விரைவு எதிர்வினை குறியீடு - வரை
வரைதல் - ஓவியம் நமது வாழ்வியலை நமது அடையாளத்தை நமது பாடலை, மரபை, அரசியலை, இருத்தலை நமது வரலாற்றை கூறி நிற்கும் தூரிகை - வர்ணம் தோய்ந்த வலுவான ஆயுதம். ஓவிய வரலாற்றின் பாடுபொருட்க்கள், அதீத தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எதிராகவும், விஞ்ஞானத்திற்கு எதிராகவும், சமயம், அரசியல், முதலாளித்துவம், உலகமயமாதல், வணிகமயமாதல் போன்றவற்றிற்க்கு எதிராகவும் போட்டியுடனும் நம் வாழ்வோடும் பின்னிப்பிணைந்து ஆரோக்கியமான வளர்ச்சியை தக்க வைக்கிறது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து, ஆபிரிக்க மண்ணை மையம் கொண்டு, நிலப்பரப்புக்களும், தாவரங்களும், விலங்குகளும், ஹோமோ சேப்பியனும் இத்தருணம்வரை ஒவ்வொரு கணப்பொழுதிலும் நகர்வை கண்ணுக்குத் தெரியாமல் நகர்த்தி கொள்கின்றன. கல்லை எடுத்து கல்லிலே கோடுகள் போட தொடங்கிய மனிதனின் கோடுகள் இன்று வரை நீள்கிறது. மிலேனியம் ஆண்டிலிருந்து இத்தருணம் வரை அதீத தொழில்நுட்ப வளர்ச்சி, கண்ணிமைக்கும் நொடிகளிலும் வேகமாக வளர்கிறது. அவ்வளர்ச்சியின் வேகம் சென்ற இரு தசாப்தங்களாக நமது வரலாற்றை ஒருகணம் பின்னோக்கி பார்க்கவோ, தனி நபர் சுயசரிதையை ஒருகணம் நினைக்கவும் இடம் கொடுக்காமல் கடுகதியாக நாட்களை மாதங்களை ஆண்டுகளை கடத்திற்று. ஓர் ஆண்டுகளாக நிலைகொள்ளும் கோவிட்-19 உள்ளிருப்பு காலம், சடுதியான உறைநிலை, நம் இருத்தலை ஒருகணம் அசைபோடச்சொல்கிறது. இவ்வுள்ளிருப்புக்காலத்தில் தொழில்நுட்பம், அதன் மேல் கொண்டுள்ள மனிதனின் அனுபவம் இன்னொரு புறமாக - "நேரலை வணிகம்" (Online business) புதிய அவதாரம் எடுக்கிறது. "நேரலையில்" (online) சமைத்த உணவுகளை கொள்வனவு செய்தல், அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தல், பல சரக்கு, அலங்கார ஆடம்பரப் பொருட்கள், உடைகள், இணையவழி பாடசாலை வகுப்புகள், இணையவழி தொழில் வாய்ப்புகள், நேர்காணல்கள், புத்தக வெளியீடுகள், பட்டிமன்றம், தைப்பொங்கல், தீபாவளி, திரைப்படம் என நீள்கிறது பட்டியல். ஆழ்கடலில் கண்ணுக்குத் தெரியாத சிறு இறால் கூட்டத்தை விழுங்குவதற்காக திமிங்கிலம் அலகுகளை விரிப்பது போன்று "நேரலை வணிகம்" (Online business) வாயிலை அகல விரிக்கின்றது. "நேரலை வணிகத்தின்" சாதக பாதகங்களுக்கு அப்பால், இம்முடக்க காலத்தில், விரும்பியோ விரும்பாமலோ அவ்வணிகத்தின் உடனான புதிய பழக்கத்தை நாம் அணைத்துக்கொள்கிறோம். நீண்ட ஒரு வரலாற்றை தனதாக்கிக்கொள்ளும் "நுண்கலை" இப்புதிய நேரலை வணிகத்தில் எவ்வாறான ஒரு பாய்ச்சலை கட்டமைக்கிறது - கட்டமைக்கப் போகிறது.
இலங்கை :
கலையில் இலங்கை பல்வேறுபட்ட கலாச்சாரங்களை உள்வாங்கிக்கொண்டு தனக்கென ஒரு நீண்ட கலை வரலாற்றை சமகாலம் வரை பதிவு செய்கிறது. கிழக்கு மேற்கு கப்பல் போக்குவரத்து பாதையின் மத்தியில் இலங்கை அமைந்திருப்பதால், பல்வேறுபட்ட குடிமக்களும், படையெடுப்புகளும், காலனித்துவம், அதனைத் தொடர்ந்து உள்நாட்டு யுத்தங்கள், இந்தக் கிழமை நடந்துகொண்டிருக்கும் "பொத்துவிலில் இருந்து பொலிகண்டி" #P2P மக்கள் எழுச்சி போராட்டம் வரை நீள்கிறது அதன் வரலாறு. யுனெஸ்கோவால் #UNESCO பாதுகாக்கப்படும் மிக நீண்ட "சுதை ஓவிய" #Fresco Painting சிகிரியா பாறைகள் புராதன நகர்ப்புற கட்டுமான அழகியலுக்குரிய சிறப்பு. நீர் வண்ண ஓவியங்கள், மரச்சிற்பம், மரச்செதுக்கு அலங்காரம், மட்பாண்டம், வெண்களி பீங்கான், முகமூடிகள், கட்டடக்கலை போன்றன இலங்கைக்கே உரிய மிக முக்கியமான கலை அடையாளங்கள். ஆற்றுப்படுக்கையை அண்டிய சில பிரதேசங்களில் உலகின் தரமான இரத்தினக்கற்கள் கிடைக்கப்பெறுகின்றன, இவற்றை வாங்குவதற்கு கிரேக்கர்கள் அரேபியர்கள் ரோமர்கள் சீனர்கள் ஆங்கிலேயர்கள் இலங்கைக்கு வந்து செல்கின்றனர். அதனாலேயே இலங்கை "இரத்தின தீபம்" என்ற பெயரை பெற்றது. ஒல்லாந்தர்களின் காலனித்துவத்தில் இந்தோனேசியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பெட்டிக் #Batik ஓவிய முறை உலக சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. இலங்கையின் புராதன நகரங்களான அனுராதபுரம், பொலநறுவை போன்ற இடங்களில் கலை பொக்கிஷங்களும் தொல்பொருள் எச்சங்களும் பாதுகாக்க படாமலும் அழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வரலாறு இருட்டடிக்கப்படுகிறது. இவ்விடங்களை நேரே சென்று தரிசித்தது அங்கு பெற்ற அனுபவங்களும் இலங்கை வாழ்வியலும் எனது ஓவியங்களில் பிற்காலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தின. யாழ்ப்பாணத்தில் பிறந்து இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேற அந்த இருண்ட காலத்தின் பின், பதின்வயது ஆரம்பங்களில் கொழும்பிற்கு இடம்பெயர்ந்து கல்வியைத் தொடர்ந்தேன். மேலும் இலங்கை வாழ்வியல், தொண்ணூறுகளில் இளையவர்களுக்கு வெளிநாட்டு வாழ்வையே வழிகாட்டியது.
சைப்ரஸ் :
கிழக்கு நாகரிகத்தையும் மேற்கு நாகரிகத்தையும் இணைக்கும் சுயஸ் கால்வாய்க்கு அருகாமையிலும், மத்தியதரைக்கடலின் கிழக்கு மத்தியிலும், கனதியான நாகரீகத்தை தனதாக்கிக்கொள்ளும் "சைப்ரஸ்" Cyprus தீவு இலங்கையிலும் சிறியது. சைப்ரஸ் தீவில் "மைசீனிய கிரேக்கர்கள்" #Mycenaean Greeks இரண்டு அலைகளாக குடியேறினர் என அறியப்படுகிறது. கற்கால மனிதர்களின் எச்சங்கள், தொல்பொருள் அருங்காட்சியகங்களில் காணலாம். அகழ்வாராய்ச்சிகள் தொடர்ந்தும் நிகழ்த்தப்படுகின்ற, செப்புப் படிமங்கள் நிறைந்த வறண்ட தீவு - சைப்ரஸ். மிகப்பழமை வாய்ந்த "மொசைக்" Mosaic ஓவியக்கலை இன்றும் பின்பற்றப்படுகிறது. கிரேக்க நுட்ப சுடுமண் சிற்பங்கள் சைப்ரஸ் நாட்டிற்கே உரிய கையெழுத்து. ஐம்பதுகளின் பிற்பகுதியில் நவீன ஓவியம் சில நவீன ஓவியர்களால் நகர்வை ஏற்படுத்தியது. க்கிளீன் கியூஸ் (Glyn Hughes 1931 - 2014 www.facebook.com/glynhughes.paintings )
கிறிஸ்டோபோரோஸ் சவா (Christoforos-Savva 1924 - 1968 www.facebook.com/christoforossavvapaintings)
குறிப்பிடத்தக்கவர்கள்.
மிகச்சிறிய கடலலைகளும், கண்ணாடி போல் தெளிந்த கடல் நீரும், அகோர வெயிலும், வெண்மணல் நிறைந்த நீண்ட கடற்கரைகளும், "சைப்ரஸ் மரங்களில்" தாவும் பறவைகளும், அடுக்கு மாடி - ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் , நடன விடுதிகளும், உல்லாசமான சுதந்திர வாழ்வும், ஆரோக்கியமான கிரேக்க சமைத்த உணவு வகைகளும், சைப்பிரஸ் கிரேக்க மக்களின் உபசரிப்பும், விருந்தோம்பலும் உல்லாசப் பயணிகளை கவர்கிறது. சைப்ரஸ் தீவிற்கு பூநாரைகள் போல் (Cyprus Flamingos) வந்திறங்கும் உல்லாசப் பயணிகளே நாட்டின் பிரதான வருவாய். "ஹோட்டல் முகாமைத்துவம்" கல்விக்காக 1995ல் சைப்ரசிற்க்கு சென்ற காலங்களில், அங்கு பிரபல்யமான நவீன ஓவியரும், ஓவிய விமர்சகருமான க்ளீன் கியூஸ் அறிமுகமானார். அவர் அறிமுகப்படுத்திய ஓவியக்கல்லூரி, ஓவிய நண்பர்கள், கண்காட்சிகள், நாடகங்கள், திரையரங்குகள், ஓவிய சந்திப்புகள், உரையாடல்கள், கலை விமர்சனங்கள், இன்னும் பல புதிய அனுபவங்களை எனக்குள் ஊட்டி வளர்த்தது.
பிரான்ஸ் :
நவீன ஓவியத்தின் மைய வீடாக வரலாற்று ஆசிரியர்கள் வர்ணிக்கும் பிரான்ஸ், கலைஞர்களுக்கான புகலிடம். நவீன ஓவிய புரட்சிக்கு வித்திட்ட பாரிஸ் நகரம், நவீன ஓவிய புரட்சியின் அதிர்வை, ஆற்றலை, இருத்தலை, ஈர்ப்பை, உடைப்பை , ஊக்குவிப்பை 100 ஆண்டுகள் தாண்டியும் புத்துணர்ச்சி தருகிறது. விவசாயத்திலும் உணவிலும் கவனம் கொள்ளும் பிரான்ஸ் நாடு ஐரோப்பாவின் மத்தியில் அமைந்திருப்பதோடு பிரதான மூன்று கடல்களை தொடுவதும் அதன் கால நிலைக்கும் சிறப்பு. ஒவ்வொரு மாநிலங்களும் தனக்கான உணவு பழக்கவழக்கம், உடை, கலாச்சாரம், வாழ்வியல், கலை என தனித்துவமானவை. செல்லுமிடமெங்கும் கலை கூடங்களும் அருங்காட்சியகங்களும் கலை கலாச்சார நிகழ்வுகளும் ஓவியக் காண்பிய நிகழ்வுகளுக்கும் பஞ்சமில்லை. பரிசில் உள்ள Musée du Louvre, Musée d'Orsay, Le Centre Pompidou இந்த மூன்று அருங்காட்சியகங்களுக்கு சென்று வந்தாலே மறுமலர்ச்சி காலம், நவீன ஓவிய புரட்சி காலம், சமகாலம் போன்ற மூன்று காலத்தின் கலை பிரளயத்தின் தடயங்களை அறிந்து கொள்ளலாம். ஓவியம் பல தளங்களைத் தாண்டி சமகாலத்தில் தொழில்நுட்பத்துடன், புதிய கருவிகளுடன் பின்னிப்பிணைந்து பல விந்தைகளை செய்யும் இச்சமகாலத்தை "கலைப்புணர்ச்சி காலம்" என்று குறிப்பிடுவதில் மிகையல்ல. பிரான்ஸ் நாட்டிற்கு 2001 இலைதுளிர் காலத்தில் வந்திறங்கினேன். எனது முதலாவது தனிநபர் ஓவியக் கண்காட்சி 2004 கோடை காலத்தின் ஆரம்பத்தில், திறப்பு விழா அன்று ஆகாயத்தில் வானவில் ஜொலிக்க இனிதே நிகழ்ந்தது. ஓவிய கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அன்னிக் சன்சோனி (Annick SANSONI)ன் உதவியுடன் "No Face No Name" (முகமும் இல்லை பேரும் இல்லை) என்ற தலைப்பில் நிகழ்ந்தது. தொடர் பயணத்தில், இன்றுவரை கசப்பான விமர்சனங்களையும், கால்ப்புணர்ச்சிகளையும் தகர்த்த வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் புதிய ஓவியங்களுடன் ஓவியக் காண்பிய நிகழ்வுகளை நிகழ்த்துவதுவே எனக்கான ஆற்றுப்படுத்தல். இவ்விடத்தில் எனக்கு பலமாகவும், பாலமாகவும் நின்ற ஓவியக்கலை ஆர்வலர்கள், விமர்சகர்கள், ஊடகங்கள், நண்பர்கள், உறவினர்கள் எல்லோருக்கும் நன்றிகள். "உடல்" சஞ்சிகையின் அட்டைப்படமாக எனது ஓவியங்கள் தொடர்ந்து வருவதும் மகிழ்ச்சியே.

நேரலை ஓவிய காண்பியம் :
சென்ற வருடம் 2020ல் பூப்பூக்கும் மாதத்தில் பரீட்சார்த்த முயற்சியாக சமூக வலைத்தளத்தில் நடாத்திய "நேரலை ஓவிய காண்பி நிகழ்வு" (On Line Exhibition) நல்லதொரு வரவேற்பையும் அனுபவத்தையும் தந்தது. (Online Exhibition "think about Painting" Sunday 10.05.2020). அதன் சாராம்சமாகவே இக்கட்டுரை. உள்ளிருப்பு காலம் பரிசில் ஹோட்டல் தொழிலாளர்களுக்கு 2020 மார்ச் 17ல் ஆரம்பித்து ஆகஸ்ட் 26 வரை நீடித்தது, மீண்டும் அக்டோபர் ஆரம்பித்து தற்போது வரை நீடிக்கிறது. கொரோனா கொடும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வைத்தியசாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி செலுத்தும் முகமாக பிரான்சில் மாலை ஏழு மணியிலிருந்து எட்டு மணி வரை அனைவரும் ஜன்னல் வழியாகவும் கதவு வழியாகவும் கைதட்டி ஆரவாரம் செய்து நன்றி தெரிவித்தனர், ஜனாதிபதி "இம்மானுவேல் மக்ரோன்" உட்பட (Emmanuel Macron 1977). இசைக்கலைஞர்கள் தமது இசைக்கருவிகளை மீட்டியும், பாடல்களை பாடுவதன் மூலமாகவும் தமது ஆதரவையும் பகிர்ந்தனர். பொழுதுபோக்குக்காக நடன விடுதிகளில் "இசை வர்ணன்" DJ (Disc Jockey) ஆக பணியாற்றிய அனுபவத்தில், நானும் உலக இசைகளை கலவையாக்கி ஒலிக்கச்செய்து எனது நன்றிகளையும் தெரிவித்தேன். தினமும் இசைக்கும் போது அதனை சமூக வலைத்தள நேரலை ஊடாகவும் பகிர்ந்தேன். அத்தருணத்தில் "நேரலை ஓவிய காண்பிய நிகழ்வை" நடத்தலாம் என்ற யோசனையும் பிறந்தது. உள்ளிருப்பு கால உடைப்பை, தகர்த்தலை, ஓவியக் காண்பிய நிகழ்த்துக்கலையை நிகழ்த்த வேண்டும் என்ற உந்துதலை தந்தது. அதற்கு தகுந்த தளமாக நம்மிடம் இலவசமாக பயனிலுள்ள "சமூக வலைதள நேரலையை " (Social media Live streaming) உபயோகித்தேன். வழமையாக ஓவியக்கண்காட்சியை ஓவியக் கலைக்கூடத்தில் நிகழ்த்தியதன் அனுபவத்தினூடு, நேரில் நேரலையில் (On Live - On Line) நிகழ்த்துவதற்கான ஒத்திகை பார்த்தேன். ஜப்பான், இலங்கை, சைப்ரஸ், ஐரோப்பா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் உள்ள கலை ஆர்வலர்கள் நண்பர்களையும் ஒரே தளத்தில் பார்க்க வைப்பதே நோக்கமாக இருந்தது. காண்பிய நிகழ்த்துக்கலையை நிகழ்த்த இணையத்தினூடாக பெரும் தேடலை நிகழ்த்திய தோடு சில ஓவிய நண்பர்களையும் அணுகினேன். இணைய வழி தேடுதல் வேட்டை பயனளிக்கவில்லை இருப்பினும் இறுதியில் ஒரு நேர்த்தியான நிகழ்வை நடாத்தக்கூடியதாயிற்று.
சென்ற ஆண்டு இறுதி ஆரம்பங்களில் ஓவியக்கலை கூடங்களும், ஓவிய அருங்காட்சியகங்களும் நேரலை காவியங்கள் பலவற்றை நிகழ்த்தினர். அதன் நீட்சியாக சில ஓவிய அருங்காட்சியகங்ளில் "மெய்நிகர் குறுந்திரை" Virtual Reality Headset சாதனங்கள் ஊடாகவும் ஓவியங்களை காண்பிக்கும் தொழில்நுட்பத்தையும் கையாளுகின்றனர். "மெய்நிகர் குறுந்திரை" சில ஆண்டுகளுக்கு முன்பு பாவனைக்கு வந்தபோதும் உள்ளிருப்பு காலத்தில் அதன் மோகம் சிறுவர்கள் மத்தியில் மேலோங்குகிறது. ஒளி உட்புகாத வண்ணம் இருட்டு மூக்கு கண்ணாடி போல் வடிவமைக்கப்பட்டு அதனுள் (3D) முப்பரிமான முறை குறுந்திரையில் காட்சிகள் கனவில் வருவது போல் உணர முடியும். இக்கருவியின் மோகத்தில் சிறுவர்களுக்கான, பெரியவர்களுக்கான, முதியவர்களுக்கான சாகச விளையாட்டுகள் விற்பனையில் உள்ளன. பதின்வயதில் ஆரம்பத்தில் உள்ள வளர்ந்துவரும் ஓவியரான மாணவன் 'ஆதித்யா' விடம் இதுபற்றி வினாவிய போது அதன் புதுமையை உணர முடிந்தது. வீட்டில் தாராள இடவசதியில் இக்கருவியை பயன்படுத்துவது சிறந்தது, இல்லையெனில் நம்மை அறியாமல் சுவர்களில் மோதக் கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளது. "கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல". வீட்டுப் பாவனை கணினியும் சிறந்த ஒலி பெருக்கியும் இருந்தால் மட்டுமே இக்கருவியின் உச்ச பயனை அடைய முடியும் என கூறியிருந்தார். "மெய்நிகர் குறுந்திரை" இன் செலவு அதிகம் ஆதலால் சாதாரண மக்கள் மத்தியில் பாவனைக்கு வரும் என்பது ஐயம் தான்.
மே 2020ல் நடைபெற்ற நேரலை காண்பியத்ததிற்கு ஈழத்து இலக்கிய ஆர்வலர் திரு பத்மநாப ஐயர் லண்டன், "காக்கை சிறகினிலே" சஞ்சிகை திரு முகுந்தன் பாரிஸ், கவிஞ்ஞர் நாவலாசிரியர் திரு அரவிந் அப்பாதுரை பாரிஸ் மூவரின் நேரலை உரையும் வலுச்சேர்த்தது. வெளிநாடுகளில் இருந்து சிலர் கலைப்பொருட்க்களை கொள்வனவு செய்தனர். பலரது ஆதரவும் பின்னூட்டமும் எனது சிந்தனைகளை வியாபித்தது. நேரலையில் தமிழில் அனுப்பியிருந்த இரண்டு பின்னூடங்கள், சமூக கருசனையுள்ள கவிஞ்ஞை ரஞ்சினி ஜெர்மனி, இவரது கவிதைத்தொகுப்பு 2005 வெளிவந்தது. விரைவில் இரண்டாவது ஆயத்தமாகிறது. மற்றயது, "முகடு" சஞ்சிகை ஆசிரியர்களில் ஓவருவரான கவிஞ்ஞர் பா.பார்தீ பாரிஸ், இந்தவருடம் இவரது கவிதைத்தொகுப்பு வெளிவர உள்ளது.
நேரலையில் தமிழில் அனுப்பியிருந்த இரண்டு பின்னூடங்கள் கீழே...

நேரலை" ஓவியக் கண்காட்சி -
ரஞ்சினி 12.05.2020 Germany.
"காமதேனு - ஒக்ஸ்" (Kamathenu-Ox) எனும் தலைப்பில் 2006ம் ஆண்டு பரிசில் நிகழ்ந்த வாசுகனின் ஓவியக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். பரிசில் - நவீன ஓவிய புரட்சியில் பங்காற்றிய, முக்கிய ஓவியர்கள் அலைந்து திரிந்த இடங்களில் ஒன்றான "கால்வாய் செந்மார்த்தான்" (Canal st Martin) அருகில் அமைந்திருந்தது அந்த ஓவிய கண்காட்சி அரங்கம் (Bayadère). சூடான வர்ணங்கள் கொண்டு வரையப்பட்ட பெரும்பான்மையான ஓவியங்கள் பல கதைகள் பேசின. சைபிறஸில்(Cyprus) இருந்து அவரின் ஓவிய ஆசிரியர் கிளின் (Glyn HUGHES), இலங்கையில் இருந்து வாசுகனின் தந்தை ஓவிய மாணவர்கள் மற்றும் இலக்கிய கலை ஆவலர்களும் நண்பர்களும் அங்கு வந்திருந்தனர் .
அன்று பார்த்த அதே ஊக்கமும் ஆர்வமும் 10 மே 2020 ல், "முகநூல் - நேரலை" ஓவியக் கண்காட்சியிலும் உணரமுடிந்தது. "Think about Painting" என்ற தலைப்பில் நிகழ்ந்த நேரலை காண்பிய நிகழ்வு ஒரு புதிய பரிச்சாத்த முயற்சியே!. அதில் ஓவியர் வெற்றியும் கண்டுள்ளார். கோவிட் 19 - உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் அபாய முடக்க காலத்தில், நவீன பரிச்சார்த்த முயற்சில் "முகநூல் - நேரலை" ஓவிய காண்பிய நிகழ்வு பாராட்டத்தக்கது. ஓவியர் நேர்த்தியாகதன் ஓவியங்களை நேரலையில் விளக்கியது, சிறப்பாகவும் மேலும் தேடலை ஏற்படுத்தியது. ஓவியங்கள், பயணங்களையும் இயற்கையையும் பாரம்பரியங்களையும் வலிகளையும் நடைமுறையையும் பேசுகின்றன. வாசுகனின் நீண்ட கலைப்பயணத்தில், சமகால ஓவியங்கள் தனக்கான ஒரு அடையாளத்தை பெற்றிருக்கிறது. சென் நதியில் மிதந்துவந்த மரத்துண்டுகளின் தெரிவில் உருவாக்கிய சிற்ப வேலைப்பாடுகள் அவரின் படைப்பின் புதிய பரிமாணம்.
இச் "சமூகவலைத்தள நேரலை" ஓவிய காண்பிய நிகழ்வு மற்றய ஓவியர்களுக்கு ஓர் உந்துதலாக அமையும்.
12.05.2020 Germany. - ரஞ்சினி ராசம்மா Ranjini Rasamma

பேசும் வண்ணங்கள் -
பா.பார்தீ 11-05-2020 Paris.
இங்கே வடிவங்களும், இங்கே வண்ணங்களும், இங்கே எண்ணங்களும் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும், அபூர்வமாகவும், கொட்டிக்கிடக்கின்றது. அவற்றை ஒரு மனிதன் தன் தூரிகைக்குள் அடக்க முட்படுகிறான். அதன் சாத்தியங்கள் இயங்கியல் உலகில் அசாத்தியங்களாகவே இன்னும் நீள்கின்றது. அதற்கு டாவன்சி முதல் வான்கோ வரை விதிவிலக்கல்ல ஆனாலும் தூரிகையை தொட்டவன் தன் ஓவியங்களுக்குள் சொல்லும் கதைகள் சொல்லியடங்கா. அந்த வகையில் ஈழத்து தமிழ் பரப்பில் அறியப்பட்டும், அறியப்படாதவனுமாய் உலக அளவில் ஓவியங்களை காட்சிப்படுத்தும் ஓவியர் திரு வாசுகன் அவர்கள் 10-01-2020 ஞாயிரு அன்று முகநூல் நேரலையூடாக காலையும்10:00- 10:45 மணி வரையும் 17:00 மணி தொடக்கம் 18:00 வரை அவர் ஓவியங்களின் சில தொகுதியை காட்சிப்படுத்தியிருந்தார். அவற்றை பார்க்ககிடைத்தது மன மகிழ்ச்சியே. பிரான்ஸ் நகரில் பல இடங்களில் பல தடவை அவருடைய ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டபோதும். என்னால் சென்று பார்க்கமுடியவில்லை அதன் இழப்பை நேரலையில் பார்வையிட்டபோது என்னால் உணரமுடிந்தது.
வாசுகன் தனது ஓவியங்களுக்கு பயன்படுத்தும், கோடுகள் வண்ணங்கள், ஒளிஅளவு, வடிவம், உருவம், இழையமைவுகளை பார்க்கும் பொழுது நாங்களும் இப்படிவரைந்துவிடலாமே என்று எண்ணத்தோன்றும் இலகுநிலைபோல இருக்கும் நவீன உத்தி ஓவியங்கள் அவருடையது. ஆனால் அது முடியாது. பார்பவர்க்கு அப்படியான தோற்றப்பாட்டை மட்டுமேதரும். அவர் படைப்புத்திறனும் அவர் கருத்தாளுமையும், ஓவியத்தை பார்பவனுக்கு ஓவியத்துக்கூடாக எதை சொல்லவேண்டுமோ அதை எளிமையாகவும் நுணுக்கமாகவும் சொல்லியேதீரும்.
வாசுகனின் ஓவியங்கள் வெறுமனையே காட்சிகளை காண்பிப்பதன்று அது மனிதத்தையும் மனிதவுணர்வுகளையும் பேசுகின்றது. அவர் இயற்கையின்மீது கொண்ட காதலையும், இயற்கையில் கொண்ட நம்பிக்கையை பேசுகின்றது. தன் தாய்மொழி தமிழின் மீது கொண்ட பற்றைபேசுகிறது. தமிழரின் பண்பாட்டைபேசுகிறது, மனித நினைவுகளை அதன் துயரத்தை பேசுகிறது, பெண்ணைபற்றி, ஆணைப்பற்றி, ஆக்கத்தைப்பற்றி, அழிவைப்பற்றியென்று அவர் ஓவியத்தூண்டல்களை குறிப்பிட்டுகொண்டேபோகலாம்.
வாசுகன் வண்ணங்களால் மட்டும் ஓவியம் தீட்டுபவர் அல்ல. அவர் ஒட்டுச்சித்திர பாணியில் மண்ணை, மரத்தை, மஞ்சளை, மிளகாய்தூளை, கல்லையென்று, கிடைப்பவற்றை கலையாக்குகின்றார். தன் கலைக்கும், கவிதையை, திருக்குறளை, தமிழ் எழுத்துக்களை அழகுக்கும் அர்த்தத்திற்கும் பாதீடு செய்யும் உத்தி அற்புதம். தன் ஓவியங்களை சைப்பிரஸ், பிரான்ஸ், யப்பான் என்று பல நாடுகளில் பல் இன மக்கள் பார்வைக்கு வைக்கின்றார்.
அவரை ஓவியராக நான் அறிந்தவரை பதினான்கு வருடங்கள் ஆனால் அவர் அனுபவம் அதற்கு மேலானது. அவர் உழைப்பு எந்த அவளவிற்கு பாராட்டப்படவேண்டியதோ. அவருக்கு துணைநிற்கும் அவர் குடும்பமும் பாராட்டப்பட வேண்டியவர்களே.
வாசுகனின் ஓவியங்கள் தொடர்பாக என்னோடும் வாசுகனோடும் பழக்கமான சில நண்பர்கள் கூறியதாவது, வாசுகனின் ஓவியங்கள் மிகவும் சிக்கல் நிறைந்ததாகவும் புரிந்து கொள்வதற்கு கடினமாகவும் இருக்கிறது அதனாலையே அவர் ஓவியங்கள் பிடிக்காமலே போய்விட்டது. அவ்வாறு கூறியவருக்கு என்னளவில் நான் கூறியது, ஒரு படைப்பின்மீது பார்த்தவுடன் விளங்கவேண்டுமென்ற கட்டாயத்தை நாங்கள் முன் வைத்தால் அது படைபாளனின் படைப்பின் வீரியத்தை குறைத்து விடுவதாகிவிடும். அவர் படைப்பை உணர்ந்துகொள்ளுமளவிற்கு எங்களை வளர்த்து விடுவதே எங்களுக்கும் சிறப்பு அவர் படைப்புக்களுக்கும் சிறப்பு. வாசுகன் ஓவியங்களும் அவர் உழைப்பும் இன்னும் இந்த தமிழ் சமூகத்திற்கு தேவை என்பது மிகையல்ல.
__________________________
இவர்கள் இருவருக்கும் நன்றிகள்

தொடரும் உள்ளிருப்பு காலம் ஆகையால் வருகின்ற மாதங்களில் மீண்டும் ஒரு ஓவிய நிகழ்வை நடாத்தலாம் என சித்தம் கொள்கிறேன். பிராமிய எழுத்துக்களில் இருந்து இன்று வரையிலான நவீன தமிழ் எழுத்துக்களின் நீரோட்டம் ஆச்சரியம் தருகிறது. ஆதலில் "தமிழ் எழுத்தணிக்கலையுடன்" (Tamil Calligraphy) இயங்க ஆர்வமாயுள்ளேன். சீன எழுத்துக்களிலும் அரேபிய எழுத்துக்களிலும் உள்ளது போன்று தமிழ் எழுத்து அலங்கார ஓவியங்கள் (எழுத்தாணிக்கலை) வரைய எண்ணியுள்ளேன். நேரலையில் நடைபெறவுள்ள ஓவிய "நிகழ்த்துக் கலை" (Live Painting) பற்றிய தொடர்புகளுக்கு இக்கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ள "விரைவு எதிர்வினை குறியீட்டை" (QR code) உங்கள் குறும் திரை கைத்தொலைபேசியில் பிரதி எடுப்பதன் மூலம் நிகழ்த்துக் கலை பற்றிய தகவலை பெற்றுக்கொள்ளலாம். 1997ல் குழு ஓவிய கண்காட்சியில் பங்கு பற்றியதிலிருந்து இன்று வரையிலான காண்பிய நிகழ்வுகளையும், எனது ஓவிய படைப்புகளையும் உங்களது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள எனது இணையதளத்தை வலம்வரவும் www.vasuhan.com. "விரைவு எதிர்வினை குறியீடு" - குறுகிய பல சதுர பெட்டிகள் ஒன்றாக இணைந்து புள்ளி ஓவியம் போல் காட்சியளிக்கும் நவீன தொழில்நுட்பத்திற்கான அணுகுமுறை ஜப்பானியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோன காலத்தில் நவீன நேரலை வணிகத்துடன் தொடர்புடைய இலகுவான சந்தை முறைக்கான குறியீடாக, அடையாளமாக "விரைவு எதிர்வினை குறியீடு" பயனில் உள்ளது. எண்பதுகளில் இருந்து இன்றுவரை புதிய ஆடைகள் வாங்கும் போது உள்ளே பதிந்துள்ள "பட்டை குறியீடு" (Code bar) ஒருபுறம் இயங்க அதன் இன்னொரு வணிக அணுகுமுறை ஆகவே "விரைவு எதிர்வினை குறியீட்டை" அணுகலாம். புள்ளிகளும் கோடுகளும் குறியீடுகளும் அடையாளங்களும் ஓவியங்களும் தொழில்நுட்பத்திற்கான ஆணிவேராக பக்கபலமாக பின்னிப்பிணைகிறது.
ஓவியம் பல தளங்களைத் தாண்டி சமகாலத்தில் தொழில்நுட்பத்துடன், புதிய கருவிகளுடன் பின்னிப்பிணைந்து பல விந்தைகளை செய்யும் இச்சமகாலத்தை "கலைப்புணர்ச்சி காலம்" என்று குறிப்பிடுவதில் மிகையல்ல. கல்லை எடுத்து கல்லிலே புள்ளிகள், கோடுகள் போட தொடங்கிய மனிதனின் கோடுகள் "விரைவு எதிர்வினை குறியீடு " வரை நீள்கிறது.
March 2021
VP வாசுகன்