Online (On Live) Exhibition 2020THE TITLE OF MY EXHIBITION IS INSPIRED BY MY TEACHER SAYING “THINK ABOUT PAINTING”.
Two of my exhibitions were cancelled this year, but I will not let this pandemic bring me down or stop me from painting. Difficult times often bring out the best in people. I would like to showcase my work in a new and experimental way of exhibiting. Adapting to a new way of living and connecting to people in a new era. The artwork will be streaming live on FaceBook, featuring around 20 paintings and 5 wood sculptures.
Hope everyone enjoys it and please feel free to leave your comments. Thank you Deux de mes expositions ont été annulées cette année, mais je ne laisserai pas cette pandémie m'abattre ou m'empêcher de peindre. Les moments difficiles font souvent ressortir le meilleur des gens. J'aimerais présenter mon travail d'une manière nouvelle et expérimentale d'exposer. S'adapter à une nouvelle façon de vivre et se connecter aux gens dans une nouvelle ère. L'œuvre sera diffusée en direct sur FaceBook, avec environ 20 peintures et 5 sculptures en bois.
J'espère que tout le monde l'appréciera et n'hésitez pas à laisser vos commentaires. Merci |
press & social media
Interview about the on line exhibiiton by T. Justine - social midea
வரலாறு பண்பாடு பின்புலத்தோடு
ஓவியர் வாசுகன் அவர்களின் இணையத்தள வழியாக ஓவியக் கண்காட்சி முயற்சி.... பாரிசில் வாழ்ந்து வரும் ஓவியர் வாசுகனின் முயற்சி உளச்சிதைவுக்கும் உளவளர்ச்சிக்கும் ஓவியம் எத்துணையாக வழிகொள்ளலாம் என்பதை வரலாறு பண்பாடு பின்புலத்தோடு மூன்று மொழிகளில் உரையாடுகிறார். மைக்கல் ஏஞ்சலோ தொடங்கி வீரசந்தானம் வரையான அவரது விபரிப்புகள் அவரை புரிந்துகொள்ளவும் வழிகொள்கிறது. ஓவியங்களின் குறியீட்டு உள்ளடக்கம், நிறச்சேர்க்கை சிறப்பு...
Vasuhan er en maler, der bor og arbejder i sit eget studie i Paris. han donerede i kunst siden sin barndom. Inspirationen til hans arbejde kommer fra hans lidenskab for naturen og de rejser, som vi finder i hans maleri i form af landskab, figurativ, maskeoverflader og lyrisk abstraktion.
Kærligheden til landet og Vasuhans miljø blev videregivet til ham af sin landmandfarfar.
Vasuhan studerede ved Mahajana College ved Thelipalai og ved Colombo Hindu College på Sri Lanka.
Han afsluttede sine kandidatstudier ved Center for Higher Studies og fulgte tre år på Americanos College på Cypern. Derefter studerede han plastikkunst og kunsthistorie ved Paris 13. Universitetet Han arbejdede også i et keramisk værksted i Paris i to år.
Han åbnede et kunstgalleri og en restaurant "LE SALON INDIEN Paris" (2013 marts 2016 marts) i Paris, hvor mere end 30 kunstnere har udstillet og eller deltaget i forskellige kunstneriske begivenheder. stedet blev hædret af en fremragende anmeldelse af guiden "Le Routard Paris" 2014, 2015 og 2016.
Han deltog også i en gruppeudstilling i 1997 (fransk homeage-kunstner 1900- 1960) med store formater i Mélina Mercuri Hall, Nicosia, Cypern med fem cypriotiske kunstnere og en britisk. begivenheden blev arrangeret af hans kunstlærer Glyn HUGHES (1931-2014), hvoraf han også var assistent.
hans første separatudstilling var i 2004 på BAYADERE, arrangeret af Annick SANSONI. Siden da udstiller han regelmæssigt nye malerier hvert år i Frankrig og i udlandet.
on Facebook , by Sathyadas Thavarasa , 19 June 2020

நேரலை" ஓவியக் கண்காட்சி
"காமதேனு - ஒக்ஸ்" (Kamathenu-Ox) எனும் தலைப்பில் 2006ம் ஆண்டு பரிசில் நிகழ்ந்த வாசுகனின் ஓவியக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். பரிசில் - நவீன ஓவிய புரட்சியில் பங்காற்றிய, முக்கிய ஓவியர்கள் அலைந்து திரிந்த இடங்களில் ஒன்றான "கால்வாய் செந்மார்த்தான்" (Canal st Martin) அருகில் அமைந்திருந்தது அந்த ஓவிய கண்காட்சி அரங்கம் (Bayadère). சூடான வர்ணங்கள் கொண்டு வரையப்பட்ட பெரும்பான்மையான ஓவியங்கள் பல கதைகள் பேசின. சைபிறஸில்(Cyprus) இருந்து அவரின் ஓவிய ஆசிரியர் கிளின் (Glyn HUGHES), இலங்கையில் இருந்து வாசுகனின் தந்தை ஓவிய மாணவர்கள் மற்றும் இலக்கிய கலை ஆவலர்களும் நண்பர்களும் அங்கு வந்திருந்தனர் .
அன்று பார்த்த அதே ஊக்கமும் ஆர்வமும் 10 மே 2020 ல், "முகநூல் - நேரலை" ஓவியக் கண்காட்சியிலும் உணரமுடிந்தது. "Think about Painting" என்ற தலைப்பில் நிகழ்ந்த நேரலை காண்பிய நிகழ்வு ஒரு புதிய பரிச்சாத்த முயற்சியே!. அதில் ஓவியர் வெற்றியும் கண்டுள்ளார். கோவிட் 19 - உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் அபாய முடக்க காலத்தில், நவீன பரிச்சார்த்த முயற்சில் "முகநூல் - நேரலை" ஓவிய காண்பிய நிகழ்வு பாராட்டத்தக்கது. ஓவியர் நேர்த்தியாகதன் ஓவியங்களை நேரலையில் விளக்கியது, சிறப்பாகவும் மேலும் தேடலை ஏற்படுத்தியது. ஓவியங்கள், பயணங்களையும் இயற்கையையும் பாரம்பரியங்களையும் வலிகளையும் நடைமுறையையும் பேசுகின்றன. வாசுகனின் நீண்ட கலைப்பயணத்தில், சமகால ஓவியங்கள் தனக்கான ஒரு அடையாளத்தை பெற்றிருக்கிறது. சென் நதியில் மிதந்துவந்த மரத்துண்டுகளின் தெரிவில் உருவாக்கிய சிற்ப வேலைப்பாடுகள் அவரின் படைப்பின் புதிய பரிமாணம்.
இச் "சமூகவலைத்தள நேரலை" ஓவிய காண்பிய நிகழ்வு மற்றய ஓவியர்களுக்கு ஓர் உந்துதலாக அமையும்.
12.05.2020 Germany. - ரஞ்சினி ராசம்மா

பேசும் வண்ணங்கள்
இங்கே வடிவங்களும், இங்கே வண்ணங்களும், இங்கே எண்ணங்களும் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும், அபூர்வமாகவும், கொட்டிக்கிடக்கின்றது. அவற்றை ஒரு மனிதன் தன் தூரிகைக்குள் அடக்க முட்படுகிறான். அதன் சாத்தியங்கள் இயங்கியல் உலகில் அசாத்தியங்களாகவே இன்னும் நீள்கின்றது. அதற்கு டாவன்சி முதல் வான்கோ வரை விதிவிலக்கல்ல ஆனாலும் தூரிகையை தொட்டவன் தன் ஓவியங்களுக்குள் சொல்லும் கதைகள் சொல்லியடங்கா. அந்த வகையில் ஈழத்து தமிழ் பரப்பில் அறியப்பட்டும், அறியப்படாதவனுமாய் உலக அளவில் ஓவியங்களை காட்சிப்படுத்தும் ஓவியர் திரு வாசுகன் அவர்கள் 10-01-2020 ஞாயிரு அன்று முகநூல் நேரலையூடாக காலையும்10:00- 10:45 மணி வரையும் 17:00 மணி தொடக்கம் 18:00 வரை அவர் ஓவியங்களின் சில தொகுதியை காட்சிப்படுத்தியிருந்தார். அவற்றை பார்க்ககிடைத்தது மன மகிழ்ச்சியே. பிரான்ஸ் நகரில் பல இடங்களில் பல தடவை அவருடைய ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டபோதும். என்னால் சென்று பார்க்கமுடியவில்லை அதன் இழப்பை நேரலையில் பார்வையிட்டபோது என்னால் உணரமுடிந்தது.
வாசுகன் தனது ஓவியங்களுக்கு பயன்படுத்தும், கோடுகள் வண்ணங்கள், ஒளிஅளவு, வடிவம், உருவம், இழையமைவுகளை பார்க்கும் பொழுது நாங்களும் இப்படிவரைந்துவிடலாமே என்று எண்ணத்தோன்றும் இலகுநிலைபோல இருக்கும் நவீன உத்தி ஓவியங்கள் அவருடையது. ஆனால் அது முடியாது. பார்பவர்க்கு அப்படியான தோற்றப்பாட்டை மட்டுமேதரும். அவர் படைப்புத்திறனும் அவர் கருத்தாளுமையும், ஓவியத்தை பார்பவனுக்கு ஓவியத்துக்கூடாக எதை சொல்லவேண்டுமோ அதை எளிமையாகவும் நுணுக்கமாகவும் சொல்லியேதீரும்.
வாசுகனின் ஓவியங்கள் வெறுமனையே காட்சிகளை காண்பிப்பதன்று அது மனிதத்தையும் மனிதவுணர்வுகளையும் பேசுகின்றது. அவர் இயற்கையின்மீது கொண்ட காதலையும், இயற்கையில் கொண்ட நம்பிக்கையை பேசுகின்றது. தன் தாய்மொழி தமிழின் மீது கொண்ட பற்றைபேசுகிறது. தமிழரின் பண்பாட்டைபேசுகிறது, மனித நினைவுகளை அதன் துயரத்தை பேசுகிறது, பெண்ணைபற்றி, ஆணைப்பற்றி, ஆக்கத்தைப்பற்றி, அழிவைப்பற்றியென்று அவர் ஓவியத்தூண்டல்களை குறிப்பிட்டுகொண்டேபோகலாம்.
வாசுகன் வண்ணங்களால் மட்டும் ஓவியம் தீட்டுபவர் அல்ல. அவர் ஒட்டுச்சித்திர பாணியில் மண்ணை, மரத்தை, மஞ்சளை, மிளகாய்தூளை, கல்லையென்று, கிடைப்பவற்றை கலையாக்குகின்றார். தன் கலைக்கும், கவிதையை, திருக்குறளை, தமிழ் எழுத்துக்களை அழகுக்கும் அர்த்தத்திற்கும் பாதீடு செய்யும் உத்தி அற்புதம். தன் ஓவியங்களை சைப்பிரஸ், பிரான்ஸ், யப்பான் என்று பல நாடுகளில் பல் இன மக்கள் பார்வைக்கு வைக்கின்றார்.
அவரை ஓவியராக நான் அறிந்தவரை பதினான்கு வருடங்கள் ஆனால் அவர் அனுபவம் அதற்கு மேலானது. அவர் உழைப்பு எந்த அவளவிற்கு பாராட்டப்படவேண்டியதோ. அவருக்கு துணைநிற்கும் அவர் குடும்பமும் பாராட்டப்பட வேண்டியவர்களே.
வாசுகனின் ஓவியங்கள் தொடர்பாக என்னோடும் வாசுகனோடும் பழக்கமான சில நண்பர்கள் கூறியதாவது, வாசுகனின் ஓவியங்கள் மிகவும் சிக்கல் நிறைந்ததாகவும் புரிந்து கொள்வதற்கு கடினமாகவும் இருக்கிறது அதனாலையே அவர் ஓவியங்கள் பிடிக்காமலே போய்விட்டது. அவ்வாறு கூறியவருக்கு என்னளவில் நான் கூறியது, ஒரு படைப்பின்மீது பார்த்தவுடன் விளங்கவேண்டுமென்ற கட்டாயத்தை நாங்கள் முன் வைத்தால் அது படைபாளனின் படைப்பின் வீரியத்தை குறைத்து விடுவதாகிவிடும். அவர் படைப்பை உணர்ந்துகொள்ளுமளவிற்கு எங்களை வளர்த்து விடுவதே எங்களுக்கும் சிறப்பு அவர் படைப்புக்களுக்கும் சிறப்பு. வாசுகன் ஓவியங்களும் அவர் உழைப்பும் இன்னும் இந்த தமிழ் சமூகத்திற்கு தேவை என்பது மிகையல்ல.
பா.பார்தீ
11-05-2020 Paris.

udal magazine - நேரலை" ஓவியக் கண்காட்சி - ரஞ்சினி 12.05.2020 Germany.பேசும் வண்ணங்கள் - பா.பார்தீ 11-05-2020 Paris.