயணிகளுக்கு ஒரு போதைதான். குறிப்பு - இருள் சூழும் வேளையில் இதமான குளிர் வீச சூடேற்றிய படகுக்குள் நுழைகையில் காதலர்கள் தம்மையறியாமலே கட்டி அணைப்பது தவிர்க்க முடியாத ஒன்று. சென் - கங்கைக் கரையெங்கும் வரிசையில் நடப்பட்ட பிரத்தியேக மின்குமிழ் வெளிச்சத்தில் பரிஸை ரசிப்பதே ஒரு போதைகலந்த காதல் தான். சென் கங்கைக் கரையோரம் நேர்த்தியாக வரிசையில் நடப்பட்ட வளர்ந்த மரங்களின் மருங்கில் அமைந்த கஃபேக்களில் வெளியே அமர்ந்து மூன்று முடக்கில் குடித்துமுடிக்கும் குட்டி கோப்பி Espresso அருந்திக்கொண்டு, உல்லாசப் பயணிகளை நிரப்பி அசைந்தாடி வரும் படகுகளை வேடிக்கை பார்ப்பது ஒருவித ஆறுதல் தரும் தருணங்கள். ஒளி வடிவமைப்பு நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற ஓவியர்களால் மிக நுணுக்கமாக கண்ணுக்கும் கட்டடத்திற்கு தொந்தரவு இல்லாமல் பரிசெங்கும் பூட்டப்பட்டுள்ள வர்ண மின்குமிழ்களின் அழகியலே ஓவியம்தான். இதைத்தான் "பாரிஸ் பை நைட் - Paris by night என்கிறார்களோ. அதிலும் அவ்வழகியலின் அதி உச்சம் ஈபிள் கோபுரத்தில் மின்குமிழ்கள் விட்டு விட்டு மின்ன - பயணித்த படி படகில் உள்ள உணவகத்தில் புசித்துக்கொண்டே பாரிஸை ரசிப்பது ஒரு வாழ்நாள் கொண்டாட்டம்.
"மோன்ட்மார்ட் Montmartre" நவீன ஓவிய புரட்ச்சின் குன்று, "லத்தீன் குவார்ட்டர் Latin Quarter" அறிவுஜீவிகள், எழுத்தாளர்களின் மையம், ஆங்காங்கே அமைந்த பூந்தோட்டங்கள், பாரம்பரிய அருங்காட்ட்சியங்கள், நவீன ஓவியபுரட்ச்சியின் சாட்சியாக நவீன கலைக்கூடங்கள், பாரம்பரியமான உணவகங்கள் - அங்கே பரிமாறப்படும் தரமான திராட்ச்சை மதுரசம் - பாலாடைக்கட்டியும் Cheese., நவநாகரீகத்தின் வர்த்தகம் (குறிப்பாக ஃபேஷன் உடை, வாசனைதிரவிய கலாச்சாரம்) வீதியோரக் கலைஞர்களின் வித்தைகள் என இந்நகரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் கவிதை. உலகெங்கிலும் இருந்து வந்து - பாரிஸ் நகரத்தில் குவியும் பல்லாயிரக்கணக்கான கலாச்சார உல்லாசப்பயணிகளால் "காதல் நகரம் Romantic City" என்று போற்றப்படுவது மிகையல்ல. கலைத் திரைப்பட இயக்குனர் "வூடி அலனின் Woody Allen - மிட்நைட் இன் பாரிஸ் Midnight in Paris" திரைப்படம் இதற்க்கு சான்று பகிலும்.

நோத்ர் டாம் - 2019
கோடையின் ஆரம்பத்தைக் கட்டியமிடும் இளவேனில் காலமாகையால் சூரியனின் மென்மையான வெளிச்சமும் இதமான குளிரும் காற்றும் ஆகாயத்தில் தெரியும் பல வர்ணங்களும் ஓவிய ஒளி அழகியல் - மேற்கத்தேய ஓவியர்களின் ஓவியங்கள் சாட்சி. செயின் நதியில் தெறிக்கும் சூரிய கதிர்களையும் பாரிஸின் கட்டடக்கலையையும் ரசித்துக்கொண்டு நதிக்கு மேலாகச் செல்லும் புகையிரதத்தில் (மெட்ரோ - மின்சாரத்தில் இயங்கும் சிறிய புகையிரதம்) 15 ஏப்பிரல் 2019 பின்னேரம் வழமைபோல் பணிக்குச் சென்று கொண்டிருந்தேன். திடீர் எனத் திகைக்கும் வண்ணம் பாரிஸ் நகரின் நடுவில் அமைந்துள்ள கட்டடங்களுக்கு மேலாக இரண்டு மீட்டர் அளவு தீச்சுவாலையும் புகை மண்டலமும் தெற்கு நோக்கி வீசும் காற்றுடன் கரைந்து கொண்டிருந்தது. அந்தப் புகையிரத பெட்டிக்குள் நானும் எனக்கு அருகாமையில் நின்ற இன்னொரு இளைஞனும் மட்டுமே இக்காட்சியை கண்டோம், மற்றைய அனைவரும் கைத்தொலைபேசி, சஞ்சிகை, பத்திரிகை வாசிப்பவர்களாக. நான் அந்த இளைஞனிடம் - எரியும் சுவாலை "நோத் டாம் - கத்தீற்றலுக்கு" அருகிலே தெரிகிறது என்று. அவனும் வியந்தபடி நோக்க - எமைக்கண்ட சிலரும் மெட்ரொவின் சரளம் வழியாக பார்வையை எறிந்தனர். அடுத்து வந்த சில தரிப்புக்களில் இறங்கி எனது வீட்டிற்கும், காக்கைச் சிறகினிலே குழுவில் இயங்கும் பாரிஸ் நண்பருக்கும் தொலைபேசி அழைப்பு கொடுத்தேன். அவசரமாக தொலைக்காட்சியை பார்க்குமாறு கேட்டுக் கொண்டேன். உள்நாட்டு ஊடகங்கள் ஒன்றுமே உத்தியோகபூர்வமாக தீ விபத்து பற்றிய அறிவிப்புகளை கொண்டிருக்கவில்லை. வேலைத்தளத்திற்கு விரைந்து கணனியில் தேடுதல் கொள்ள - கடந்த 30 நிமிடத்திற்கு பிறகு வெளிநாட்டு ஊடகங்கள் சில ஆங்கில செய்திகளை "நோர்த் டாம் பாரிஸ்" தலைமைத்துவ தேவாலயம் தீப்பற்றி எரிகிறது என்ற செய்தியை வெளியிட்டன. அதன் பின்னரே உள்நாட்டு ஊடகங்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்தன. பிரான்ஸ் அரச ஊடாக கட்டுப்பாட்டு சட்டத்தை ஊகிக்க முடிந்தது. உலகின் முதன்மைச் செய்தியாகி நேரடிக் காணொலியாக ஒளிபரப்பாகியது. உலகமே உறைந்துபோனது. அத்தீச்சுவாலை, தெற்காசியாவில் பெரிய நூலகமாக இருந்த யாழ் நூலகம் தீக்கிரையானதையும் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் கரும்புகை சூழ்ந்த காட்சியும் நிழல்களாக மனதைச் சஞ்சலிக்க வைத்தன. இவ்வாறு உலகெங்கிலும் தீக்கிரையான கசப்பான சம்பவங்கள் ஆயிரம் ஆயிரம்.
தலைப்புச் செய்தியாக உலக ஊடகமெங்கும் தீப்பற்றிய செய்தி பரவிக்கொண்டிருக்க - பரவிக்கொண்டிருக்கும் தீயை அணைக்க ஐந்நூறு தீயணைக்கும் படையினரின் அங்கு விரைந்தனர். தலைமையின் கட்டளையின் கீழ் அவசர முதல் பணியில் படையினர் செயற்பட. மறுபுறம் இப்பிரமாண்டமான சுவாலையை எவ்வாறு கட்டுப்படுத்துவது, கையாளுவதென்ற பயிலுகையை களத்திலே விவாதித்தனர் விரைவாக. மிக உயரமான மரக்கூரையில் படர்ந்த தீக்கு நீர் ஊற்றினால் தீ தேவாலயத்தின் உள் விழுந்து உள் கட்டுமானத்தையும் பல கலைப்பொக்கிஷங்களையும் பல எழுத்து ஆவணங்களையும் நாசமாகிவிடும். ஆதலின் உள்ளே பரவிய வெக்கையை தணிக்கவும் தீ உள்ளே விழுந்தால் பரவாமலிருக்கவும் முதலில் ஒரு மீற்றர் அளவுக்கு சவுக்கர நுரை போல் வெண்நுரையை வேகமாக பீய்ச்சினர். பீச்சிக்கொண்ருக்கும் பொழுதே ஆலயத்தின் உள்ளிருந்த பழைமையான பிரமாண்டமான ஓவியங்கள், சிற்பங்கள், கண்ணாடி வேலை பொருட்கள், எழுத்து ஆவணங்கள் போன்ற பொக்கிஷங்களை அவசரமாக அகற்றப்பட்ட பின்னரே முழுமையாக தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கலைப்படைப்புகளை வீதியில் தீயணைக்கும் படையினர் சிவப்பு சீருடையில் அருகிலிருந்த அருங்காட்சியகத்துக்கு காவிச்சென்ற காட்சியை காணொளியில் பார்த்தேன். சூழ்ந்த போலீசாரும் இராணுவமும் பாதுகாப்பிலும் நகர்ப்புற கண்காணிப்பு காணொளிகளும் 360 டிகிரியில் சுழன்ற படி. கலைப்படைப்புகளை காவிச்சென்ற காட்சி பல புகைப்பட கருவிகளுக்கு விருந்தாகின. மாலை ஐந்தரை மணிக்கு பற்றிய தீ அணைந்து முடிய நடுச்சாமமாகியது.
இரவு பதினோரு மணியளவில் நாகரிக உடை வாசனை திரவிய வர்த்தகர் - பினெஞ்சு கோடீஸ்வர்களில் ஒருவர் தேவாலயத்தின் மீள்கட்டுமாணத்திற்காக மில்லியன் இரோக்களை நன்கொடை அளிப்பதக்க முன்வந்தார். ம் - மறுநாளே பிரென்சு ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன் Emmanuel Macron அவர்களும் பெரும் தொகையை முன்மொழிந்தார். 19ம் நூற்றாண்டில் இவ்வாலயத்தின் கூரையின் நடுவில் மரத்தினால் ஆன தூபியின் மேல் நிறுத்திய சிலுவையும் அதன்மேல் பிரான்சின் தேசிய பறவையான சேவலும் எரிந்து முறிந்து கீழே விழும் காட்சி உலகையே உலுக்கியது. தூபி விழுந்த குறியீட்டு மதம் கடந்து பிரான்சின் கலாச்சார அடையாளமாகவே பார்க்கப்பட்டது ஐயத்தோடு. கத்தோலிக்க மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு இதுவொரு கெட்ட சகுனமாவே உணரப்பட்டது, அதற்காக இவர்கள் தேவாலயத்தின் வெளித்தரையில் மாபெரும் இறை வணக்கத்தை செலுத்தினர். தேவாலயத்தின் திருத்த பணிகள் நடந்து கொண்டிருந்தவேளை ஏற்பட்ட விபத்தால் தீ பற்றிக் கொண்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் மத்தியில் அது திட்டமிடப்பட்ட நாடகமே என்ற செய்தியும் கசிந்தது. கசிந்து பரவிய தீயின் வேக்கை தணிய ஓரிரு தினங்களாகின. கூரை எரிந்த ஆலயத்தை பார்க்க திரண்ட மக்கள் வளமையை விட அதிகம். ஆலயம் ஒரு பேசுபொருளானது. தேவாலயத்தின் முன்னைய காலங்களில் நடந்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட கலை பொக்கிஷங்கள் தற்போது பாரிஸில் உள்ள "ம்யூஸே து க்ளுனெ - Musée de Cluny" போன்ற வேறு சில கலைக்கூடங்களில் சேகரிப்பில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

The Cathedral of Notre Dame in the 15th century, illuminated by the Master of Anthony of Burgundy
கொச்சிக்கடை அந்தோணியார்
|
கொழும்பின் கொச்சிக்கடையில் கொழும்புத் துறைமுகதின் எல்லையில் அமைந்துள்ள புனித அந்தோனியார் திருத்தலம் St. Anthony's Shrine, இலங்கையின் மிகவும் போற்றப்படும் கத்தோலிக்கத் திருத்தலங்களில் ஒன்றாகும். மத நல்லிணக்கத்தின் சின்னமாக - இன, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் வந்து அமைதியையும் ஆறுதலையும் தேடும் ஒரு பொதுவான புனிதத் தலமாகும் .
நோத்ர் டாம் பற்றிய இக்கட்டுரையை வடித்துக் கொண்டிருக்கையில் - இலங்கையில் யாருமே எதிர்பார்த்திருக்காத வேளையில் 21.04.2019 உயிர்த்த ஞாயிறு (easter) அன்று கொழும்பு, கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம் உட்பட தலைநகர் கொழும்பில் அமைந்த உயர்தர விடுதிகளிலும், கொழும்பை அண்மித்த நீர்கொழும்பு செபஸ்தியார் தேவாலயத்திலும், இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பிலுள்ள சியான் தேவாலயத்திலுமாக ஒரே நேரத்தில் பல குண்டுகள் வெடித்தன. இது கொடூர மனித அழிவாக உலகின் கவனத்தை ஈர்த்தது. இலங்கையில் யுத்தம் முடிவுற்ற பத்தாவது ஆண்டு முடிவுற ஒரு மாதங்களே நெருங்கும் வேளையில் மீண்டும் பீறிட்டெழுந்தது மரண ஓலம் இலங்கை மக்களை கதிகங்கச்செய்தது. உலகெங்கும் பரந்து வாழும் கத்தோலிக்கர்களுக்கு இது முழுமையான கவனதிற்குள்ளாகின - பாரீசின் உலக அதிசயங்களில் ஒன்றான ஐபில் கோபுர விளக்கொளி நிறுத்தப்பட்ட அஞ்சலியாகப் பதிவுற்றது. இது போன்று உலகின் பல பாகங்களிலும் ஒவ்வொரு வடிவில் அஞ்சலி நிகழ்வுகள் நிகழ்ந்தன. சில ஊடகங்கள் மூன்று நாட்களாக இச் செய்திகளைத் தொடர்ந்தன. |
1990 இறுதியில் இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேற மீண்டும் யுத்தம் ஆரம்பம் - யுத்த களமுனைகளும், காவலரண்களும் sentry point, முஸ்லீம் மக்கள் வடக்கிலிருந்து தெற்கிற்கு கண்ணீரோடு இடம்பெயர்ந்து கொண்டிருந்த தனியார் பேருந்துக்குள் நானும் அப்பாவும். எதிர்காலத்தின் கல்வியை நோக்கி என்னை புத்தூரில் அரச காரியாலயங்கள் அப்பரைக்கப்பட பின் கொழும்பில் தொழிபுரிந்து கொண்டிருந்த அப்பா கொழும்பிலிருந்து வந்து என்னை மட்டும் கொழுப்புக்கு கூடிச்சென்றார். யாழில் இருந்து பூநகரி ஊடாக மன்னார், வவுனியா கொழும்புக்கு செல்லும் பயணம் சில நாட்களாகின. ராணுவத்தின் பாரா வெளிச்சத்தில் இரவு பயணங்கள் கேள்விகள் நிறைந்தவை. ஒரு நாள் மன்னாரில் மடு தேவாலயத்தை அண்டிய குடிமனையில் அப்பாவின் குடும்ப நண்பர் வீட்டில் தங்கினோம். இலங்கையில் மிகமுக்கய தேவலங்களில் மடுமாதாவும் ஒன்றாகும். மயான அமைதியை கடைப்பிடித்து கொண்டிருந்த வவுனியா தலைநகரத்தில் துவக்கு சன்னத்தின் கோதுகளை மிதித்தும் மிதிக்காமலும் "யாழ்தேவி" புகையிரத்தில் கொழுப்பு சென்றோம். தலைநகரத்தில் துவக்கு சன்னத்தின் கோதுகளின் காட்சி "நிக்கொலாஸ் கேஜ் Nicolas Cage" நடிகனின் "லோட் ஒப்ஃ வோர் Lord of war - 2005" படத்தின் சுவரொட்டியை பாரிஸில் பார்த்தபோது 20 வருடங்களின் பின் அக்கட்சியை மீட்டது. அடுத்தவருடமே 1991 கொழும்பில் என்னை கொடகென - விவேகானந்தா கில்லில் Vivekananda hill குடும்ப நண்பர்களின் வீட்டில் விட்டுவிட்டு அப்பா அம்மாவையும் தங்கை மரையும் கூட்டிவர யாழ்ப்பாணம் சென்றுவர ஒருமாதங்களாகின. அக்காலங்களில் கொழும்பு இந்துக்கலூரிக்கு 112 மற்று 102 இலக்க பேருந்தில் செல்வது வழக்கம். அப்பேருந்துகளின் தரிப்பிடம் அந்தோனியார் தேவாலயத்தினருகிலேயே அமைந்திருந்தால் தேவாலயத்தின் கட்டடக்கலையை தினமும் ரசிப்பதுண்டு. சிலவேளைகளில் உள்ளே சென்ற நினைவுகளும் சில.
இலங்கையில் டச்சுக்காரர்களின் ஆட்சி - 18-ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க மதம் ஒடுக்கப்பட்டிருந்தது. அக்காலகட்டத்தில் மத போதகர்கள் இரகசியமாகவே பணியாற்றினர். இக்கட்டான சூழலில், கோவாவிலிருந்து வருகை தந்த பேதுரு பெரேரா Pedro Ferreira என்ற பூசாரி, கொடகென - கொச்சிக்கடை கடற்கரை ஓரத்தில் இருந்த மீனவ மக்களின் குடிசைகளில் மறைந்திருந்து மத பணியைத் தொடர்ந்தார். மீனவர்களின் பாதுகாப்பான புகலிடத்தில் வளர்ந்த இவ்வழிபாட்டுத் தலம், காலப்போக்கில் அப்பகுதி மக்களின் நம்பிக்கையின் மையமாக. தொடர்ந்த காலனித்துவம் - பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1806ம் ஆண்டில் ஒரு நிரந்தரமான தேவாலயம் கட்டப்பட்டது புனித அந்தோனியாரின் நினைவாக. 1822ம் ஆண்டில் கோவாவிலிருந்து அந்தோனியாரின் திருச்சொரூபம் கொண்டு வரப்பட்டடு நிகழ்வு மிகப்பிரம்மாண்டமான விழாவாகக் கொண்டாடப்பட்டது பக்தர்களால். இத்திருத்தலத்தின் வரலாற்று முக்கியத்துவத்தையும், ஆன்மீகப் பெருமையையும் அங்கீகரிக்கும் விதமாக, வத்திக்கான் கத்தோலிக்க மையம் "சிறிய பசிலிக்கா" Minor Basilica என அறிவித்தது உயரிய கௌரவங்களில் ஒன்றாகும்.

நோத்ர் டாம்
'நோர்த்த டாம்' தலைமை தேவாலயம் 1163ல் தொடங்கி, "கொதிக்" கட்டடக் கலைப் பாணியில் 1345ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது பாரிஸ் 4ம் வட்டாரத்தில். பல பிரெஞ்சு மன்னர்களின் முடிசூடும் விழா இக்கூரையின் கீழேயே நடைபெறுவது வழக்கம் - தேவாலயத்தின் உயரிய பாதிரின் தலைமையில். மன்னர் பரம்பரையில் பிறக்காத நெப்போலின் பொனபார் Napoleon Bonapart தனக்கு தானே முடிசூட்டு விழா வெகு விமரிசையாக நிகழ்ந்ததை ஓவியத்தில் காணலாம் பிரஞ்சு மக்கள் புரட்சி, இயற்கை அனர்த்தம், உலகப் போர், மதங்களுக்கு எதிரான போராட்டம் போன்றவற்றினால் தேவாலயம் பலதரம் பாதிக்கப்பட்டது. அதன் பின் மீள்புனருத்தாரணப் பணியில் அக்கால கட்டத்திற்கு ஏற்ப நாகரிக கலை பாணியையும், புதிய உபகரணக் கருவிகளையும் தேவாலயம் உள்வாங்கிக் கொண்டது வரலாறு.
மக்கள் புரட்சியின் பின் பல அரச தளங்கள் கைவிடப்பட்ட நிலைக்கு செல்லும் வழி கோலின. புதிய தொழிநுட்ப்ப வருகை பல தொழிற்சாலைகளின் வருகை நவீன கலைபுரட்சிக்கான சிந்தனைகள் வேர்விட தொடங்கின. 1831ம் ஆண்டில் புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹுகோ Victor Hugo 1802 - 1885 எழுதிய "நோட்ர்-டாம் கூனன்" The Hunchback of Notre-Dame என்ற நாவல், இக்கதீட்ரலின் புகழை உலகம் முழுவதும் பேசலாகின. இன்நாவல், கட்டிடத்தின் அழகையும், வரலாற்று முக்கியத்துவத்தையும் போற்றியதுடன், அதன் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான அவசியத்தையும் வலியுறுத்தியது மக்கள் மத்தியில். 1991ம் ஆண்டு உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டது யுனெஸ்கோவால்.
ஹுகோ இன்னவலூடு வெறும் கதையை மட்டும் சொல்ல வில்லை - சிதைந்து போயிருந்த நோட்ர்-டாம் தேவாலயத்தின் அழகை உலகிற்கு உணர்த்தவே இதை எழுதினார். நாவலின் தாக்கத்தினால் தேவாலயம் கம்பீரமாக வரலாற்றின் அழகியல் சிதையாமல் புதுப்பிக்கப்பட்டு இன்றும் மக்கள் பாவனையில்.

this article is finish i have to work out now and the spelling mistakes and photos
காக்கைச் சிறகினிலே சஞ்சிகை
இலக்கிய மாத இதழ் - மே 2019
V.P. வாசுகன்
இலக்கிய மாத இதழ் - மே 2019
V.P. வாசுகன்
- தேவாலயத்தை கிறாத ஓவியர்களே இல்லை என்ற அளவுக்கு பல பிரபல ஓவியர்கள் ஓவியத்தின் மூலமாக ஆவணப்படுத் தியிருக்கின்றனர் .ஓவியர் பிகாசோ மட்டுமே.ஒவ்வொரு காலப் பகுதிகளில்.வெவ்வேறு ஓவியப் பாணியில் வரைந்திருக்கிறார். இங்கே சில குறிப்பிடத்தக்க ஓவியர்களின் ஓவியங்கள் வெவ்வேறு காலப் பகுதிகளில்.
வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள் -
Paintings by well known artists from different periods
References ..
Notre-Dame de Paris : les images de l’incendie - Le Monde