கண்காட்சியில் காவல்த் தெய்வங்கள்
அபத்தம் - மாதாந்த இணைய சஞ்சிகை July ஆடி 2023 பூங்கோதை - கலா ஸ்ரீரஞ்சன்
வாசிப்புப் போலவே கலைகளுக்கான ஆர்வமும் கற்கை நெறிகளும் மருகி வருகின்ற இக்கால கட்டத்தில் ஓவியங்கள், சிற்பக்கலைகள் சார்ந்து தனது திறமையை வெளிக்காட்டி வரும் வாசுகனின் படைப்புக்கள் வித்தியாசமானவையாகவே தென்படுகின்றன.
சில வருடங்களின் முன் ‘விழிகளுக்கு விருப்பமான சித்திரங்கள்’ என்னும் கட்டுரையில் ஆனி 2019 இல் கனடாவிலிருந்து வெளி வரும் 'தாயகம்' பத்திரிக்கையில் எழுத்தாளர் கலா மோகனும், அதன் பின்னர் ஆடி 2020இல் 'பெயரும் இல்லை முகமும் இல்லை - No Face, No Name’ - Migration and Identity - 'கலம் - யாழ்ப்பாணம்' இணையவெளியில் பண்பாடுகளின் சந்திப்பு - 'என்னைச் சுதந்திரமாக இருக்க விடு' தலைப்பில் கவிஞர் விஜயேந்திரனும் வாசுகனின் ஓவியக் கலை பற்றி பதிவு செய்திருக்கிறார்கள். அவருடைய அண்மைக் கால செயற்பாடுகள் குறித்து நாம் அறிந்து கொள்வது நம்மவர்களின் கலை குறித்த ஆர்வத்தை, அவர்கள் திறமையை வெளிக் கொணர்வது மட்டுமல்ல, புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் தாம் வாழுகின்ற நாட்டினரோடு தம் திறமைகளைப் பகிர்ந்து கொள்வதென்பதும், அந்நாட்டினரும் இவர்களின் திறமைகளை வெளிப்படையாக திறந்த மனதோடு அங்கீகரிப்பதென்பதும் நாம் எல்லோருமே பெருமைப் பட வேண்டியதொன்று.
இங்கு குறிப்பிட்டிருக்கும் இரண்டு கட்டுரைகளின் இணைப்புகள் (links) இக்கட்டுரையின் முடிவில்க் குறிப்பிடப்பட்டுள்ளன.

இனி, வாசகனின் தற்போதைய கள நிலவரத்தைப் பார்ப்போம். ஃபிரான்ஸின் தலை நகரில் கடந்த 01 சித்திரை மாதத்தில் இருந்து எதிர்வரும் 22 ஆடி மாதம் வரை வாசுகனின் ஓவியங்களோடு அவரது சிற்பங்களும் கண்காட்சியில் இடம் பிடித்திருக்கின்றன.
"கோவிட் - உள்ளிருப்புக்காலத்தில் படைப்பாளிகளின் எதிர்வினை" என்ற தலைப்பில் ஃபிரான்ஸ் கலைஞர்கள் உட்பட 25 சர்வதேச ஓவியர்கள், கலைஞர்களின் படைப்புகள் பார்வைக்காக தெரிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் வாசுகனின் படைப்புகளும் அடக்கம்.
இவற்றில் இரண்டு ஓவியங்களும் ஐந்து சிலைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் உள்ள ஓவியங்களில் ஒன்று கோவிட் பெருந்தொற்றின் பின்னர் வீடடைந்து இருந்த காலப்பகுதியின் உணர்வுகளை சித்தரிக்கும் வகையில் Positive - பொசிட்டிவ் எனும் தலைப்பில் அக்கிரிலிக்வர்ணத்தில் + கோப்பித்தூள் + இஞ்சித்தூள் மேலும் ஒட்டுஓவியம் இள நீல வண்ணத்தைப் பின்னனியில் கொண்டிருக்கிறது.
அதோடு தொடர்புடையதாக இன்னொரு ஓவியம் இதே கால கட்டத்தில் மக்களின் மத நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக 'காவல் தெய்வம்' எனும் தலைப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில் பல தேசங்களிலிலிருந்தும் சேகரிக்கப்பட்ட தாவரத்தும்புகள் + மரத்துண்டுகள் + மண்சார் வர்ணத்தூள்கள் மேலும் பொருட்களின் ஒட்டு வடிவத்தைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இவருடைய சிற்பங்கள் எதைக் குறித்து நிற்கின்றன என்று பார்த்தால், இவை 'நெல் வயற் காவல் தெய்வங்களைக்' குறித்து நிற்கின்றன. இது குறித்த வாசுகனின் வாசிப்பும் - மனித நகர்வின் விவசாயம், இந்திய கண்டத்தில் சடங்குகளை முன்னிறுத்தி உருவாக்கப்படும் கலைவடிவங்கள் உ + ம் கோலம் போன்றவற்றை பிரதிபலிக்கின்றன.
பிரான்ஸில் சமகாலத்தில் பிரதான உணவாகியுள்ள அன்னத்தின் எதிர்விளை, அவருடைய சிறுவயதில் பெரும் கமத்தொழில் புரிந்த தாத்தாவுடன் கிராமிய வாழ்வியலில் அவர் பெற்ற அனுபவமும் இச்சிலை வடிப்பின் கருப்பொருளாய் அமைந்திருக்கின்றன. விவசாயம், முக்கியமாக நெல்வயல் சார்ந்த விடயங்களில் மக்களுக்கு இருந்த நம்பிக்கைகள், அவர்கள் வாழ்வியல் சார்ந்த விடயங்களில் பஞ்ச பூதங்களின் தாக்கங்கள் குறித்தே இவர் சிலைகள் முனைப்பாகப் பேசுகின்றன.
உதாரணமாக இலங்கை விவசாயத்தில், நெற்கள் துளிர் தந்து, தம்மை வளர்த்து அறுவடை செய்வதற்கு 120 நாட்கள் எடுப்பதை பிரதிபலிக்கும் முகமாக , வாசுகன் 120 சிலைகள் மூலம் அவற்றை அடையாளப்படுத்தியிருக்கிறார். இவை பஞ்ச பூதங்களை உள்நிறுத்தி வெண் களி மண்ணில், கரி (நெருப்பின் படிமமாக), முட்டைக் கோது, கடல் சிப்பி சோகி, வைக்கல் போன்றவற்றைக் கலந்து பிசைந்து, உருட்டி, சுரண்டி, வரைந்து வடிவமைத்த சிறு சிற்பங்கள் அவை.
ஆங்கிலத்தில் இப்படி தானாகவே காயும் களி மண்ணை Air drying clay என்பார்கள். இங்குள்ள பாடசாலைகளில் கலைகளுக்காக, அதிகமாகப் பயன்படுத்தப்படும் களிமண் வகையைச் சார்ந்தவை. இப்படியாக வடிவமைக்கப்பட்ட 120 சிலைகளில் ஐந்து சிலைகளை மட்டும், கலைஞர்களின் விருப்பு வெறுப்பு எவ்வாறு அமைகின்றது என்பதை அறிவதற்காகவும் அவர்களின் கருத்துக்களை சேகரிப்பதற்காகவும் வாசுகன் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருக்கிறார்.
வரும் காலத்தில் "நெல்வயல் காவல் தெய்வங்கள்" என்ற தலைப்பில் பிரத்தியேகமாக ஓவிய காண்பியம் ஒன்றை ஒழுங்கு படுத்த உள்ளார்.

வாசுகன் யாழ்ப்பாணம் - அளவெட்டி கிராமத்தில் பிறந்து மகாஜன கல்லூரியில் கல்விபயின்று இந்திய இராணுவம் நம் தேசம் விட்டு வெளியேற மீண்டும் போர் தொடங்க தொடர்ந்து கல்வியை கொழும்பு இந்துக்கலூரியிலும். கிரேக்க நாடான சைப்ரஸில் கொடேல் முகாமைத்துவ உயர்கல்வியையும் முடித்தார்.
சைப்ரஸ் தீவில் அறியப்பட்ட வேல்ஸ் நடைச்சேர்ந்த ஓவியர் கிளின் ஹுயூஸ் அவர்களின் கலைக்கூடத்தில் ஓவிய பயிற்சியையும் 1997ல் அவர் ஒழுங்கமைத்த குழு ஓவிய காண்பிய நிகழ்விலும் பங்குபற்றினார். அவரின் வழிகாட்டலில் கைமாக்கிளி தனியார் ஓவிய பள்ளியில் கிரேக்க ஓவிய ஆசிரியர் யண்நீஸ் இடம் ஓவியக்கல்வியையும் பயின்றார்.
அகதியாக 2001 பிரான்ஸில் தஞ்சம்கோரி தொடர் நிராகரிப்புக்கு அப்பால், 2009 வில்தனோஸ் பல்கலைக்கழகத்தில் ஓவிய பயிற்சி - ஆவணப்பட தயாரிப்பு பயிற்சியும். 2015 பாரிஸில் சுடுமண் பிங்கான் பட்டறையில் 2 வருட அனுபவத்தோடு நகர வாழ்வியலில் தேடல் பயிற்சி தொடர் ஓவிய கண்காட்ச்சிகளை பாரிஸ் மேலும் சில நாடுகளிலும் நடத்திவருகிறார்.
இவரது படைப்புகளின் கருப்பொருளாக தேசம் கடந்த பண்பாடு விழுமியங்கள், எம் வாழ்வியலின் அடையாளங்கள், தாவரம், விலங்குகள், விவசாயம், இயற்கை உணவு, தொல்லியல் என்பன விளங்குகின்றன.

இணைப்புக்கள்:
- கட்டுரை எழுத்தாளர் கலா மோகன் - https://www.vasuhan.com/article2019kalamogan
- கட்டுரை கவிஞர் விஜயேந்திரன் - https://www.vasuhan.com/kalam2020
- ஓவியர் கிளின் ஹுயூஸ் பற்றி - https://www.vasuhan.com/glyn-hughes
- வாசுகன் - தமிழ் உயிரெழுத்துடன் முகம் வரைந்த நிகழ்த்துக்கலை காணொலி - https://www.youtube.com/watch?v=rIfJP44GgSQ
அபத்தம்
(Front cover)
மாதாந்த இணைய சஞ்சிகை
கனடா
ஆடி July 2023
பூங்கோதை - கலா ஸ்ரீரஞ்சன்
UK
https://www.thayagam.com/apaththam
https://www.thayagam.com/wp-content/uploads/2023/06/Apaththam-6th-.pdf